Wednesday, January 14, 2009

கவிதாசரண்

நவீனத் தமிழிலக்கிய விவாதப் பரப்பில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் இதழ் 'கவிதாசரண்'.

கவிதாசரண் என்கிற தனிமனிதனின் முயற்சியில் கடந்த 14 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்போதிருக்கும் பல தலித்திய இதழ்களுக்கு முன்னோடி இதழ் இது. 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கவிதாசரண் முதலிதழ் முகிந்தது.

'தமிழில் படைப்பிலக்கிய மாத இதழ்' எனும் முனைப்புடன் கதை, கவிதை, கட்டுரை என முழுக்க இலக்கியம் சார்ந்து மட்டுமே ஓராண்டுகாலம் வெளிவந்து கொண்டிருந்தது.

முதல் இதழ் தொடங்கப்பட்டபோது 44 பக்கங்களில் வெளிவந்தது. தனி இதழ் 3 ரூபாயும், ஆண்டு சந்தா 36 ரூபாயுமாகவும் இருந்தது. 3 ஆவது ஆண்டிலிருந்து படிப்படியாக 60 பக்கம், 80 பக்கம் எனப் பக்கங்கள் கூடிக் கொண்டே சென்றது. சிறிய அளவில் வெளிவந்து கொண்டிருந்த இதழ் (A8 size) 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து (46 ஆவது இதழிலிருந்து) பெரிய அளவில் (A4 size) இரு மாத இதழாக வெளிவரத் தொடங்கியது.

1992ஆம் ஆண்டு நடந்த பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் இலக்கியத்துடன் சமூகவியல் சார்ந்த பிரச்சனைகளையும் மையப்படுத்தி வெளிவரத் தொடங்கியது. தொடர்ந்து இலக்கிய வெளியில் தலித்தியம், பெரியாரியம் சார்ந்து இயக்கங்கொள்ள தொடங்கி இன்றுவரை அந்நிலைப்பாட்டிலிருந்து விலகாமல் வந்து கொண்டிருக்கிறது.

"தமிழில் தலித் இதழ்கள் ஆரம்பிப்பதற்கு முன்பே தலித்தியம் பேசிய ஒரு இதழ் கவிதாசரண். இன்றும் கருத்தியல் அளவில் தலித்தியம் குறித்து அதிகமாக விவாதித்துக் கொண்டிருக்கும் இதழ் இதுதான்" என்கிறார் ஆசிரியர் கவிதாசரண்.

மரபுகளையும், நீதிகளையும் கேள்விக்கு உட்படுத்தி வருகிறது கவிதாசரண்.

அ. மார்க்ஸ், பொ. வேல்சாமி, தொ. பரமசிவம், நா. மகம்மது, ஸ்டாலின் ராஜாங்கம், பாரி செழியன், சுகுணா திவாகர், வளர்மதி போன்றோர் இதழில் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.

விவாதத்திற்குரிய கட்டுரைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. பெ.சு. மணி, தி.க.சி. போன்றவர்கள் தொடர்ந்து விரிவான கடிதங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பிதழை வெளியிட்டு வருகிறது கவிதா சரண்.

விமர்சன ரீதியில் சிலருக்கு அதிர்ச்சியையும் திடுக்கிடுதலையும் கொடுத்த இதழ் கவிதா சரண். இத்தகைய அதிர்ச்சியும் திடுக்கிடுதலும் இன்றும் தொடர்கிறது. எந்த விஷயத்தையும் ஆழமாக விவாதிப்பது, எந்த தனிப்பட்ட மனிதனையும் தாக்காமல் கருத்தியலின் பிரதிநிதியாக விமர்சிப்பது கவிதாசரணின் போக்காக அமைகிறது.

சுந்தர ராமசாமியின் படைப்பை முதன் முதலில் விமர்சித்து வந்த 'ராமசாமியின் சொந்த முகம்' எனும் கட்டுரையும் தலித்தியம், பிராமணியம் தொடர்பாக நடைபெற்ற விவாதங்களும் குறிப்பிடத்தக்கன.

சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்றோர் இவ்விவாதங்களில் கலந்து கொண்டனர்.

"தயவு தாட்சண்யமின்றி அணுகுவதால் நண்பர்கள் கூட முரண்பட்டு பிரிந்திருக்கிறார்கள். சுய விளம்பரத்திற்காக எதையும் செய்வதில்லை" என்கிறார் கவிதாசரண்.

இதழ் தயாரிப்பதில் ஒளியச்சு தொடங்கி விற்பனை வரை கவிதாசரணும் அவரது துணைவியாரும் மட்டுமே பார்த்துக் கொள்கிறார்கள்.

ஆசிரியர் கவிதாசரணைப் பற்றி:

கவிதாசரண், கணித ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தன் ஒரே மகனையும் மூளைக் காய்ச்சல் நோயால் 1980இல் பறிகொடுத்தவர். ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு கவிதாசரணை ஆரம்பித்தார். 'கவிதாமணி' என்கிற பெயரில் 1957லிருந்து 1972 வரை 12 புத்தகங்களை எழுதியிருக்கிறார். நான்கு நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள், 2 இலக்கியத் திறனாய்வு நூல்கள், 1 கவிதைத் தொகுப்பு என 12 நூல்களை 'பிறைமுடி' எனும் தமது சொந்தப் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார்கள்.

'கவிதாமணி' என்பது பட்டப் பெயரைப் போல் இருப்பதால் கவிதாசரண் என்கிற பெயரில் எழுத ஆரம்பித்ததாகக் குறிப்பிடுகிறார்.

1970களில் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் (ஜேக்டி) சென்னை மாநகரத் தலைவராக இருந்திருக்கிறார். அக்கால கட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருடன் பழகும் வாய்ப்புப் பெற்றவர்.

தற்போது 70 வயது ஆனாலும் ஓர் இளைஞனுக்குரிய உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

"பொருளாதார ரீதியாக இதழ் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான உடல் உழைப்பிலும் என் துணைவியார் பங்கு முக்கியமானது. இவர் தான் எனக்கு பக்கபலமாக, உந்துசக்தியாக இருக்கிறார். அதனால்தான் என்னால் இந்த வயது வரை பொருளாதார சிக்கல் இருந்தாலும் பத்திரிகையை தொடர்ந்து நடத்த முடிகிறது" என்கிறார் நெகிழ்ச்சியுடன் கவிதாசரண்.

அவருடன் சிறு நேர்காணல்:

கவிதாசரண் இதழை நடத்துவதற்காக நோக்கம் என்ன?

"சமூகத்தில் பேசப்படாத செய்திகளை விவாதிப்பதற்காகவும், மனிதர்களைச் சிந்திக்க வைப்பதற்காகவும் இவ்விதழை நடத்தி வருகிறேன். சிந்திக்க வேண்டுமெனில் கேள்விகள் வேண்டும். அதனால்தான் கவிதாசரணில் நிறைய கேள்விகள் இடம்பெறுகின்றன.

வேறு வேலை இல்லை என்பதாலும் இவ்விதழைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். பன்மைத்தன்மையில் ஒற்றுமையை வலியுறுத்துவதும் மாற்றுக் கலாச்சாரம் மற்றும் மாற்றுக் குரல்களுக்கு முக்கியத்துவம் தருவதும் கவிதாசரணின் முக்கிய நோக்கமாகும். அத்துடன் சமூகத்துடன் தொடர்ந்து உரையாடுவதற்காகவும் இவ்விதழை நடத்தி வருகிறேன்".

இதழுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

"கவிதாசரண் இதழ் தொடர்ந்து தலித்தியம் பேசினாலும் தலித் இதழ் என தலித் அறிஞர்கள் ஒத்துக்கொள்வதில்லை. தலித் அல்லாதவர்கள் கவிதாசரண் தலித்தியம் பேசுவதாக அவர்களும் ஒத்துக் கொள்வதில்லை. நான் தலித் அல்லாதவன் என்றாலும் சாதியற்ற மனிதனாக வாழ்கிறேன்.

நான் யாருடைய அங்கீகாரத்தையும் எதிர்பார்ப்பதில்லை.

காலத்திற்குத் தேவையான கருத்தியலை முதன்மைப்படுத்தி பதிவு செய்து வருகிறேன். சில அரசியல் பெரும் புள்ளிகளும், பத்திரிகையாளர்களும் கவிதாசரணை தொடர்ந்து படித்துவருகின்றனர்.

இலக்கிய வாசகர்களின் ஆதரவும் இருக்கிறது. சிறு பத்திரிகைகளில் அதிகம் விற்பனையாகும் இதழ் கவிதாசரண்.

சந்தா விவரம்:

தனி இதழ் : ரூ20/-
10 இதழ்கள்: ரூ200/-
25 இதழ்கள் : 500/-
50 இதழ்கள்: ரூ1,000/-
வெளிநாடுகளுக்கு:
தனி இதழ் 2 டாலர்

படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:

கவிதாசரண்
31 டி.கே.எம். நகர்,
சென்னை- 600 019.
தொலைபேசி: 044- 2574 01 99
மின்னஞ்சல்:kavithasran@yahoo.காம்

நன்றி : அந்திமழை

கூட்டாஞ்சோறு

" இயக்கத்தின் நுட்பமும்
இயங்குவதன் விசையும் உழைப்பின்
விரல்களில்தான்.
வடிக்கும் ஆற்றலை
இயக்கும் ஆளுமையை
கூத்தாய் கொண்டாட்டமாய்
பாட்டாய் இசையாய் இலக்கிய வடிவாய்
படைப்போம்.
மக்களுடன்...
மக்களிடமிருந்து...
மக்களுக்காக...
எழுத்தாய் இயக்கமாய் எழுவோம்"

மக்களுக்கான கலை இலக்கியத்தை உயர்த்திப் பிடிக்கும் நோக்குடன் வெளிவந்து கொண்டிருக்கும் 'கூட்டாஞ்சோறு' காலாண்டிதழின் (ஜுலை-செப்.2005) தலையங்கம் இது.

முதல் இதழ் 2004 ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட்டது. முதல் பிரதியை 'மணிக்கொடி' மூத்த எழுத்தாளர் சிட்டி வெளியிட இளைய தலைமுறை எழுத்தாள÷ கவிஞர் ஆசு பெற்றுக்கொண்டார். மூத்த தலைமுறையையும் இளைய தலைமுறையையும் இணைக்கும் நோக்குடன் இவ்வாறு நிகழ்ச்சியை வடிவமைத்ததாகக் குறிப்பிடுகிறார்,இதன் ஆசிரியர் மயிலை பாலு.

இதுவரை ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆசிரியர் குழு: கே.பி. பாலச்சந்தர், சூரியசந்திரன். இரா. குமரகுருபரன், சிவசெந்தில்நாதன், தா. மணிமேகலை.

"தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தென் சென்னை மாவட்டக் குழுவின் முயற்சியில் இவ்விதழ் வெளிவந்தாலும் இது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இதழ் அல்ல. தமிழ்நாடு முழுக்க பொதுத்தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது" என்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு இதழிலும் ஒரு சிறப்புக் கட்டுரை, ஒரு மூத்த படைப்பாளியின் நேர்காணல், தமிழின் முக்கியமான ஓவியர்களின் அட்டைப் பட ஓவியம் முதலியன கூட்டாஞ்சோறின் சிறப்பம்சமாகும்.

கவிதைகளும், சிறுகதைகளும், புத்தக விமர்சனங்களும் வெளியிடப்படுகிண்றன. இருண்மையற்ற எளிமையான படைப்புகளையே வெளியிடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது கூட்டாஞ்சோறு.

முதல் இதழில் அம்பேத்¸¡ர் பற்றிய சிறப்புக் கட்டுரை, இரண்டாம் இதழில் விடுதலைப் போராட்டத்தின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் கட்டுரை வெளியானது.

தொடர்ந்து பெரியாரின் 125ஆம் ஆண்டை முன்னிட்டு பெரியாரின் கருத்துகளின் இன்றைய பொருத்தப்பாடு குறித்து ஒரு கட்டுரை (அக்-டிசம்பர் 2004) இதழில் வெளியானது. பரவலாக பேசப்பட்ட கட்டுரை இது,

மாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவல் நூற்றாண்டையொட்டி 'தாய்' நாவல் குறித்தும் அது தமிழ்ச் சூழலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விரிவான கட்டுரை(ஏப்-ஜூன் 2005) இதழில் வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தன் குறித்த கட்டுரை வெளியானது. அரசாங்கத்தாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கப்படும் அரவாணிகளைப் பற்றியும் அவர்களது கூத்தாண்டவர் கோயில் திருவிழா பற்றியும் விரிவானதொரு கட்டுரை இதே இதழில் வெளியானது.

நவீன தமிழ் இலக்கியச் சூழலில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளைக் குறித்து விவாதிப்பதும் கூட்டாஞ்சோறின் உள்ளீடுகளில் ஒன்றாகும். அவ்வகையில் பெண்மொழி பற்றிய ஒரு கலந்துரையாடலை கூட்டாஞ்சோறு நிகழ்த்தியது.

பத்மாவதி விவேகானந்தன், பா. ¦ƒயப்பிரகாசம், லீனா மணிமேகலை, அரங்க மல்லிகா, அ. வெண்ணிலா, த. மணிமேகலை, மயிலை பாலு உள்ளிட்டோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

தமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்களின் நேர்காணல்களை கூட்டாஞ்சோறு வெளியிட்டு வருகிறது.

வல்லிக்கண்ணன், இன்குலாப், சிற்பி, ஆ.சிவசுப்பிரமணியன், அ. மார்க்ஸ், ஈரோடு தமிழன்பன், தொ. பரமசிவம், ஆஷாபாரதி ஆகியோரின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.

முக்கியமான நவீன ஓவியர்களின் ஓவியங்களை அட்டைப்படமாகத் தாங்கி வந்து கொண்டிருக்கிறது கூட்டாஞ்சோறு.

இதுவரை ஆதிமூலம், விஸ்வம், புகழேந்தி, நெடுஞ்செழியன், வின்சி ஆகியோரின் ஓவியங்கள் அட்டையை அலங்கரித்து வந்திருக்கின்றன. கூட்டாஞ்சோறு சார்பில் கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆசிரியர் மயிலை பாலு பற்றி:

பத்திரிகையாளராகப் பணியாற்றும் மயிலை பாலு ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர்.

'அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்', 'நள்ளிரவில் சுதந்திரம்' (வி.என். ராகவனுடன் இணைந்து, 'வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்', 'சூறாவளி' (சீன நாவல்) ஆகியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நள்ளிரவு சுதந்திரம் நூலுக்குச் சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றிருக்கிறார்.

இனி அவருடன் சில விநாடிகள்....

கூட்டாஞ்சோறின் நோக்கம் என்ன?

"இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பது, முற்போக்குச் சிந்தனையுள்ள மூத்த எழுத்தாளர்களுக்கும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் இடையே சிந்தனை இணைப்பை உருவாக்குவது, சிறு சிறு கருத்து வேறுபாடுகளின் காரணமாகப் பிரிந்திருக்கும் ஒரே சிந்தனை உடையவ÷¸ளை ஒருங்கிணைப்பது, புதிய படைப்பாளர்களிடம் மாற்றுச் சிந்தனையை முன் வைத்து எழுதத் தூண்டுவது, எதார்த்தவாதத்தை நோக்கி இளம் படைப்பாளர்களைத் திருப்புவது ஆகியவை கூட்டாஞ்சோறின் முக்கிய நோக்கங்களாகும்".

கூட்டாஞ்சோறு என்று பெயரிட்டதற்கு ஏதேனும் காரணம் இருக்கின்றதா?

"ஆசிரியர் குழு, நிர்வாகக் குழு என இதழுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் வெவ்வேறு கலைத் துறையில் அனுபவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எல்லோரது அனுபவமும் சேர்ந்துதான் கூட்டாஞ்சோறு ஆகிறது. அத்துடன் கூட்டு முயற்சி தேவை என்பதாலும், அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதாலும் கூட்டாஞ்சோறு என்று பெயரிட்டோம்" என்கிறார், ஆசிரியர் மயிலை பாலு.

கூட்டாஞ்சோறு- இளம் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் நல்ல விருந்தாக வந்து கொண்டிருக்கிறது.

தனி இதழ் ரூ 10/
ஆண்டு சந்தா ரூ 40/

படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:

ஆசிரியர்,
'கூட்டாஞ்சோறு',
3; சி பிளாக், வள்ளீஸ்வரன் தோட்டம்,
ராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை- 600 028.
செல்பேசி: 9444 4140344/ 9444 271479

நன்றி : அந்திமழை

முகம்

தமிழ், தமிழன், தமிழ்நாடு, மனிதநேயம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொன்டு வெளிவருகிறது 'முகம்'.

தமிழ் அறிஞர்களின், சாதனையாளர்களின் புகைப்படத்தை அட்டையில் தாங்கி வெளிவரும் இதழ் 'முகம்'. இதன் ஆசிரியர் மாமணி. முதல் இதழ் 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிவந்தது. ஒரு மாதம் கூடத் தடையின்றி தொடர்ந்து 269 இதழ்கள் வெளிவந்துள்ளன ( ஆகஸ்டு 05 வரை). ஆரம்ப ஓராண்டுகால அட்டையை பாரதியார், புதுமைப்பித்தன், என மறைந்த தமிழ் இலக்கிய அறிஞர்கள் அலங்கரித்தனர். பிறகு நெல்சன் மண்டேலா, நேரு, எம்.எஸ்.சுப்புலட்சுமி எனப் பலரது படங்கள் முகத்தின் அட்டையை அலங்கரித்தது. இப்படி 236 பேருடைய புகைப்படம் அட்டைப்படத்தில் வெளிவந்துள்ளது. அவர்களைப் பற்றிய கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கவிதைகளும், சிறுகதைகளும் உண்டு.

என்.எஸ்.கிருஷ்ணணின் கிந்தனார் காலாட்சேபத்தால் ஈர்க்கப்பட்டு மாமணியும் 'கிந்தனார் பதில்கள்" எனும் கேள்வி - பதில் பகுதியை முகத்தில் எழுதத் தொடங்கினார். எள்ளல் தொனியுடன் எழுதப்படும் இக்கேள்வி பதில்கள் 'முகம்" வாசகர்களிடம் தனிச் சிறப்பு பெற்றவை.
எடுத்துக்காட்டாக இரண்டு கேள்வி - பதில்கள்

கே: கணவன் முன்னால் செல்ல, மனைவி பின்னால் செல்வது நல்லதா? மனைவி முன்னால் செல்ல கணவன் பின்னால் செல்வது நல்லதா?

ப: பின்னால் வரும் மனைவி மேல் நம்பிக்கை உள்ள கணவன், முன்னால் செல்லலாம். பின்னால் வரும் கணவன் மேல் நம்பிக்கை உள்ள மனைவி முன்னால் செல்லலாம். சாலைப்போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருவரும் இணைந்து செல்வது எல்லாவற்றிலுமே நல்லதுங்க.

கே: நீதியை மதிப்பவர்கள் யார்?

ப: நிதியை மதிக்காதவர்கள்.

இப்படி எள்ளலும் குத்தலுமான பதில்கள் மூலம் சிந்தனையைத் தூண்டுபவர் மாமணி. இந்தப் பதில்களை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்குகிறேன். பிறகு முப்பது நாள்களில் நேரங்கிடைக்கும்போதெல்லாம் மெருகேற்றுகிறேன் ' என்கிறார் மாமணி. கேள்வி பதில்களை தொகுத்து 'கிந்தனார் பதில்கள்", கிந்தனார் சிந்தைனைகள்" என இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 200 பேரைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரைகளை மூன்று புத்தகங்களாக வெளியிட்டு இருக்கிறார். எழுத்தாளர்களையும் சாதனையாளர்களையும் வாழும்போதே கவுரவிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் அவர்களுக்கு அவ்வப்போது பாராட்டு விழாவையும் நடத்துகிறார் மாமணி. ஆய்வாளார் ஆ.இரா. வேங்கடாசலபதி 1983 இல் முகத்தினுடைய உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். பெ.கி. பிரபாகரன் போன்ற எழுத்தாளர்கள் முகம் மூலம் அறியப்பட்டவர்கள்.

இதழில் தற்போதைய சிறப்பாசிரியராக முனைவர் இளமாறன் செயல்படுகிறார்.
முகமாமணி ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி) யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் 'உண்மையின் சிறகுகள்'(கவிதை), 'தாயே" (குறுங்காவியம்) பன்மொழிப்புலவர் அப்பாத்துரை, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன், ஜீவாநாரண துரைக்கண்ணன் ஆகியோரது வாழ்க்கை வரலாற்று நூல்களையும், 'யாருக்காக சுமந்தார்', மாமணியின் சிறுகதைகள் 60 ' எனும் இரண்டு சிறுகதை தொகுப்புகளையும் ' மண்டோதரியின் மைந்தன்' எனும் நாடகத்தையும் எழுதியிருக்கிறார். இவர் கொள்கை பிடிப்புள்ளவர். சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் பத்திரிக்கையை நடத்தி வருகிறார். இது போன்ற பத்திரிக்கைகளை தேடிப் படிப்பது ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பெற உதவக் கூடும்.

ஆண்டு சந்தா : ரூ. 60
தனி இதழ்: ரூ. 5
பக்கங்கள்: 32
பத்தாண்டுக் கட்டணம்: ரூ. 500
புரவலர் நன்கொடை: ரூ.1000

தொடர்பு முகவரி:
முகம்
10, 68 ஆம் தெரு,
11-ஆம் பிரிவு,
கலைஞர் நகர்,
சென்னை - 600 078.
தொலைபேசி: 044 - 24802684; 044- 24897995

நன்றி : அந்திமழை

நிழல்

ஐந்து பாடல்கள், நான்கு சண்டைக் காட்சிகள் பறந்து பறந்து அடிக்கும் நாயகன், நாயகனைத் துரத்தித்துரத்திக் காதலிக்கும் நாயகி என வழக்கமான இத்தகைய தமிழ் சினிமாக்களின் நிழல் படாத தமிழ் பத்திரிக்கைகளே இல்லை எனலாம். அத்தகைய ரசனையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நவீன சினிமாவிற்கென 'நிழல்', 'செவ்வகம்', படப்பெட்டி' போன்ற ஒருசில இதழ்களே வெளிவருகின்றன.இவற்றில் முக்கியமானது 'நிழல்'. தரமான சினிமாவையும், கலைப்படங்களையும், குறும்படங்களையும், விவரணப்படங்களையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்குடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. நிழல். இது நவீன சினிமாவிற்கான களம். ஆசிரியர் பா. திருநாவுக்கரசு.

2001ம் ஆண்டு ஜூலை மாதத்தில் முதல் இதழ் வெளிவந்தது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக 22 இதழ் வெளிவந்து திரைப்பட இதழியலுக்கு முக்கிய பங்களிப்பை செய்து வருகிறது. இப்போது (ஜூலை - ஆகஸ்டு 2005) 5 - ஆம் ஆண்டு சிறப்பிதழாக வந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற இயக்குனர்கள், அவர்களது திரைப்படங்கள், சினிமா பற்றிய பயிற்சியும், உலக திரைப்பட வரலாறு மற்றும் இந்திய திரைப்பட வரலாறு என வாசகர்களுக்கு தேவையான தரமான சினிமாவைப் பற்றிய புரிதலைத் தரும் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு இதழிலும் ஒரு சிறந்த படத்தின் கதை வசனத்தை வெளியிடுவது நிழலின் சிறப்பாகும். அத்துடன் ஒவ்வொரு இதழிலும் பத்துக் குறும்படங்கள் பற்றிய விமர்சனம் வெளிவருகிறது. திரைத்துறை சார்ந்தவர்களின் பேட்டிகளும், திரைப்பட தொழில் நுட்பம் குறித்தும், உலக திரைப்பட விழாக்கள் குறித்தும் கட்டுரைகள் வெளிவருகின்றன. நவீன சினிமா குறித்து சிறந்த புலமை உடையவர் பா.திருநாவுக்கரசு. உலக சினிமா பற்றிய இவரது பார்வை விரிவடைய ஆடுகளம் இராமானுஜம் (ஈரான்), யமுனா ராஜேந்திரன் (லண்டன்), பாலு (சென்னை) போன்ற நண்பர்கள் உதவியுள்ளனர். தமிழகத்தில் குறும்படப் பயிற்சி பட்டறைகளையும் கருத்தரங்குகளையும் நடத்துகிறார். வெளிநாட்டில் வாழும் புலம் பெயர்ந்த நண்பர்களின் உதவியுடன் பல்வேறு நாடுகளுக்கு தமிழகக் குறும்படங்களையும் விவரணப்படங்களையும் கொண்டு செல்கிறார். குறும்பட விழாக்களில் பங்கேற்கச் செய்து பரிசுகளையும் பெற்றுத் தருகிறார்.

'பாரீஸ் நண்பர்கள் வட்டம்' ஐரோப்பா முழுக்க, தமிழகக் குறும்படங்களும் விவரணப்படங்களும் திரையிடப்பட்டு, பத்து பேருக்கு எழுபதாயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் இயங்கும் ' நியூஜெர்ஸி தமிழ் சங்கம்' சார்பில் 2003 -ல் குறும்படவிழா நடைப்பெற்றது. இவ்விழாவில் வெற்றி பெற்ற பதினாறு பேருடைய படங்களுக்கு 1,30,000 ரூபாய் எழுத்தாளர் ஜெயக்காந்தன் முன்னிலையில் பரிசளிக்கப்பட்டன. டொரான்டோவில் நடைப்பெற்ற மூன்றாவது 'சர்வதேச குறும்பட விழாவில் செங்கோ மோகனுக்கு அவர் இயக்கிய 'ஈசல்' படத்திற்கு பத்தாயிரம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. சுவிஸ் குறும்பட விழாவிற்கும் தமிழகத்திலிருந்து படங்கள் அனுப்பப்பட்டன.

தொகுப்பாளர், பதிப்பாளர், பத்திரிக்கையாசிரியர், குறும்படப்பிரச்சாரகர், இசை ஆய்வாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் பா.திருநாவுக்கரசு. வீணை தயாரிப்பது பற்றிய குறும்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஜூலை 2005 ல் தொடங்கப்பட்டுள்ள ' தமிழ்நாடு ஆவணப்படம் மற்றும் குறும்படப் படைப்பாளிகள் சங்கத்தின்' ஆலோசகராகவும் செயல்படுகிறார். குறும்படங்கள், ஆவணப்படங்கள் பற்றி 'சொல்லப்படாத சினிமா' எனும் புத்தகத்தை சமீபத்தில் தொகுத்து வெளியிட்டார்.' சோழநாடன்' எனும் புனைபெயரில் இசைக் கலைஞர்கள் பற்றிய புத்தகங்களை எழுதி வருகிறார். இதுவரையில் டி.என்.ராஜரத்தினம்பிள்ளை வரலாறு, கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் வரலாறு, வீணை : அதன் பேர் தனம் போன்ற இசை தொடர்பான புத்தகங்களையும், 'இன்டர்நெட் உலகில் தமிழ் தமிழன் தமிழ்நாடு ' எனும் புத்தகத்தையும் எழுதி இருக்கிறார். அத்துடன் முக்கியமான பல மூன்றாம் உலகநாடுகளின் நாவல்களின் மொழிபெயர்ப்புகளையும் தம் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். இவரது அனைத்து கலை இலக்கியப் பணிகளும் தொடந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

அவரிடம் இரண்டு கேள்விகள்:

* நவீன சினிமாவிற்காக இதழ் தொடங்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

" பன்னீர்செல்வம், நாகர்ஜுனன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடத்தி வந்த சென்னைத் திரைப்பட சங்கத்தில் நான் உறுப்பினராக இருந்தேன். அப்போது உலகப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தரமான சினிமா பற்றிய புரிதல் அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது. அந்த அடித்தளம் தான் இன்னும் நான் செயல்படக் காரணம். 1994 - ல் உலகச் சினிமா நூற்றாண்டு விழா தொடக்கத்தின் போது சென்னை திரைப்படச் சங்கம் செயல்படவில்லை. எனவே 'நிழல்' நடமாடும் திரைப்பட இயக்கம் எனும் அமைப்பை ஆரம்பித்து, கிராமங்களுக்குச் சென்று தரமான வெளிநாட்டுத் திரைப்படங்களை எல்லாம் போட்டுக்காட்டினோம். இன்றுவரை அப்படி செய்கிறோம். 1994 - ல் 'மக்களுக்கான சினிமா' என்கிற புத்தகத்தை வெளியிட்டோம். அதன் தொடர்ச்சியாகத்தான் 'நிழல்' இதழை தொடங்கினோம்."

* தமிழ்க் குறும்படங்களின் போக்கு தற்போது எப்படி இருக்கிறது?

"வருடத்திற்கு நூறு படங்களாவது வருகின்றன. அவற்றில் பத்து படங்கள்தான் தேறுகின்றன. டிஜிட்டல் ஹேண்டி கேமரா வரவாலும் கல்லூரிகளில் தகவல் தொடர்பியல் கல்வி அதிக அளவில் அறிமுகப்படுத்தப்படுவதாலும் இது சாத்தியமாகிறது. 'எல்லோரும் படம் எடுக்க வந்துவிட்டர்கள்' என்றொரு கோஷம் ஒலிக்கத்தொடங்கிவிட்டது. சினிமா மக்களின் கைக்கு வருவதை பொருக்க முடியாதவர்களின் ஓலம் அது. அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் சினிமாவில் நுழைவதற்கான நுழைவுச்சீட்டாகவும் இன்று குறும்படங்களைப் பயன்படுத்துகிறார்கள். இப்போக்கு ஆபத்தானது. எப்படி இருந்தாலும் நல்ல படங்களைக் காலம் தீர்மானிக்கும்".

தமான சினிமா தேடல் உள்ளவர்களுக்கான சிறந்த இதழ் 'நிழல்'.(நவீன சினிமாவுக்கான களம்)

தொடர்பு முகவரி:
31/48 இராணி அண்ணாநகர்,
சென்னை - 600 078.
செல்பேசி : 94444 ௮௪௮௬௮

நன்றி : அந்திமழை

நவீன விருட்சம்

சோறு ஊட்டிய போதெல்லாம்
வேண்டாமென மறுத்தது குழந்தை
எதை காட்டியும் பலனில்லை
எல்லோருக்கும் பயம்
பசிதாங்காது குழந்தையென
வலுக்கட்டாயமாக ஊட்டினார்கள்
அப்படி திணித்த சோற்றை துப்பியது குழந்தை
கோபம், ஆச்சர்யம், பயம் சூழ்ந்து கொண்டதும்
அவர்கள்
என்ன செய்யலாமென யோசித்துக் கொண்டிருந்தபோது
நான் சொன்னேன்
குழந்தையை மண்ணில் விளையாட விடுங்களென்று.
-சேக்கிழார்

படித்ததும் பிடித்துப் போகும் இக்கவிதை நவீன விருட்சம் 66 - 67வது இதழில் வெளியாகியுள்ளது. நவீன இலக்கியதிற்கென்று வெளிவரும் சிற்றிதழ்களில் குறிப்பிடத்தக்கது நவீன விருட்சம் காலாண்டிதழ். 1988ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் தொடங்கப்பட்டது. இவ்விதழை தொடர்ந்து 17 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் அழகிய சிங்கர்; இதன் வெளியீட்டாளர் என்.சுப்பிரமணியன். ஆரம்பகாலத்தில் 16 பக்கத்தில் வெளிவந்தது. அப்போது விலை ரூ.2.50/-. முதல் இதழை நண்பர்கள் கோபிகிருஷ்ணன், ஆர்.சீனிவாசன், எம்.கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு வந்தார். பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக நண்பர்கள் எல்லாம் விலகிவிட அழகிய சிங்கர் மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார். சிற்றிதழை தனியாகத்தான் நடத்த முடியும். நண்பர்கள் சேர்ந்து நடத்துவது நீண்ட நாள் நீடிக்காது என்பது இவர் கருத்து.

“வணிக பத்திரிக்கைகளில் சிறுகதை படைப்பு வெளியிடுவது அருகி வருகின்றது. தரமான கவிதைகளும் அவற்றில் வெளி வருவதில்லை. சிறு பத்திரிக்கைகளில்தான் தரமான படைப்புகள் வெளிவருகின்றன. ஏதேனும் சாதிக்க வேண்டுமென்றால் சிறு பத்திரிக்கைகளின் மூலமாகத்தான் முடியும்” எனச் சொல்கிறார் அழகிய சிங்கர்.

பிரமிள், ஞானக்கூத்தன், இராஜகோபாலன், ஐராவதம் பாவண்ணன், பெருந்தேவி, ரிஷி, கிருஷாங்கினி, கோபிகிருஷ்ணன், எம்.கண்ணன், ஆகியோர் படைப்புகளுக்கு நவீன விருட்சம் களமாக திகழ்கிறது. நவீன விருட்சம் சார்பில் பதிப்பகமும் நடத்தி வருகிறார் அழகிய சிங்கர். விருட்சம் கவிதைகள் தொகுதி1, விருட்சம் கதைகள் தொகுதி1, ஞானக்கூத்தன் கவிதைகள் (முழுதொகுதி), வெங்கட்சாமிநாதனின் ‘உரையாடல்கள்’ போன்றவை இவர் வெளியிட்டுள்ள முக்கியமான நூல்களாகும்.மற்றும் கவிதை தொகுப்புகளும், மொழிபெயர்ப்பு நூல்களும், சிறுகதை தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார்.

‘விருட்சம் இலக்கிய சந்திப்பு’ எனும் பெயரில் ஐந்தாண்டுகள் இலக்கிய கூட்டம் நடத்தி இருக்கிறார். அழகிய சிங்கர் இப்போது இந்தியன் வங்கியில் பந்தநல்லூர் கிளையில் உதவி மேலாளராகப் பணிபுரிகிறார். ‘ யாருடனும் இல்லை’ தொலையாத தூரம்’ எனும் இரண்டு கவிதை தொகுப்புகளையும், ‘சில கதைகள்’ எனும் குறுநாவல் தொகுப்பும் இவரது படைப்புகளாகும்.

பதினேழு வருடங்களாக நடத்தி வருகிறீர்களே சலிப்பு ஏற்படவில்லையா?
“இல்லை. மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. சிற்றிதழ் நடத்துவது அரிப்பு என்று வல்லிக்கண்ணன் சொல்லுவார். எனக்கு அப்படியில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாசகர்களது கடிதங்கள் என்னை ஊக்கப்படுத்துகின்றன. படைப்புகள் வாங்குவது, அதை ஒலியச்சு செய்வது, பிழை திருத்துவது என எல்லாவற்றையும் நானே செய்கிறேன்” என்றார் மகிழ்ச்சி பொங்க. ஒரு சிற்றிதழை இத்தனை வருடங்களாக நடத்தி வருவது உண்மையில் ஒரு சாதனைதான்.

தனி இதழ் : ரூ. 10/- ஆண்டு சந்தா: ரூ: 40/-
படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி:
அழகிய சிங்கர்,
4/1, வள்ளலார் கோவில் கீழ வீதி,
மயிலாடுதுறை - 609001.
தொலைபேசி: 04364 - 221594
செல்: 94441 13205

என்.சுப்ரமணியன்,
7 ராகவன் காலனி,
மேற்கு மாம்பலம்,
சென்னை - 600 033.
தொலைபேசி:044 - ௨௪௭௧0௬௧0

நன்றி : அந்திமழை

கல்வெட்டு பேசுகிறது

ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை சிற்றிதழ்கள்.வணிகப் பார்வைகளைத் தவிர்த்து சமூக நோக்கத்துடன் இயங்குபவை இவை.உலக அளவில் கலை, இலக்கியம்,அறிவியல், அரசியல் எனப் பல தளங்களிலிருந்து சிற்றிதழ்கள் தமிழில் வெளிவருகின்றன.சிற்றிதழ் வாசகர்கள்,தரமான வாசகர்கள் என்று நம்பப்படுகிறது.சில கவனிக்கத்தக்க சிற்றிதழ்களை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். முதல் இதழாக - கல்வெட்டு பேசுகிறது.

'கல்வெட்டு பேசுகிறது' முதலில் கல்வெட்டு என்னும் பெயரில் 1996 செப்டம்பரில் வெளிவந்தது.பிறகு 1997ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளிவரத் துவங்கியது.1999 வரை வெளியான இதழ்களில் தனித் தமிழ், தமிழ்த் தேசியம் பற்றிய கருத்துகளின் தாக்கம் அதிகமாயிருந்தது.

இடையில் பெரும்பான்மையான சிற்றிதழ்களுக்கு ஏற்படும் பொருளாதார சிக்கல் நோய், கல்வெட்டு பேசுகிறது' க்கும் ஏற்பட இதழ் சிறிது காலம் வெளிவராமல் இருந்தது.

2001 அக்டோபரிலிருந்து மீண்டும் புத்துணர்ச்சியுடன் இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது.தனித் தமிழ், தமிழ்த் தேசியம் என்பதிலிருந்து விலகி நவீன இலக்கியம் சார்ந்து வெளிவரும் இவ்விதழை நண்பர்களின் உதவியுடன் நடத்திக் கொண்டிருக்கிறார் ஆசிரியர் சொர்ணபாரதி.

வல்லிக் கண்ணன், பிரபஞ்சன், இன்குலாப், ஜெயகாந்தன், தேவதேவன், விக்ரமாதித்யன், ஜெயமோகன், உள்ளிட்ட தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகளின் படைப்புகலைக் கொண்டு இவ்விதழ் வெளியிட்ட இலக்கிய மலர் 2003 , தமிழ் இலக்கிய உலகில் பெறும் வரவேற்பைப் பெற்றது.

1997, மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் சிறந்த சிற்றிதழுக்கான தமிழ் சிற்றிதழ் சங்க விருதையும்,2003 ல் பண்ணைத் தமிழ்ச் சங்க விருதையும் 'கல்வெட்டு பேசுகிறது' இதழ் பெற்றிருக்கிறது.

'செய்வதைத் துணிந்து செய், சொல்வதைத் தெளிந்து சொல்' எனும் பாரதியின் முழக்கத்தோடு பதினாறு பக்கங்களில் சிறிய அளவில் வெளிவந்தாலும், நவீன இலக்கியத் தளத்தில் கலை ,இலக்கிய, அறிவியல் கருத்துகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதிலும்,விமர்சனங்களை முன்வைப்பதிலும் குறிப்பிட்ட பங்களிப்பைச் செய்து வருகிறது.

இவ்விதழ் ஆசிரியர் கவிஞர் சொர்ணபாரதி 'மனவெளியளவு' எனும் கவிதைத் தொகுப்பை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.இவர் உலகத் தமிழ் சிற்றிதழ் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்.

இதழ் தொடர்பு முகவரி
-----------------------

'கல்வெட்டு பேசுகிறது'
924ஆ, 29 வது தெரு,
பக்தவச்சலம் நகர்,
வியாசர்பாடி,
சென்னை- 600039
தொலைபேசி: 9444106998

நன்றி : அந்திமழை

கலை

"சுகமில்லாமலிருக்கும்
மச்சினனைப் பார்க்க
பிரபலமில்லா
சிற்றூ¦È¡ன்றிற்கு
பயணச் சீட்டு கேட்க
த¨¼யில்லா வசவுகளுடன்
இடையிலேயே இறக்கி விடப்பட்டேன்
இடைநில்லா பேருந்தொன்றிலிருந்து

இறங்கி விட்ட நானும்
கடந்து சென்ற மரங்களும்
நிற்கிறோம்
அறிமுகமில்லா நடுவழியில்

நானில்லா இருக்கையுடன்
பேருந்து நகர்ந்துவிட்ட போதிலும்
என்னோடு தங்கிவிட்டது
விரலிடை கரன்ஸி வித்தை காட்டிய
இரக்கமில்லா
நடத்துனரின் முகம்"

-ஏ.எம். ஜவஹர்
கலை மே 2005 இதழில்.........

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் சார்பில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ் கலை. தோழர் கடலூர் பாலனும் கவிஞர் மணிமுடியும் இணைந்து தொடங்கிய இவ்விதழின் ஆசிரியர், மணிமுடி. முதல் இதழ் 1999 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதைய ஆசிரியர் குழுவில் கடலூர் பாலன், எஸ். பாரதிகணேஷ், கு. கல்யாணசுந்தரம், பூ. பார்த்தசாரதி ஆகியோர் செயல்பட்டனர். தற்போது மணிமுடியுடன் ஒருங்கிணைப்புக் குழுவாக காரைமைந்தன், தளவை ராசேந்திரன், பாவெல் சூரியன், வசந்த் பாரதி ஆகியோர் செயல்படுகின்றனர். இந்த ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் தமிழ்த் தேசியம், தலித்தியம், மார்க்சியம் என கொள்கை சார்ந்தவர்களாக இருப்பது 'கலையின்' நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

முதலாண்டு மாத இதழாக வெளிவந்த கலை, அதன்பிறகு இரு மாத இதழாக வந்து கொண்டிருக்கிறது. இதுவரை (நவ.2005) 35 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆரம்ப காலத்தில் 34 பக்கத்தில் 5 ரூபாயில் வெளிவந்தது. இப்போது 58 பக்கத்தில் 7 ரூபாய் விலையில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழின் முக்கிய ஆளுமைகளான பாரதி, பாரதிதாசன், ஜீவா போன்றோரது கோட்டோவியங்களை அட்டையில் தாங்கி வருவது கலையின் முக்கிய அம்சமாகும்.

கதை, கவிதை, கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு, நூல் விமர்சனம் என வெளியிட்டு வருகிறது கலை.

காசி ஆனந்தன், தணிகைச் செல்வன், வீ. அரசு, பத்மாவதி விவேகானந்தன், விழி பா. இதயவேந்தன், அன்பாதவன் போன்றோர் கலை இதழில் பங்களிப்புச் செய்து வருகின்றனர். புதிய படைப்பாளிகளையும் கலை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

ஈரோடு தமிழன்பன், அ. மார்க்ஸ், இன்குலாப், வல்லிக் கண்ணன், தி.க.சி, கே.ஏ. குணசேகரன் போன்றோரது நேர்காணல்கள் அட்டைப்படத்துடன் வெளியாகியுள்ளன.

இரண்டாயிரத்திலிருந்து ஆண்டுதோறும் சிற்றிதழில் வெளிவரும் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து வருகிறது கலை. கவிதைக்கு பா. முத்துசாமி நினைவுப் பரிசும், சிறுகதைக்கு கவிஞர் கடலூர் பாலன் நினைவுப் பரிசும், கட்டுரைக்கு அறந்தை நாராயணன் நினைவுப் பரிசும் வழங்கி வருகிறது. இது படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் 'கலை'யின் சிறந்த பணியாகும்.

கலை இதழின் சார்பில் சில முக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் மணிமுடி. சப்தர்ஹஸ்மிக்கு ஆதரவாக ஒரு கருத்தரங்கும், பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம், பின் நவீனத்துவம், தமிழியம் குறித்த கருத்தாக்கங்களை மையப்படுத்தி 2003இல் மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றும் நடத்தியிருக்கிறார். இந்த மூன்று நாள் கருத்தரங்கில் எழுத்தாளர் சிவகாமி, அ. மார்க்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்து, கோட்பாடு அடிப்படையில் இயங்கும் சிற்றிதழ்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒன்றை திருச்சியில் நடத்தினார். இக்கூட்டத்தில் 18 சிற்றிதழாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து, இதுவரை கவிதைத் தொகுப்பு வெளியிடாத பெண் கவிஞர்களுக்கான கவிதைப் போட்டி ஒன்றை நடத்தி, 13 பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து 'பெண்பா பேரிகை' எனும் புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.

ஆசிரியர் 'கலை' மணிமுடியைப் பற்றி....

கவிஞர், திறனாய்வாளர், பேச்சாளர், இயக்கச் செயல்பாட்டாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். இலக்கிய வட்டத்தில் கலை மணிமுடி என நேசத்துடன் அழைக்கப்படுபவர். இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். 'உஷாராயிரு' எனும் கவிதைத் தொகுப்பு 1975-இலும் 'கடலோரம்' எனும் கவிதைத் தொகுப்பு 1985-லும் வெளிவந்தன. சிற்றிதழ்ச் சூழலில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

அவரிடம் ஒரு கேள்வி:
கலையின் தொடர் பயணம் குறித்துச் சொல்லுங்கள்?

"தி.க.சி. குறிப்பிடும் சூழலியம், தலித்தியம், பெண்ணியம், தமிழியம், மார்க்சியம் எனும் பஞ்சசீலக் கொள்கையை மையமாக வைத்து கலை இதழ் பயணித்துக் கொண்டிருக்கிறது. கோட்பாடு சார்ந்த சிற்றிதழ்களை ஒருங்கிணைப்பதும் பரிசளித்து படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும் கலை இதழின் முக்கிய நோக்கமாகும்" என்கிறார் மணிமுடி.

தத்துவங்களின் விவாதங்களை அறிந்து கொள்ள பயனுள்ள இதழ், 'கலை'.

தனி இதழ் ரூ": 7

ஆண்டுச் சந்தா : ரூ 50

படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:

கலை
26, பாரதி குறுக்குத் தெரு
செல்லியம்மன் நகர்
அம்பத்தூர்,
சென்னை- 600 058.

செல்: 94440 33589

EmaiL: ambaiappa@yahoo.co.in

நன்றி : அந்திமழை

இனிய ஹைக்கூ

"அணைக்காக இடியுண்ட வீடுகள்
அகதிகளாய் மக்கள்
ஊர்கள் பிணம் சுடுகின்ற காடுகள்"
(ஆரண்யன்- இனிய ஹைக்கூ, இதழ் 18)

இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ்க்கவிதை, காலத்திற்கேற்ப வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் உள்வாங்கி மரபு, நவீனம், ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ எனக் கிளை பரப்பி செழித்து வருகிறது. மரபுக்கவிதைக்கும் நவீனக் கவிதைக்கும் பல சிற்றிதழ்கள் இடமளிக்கின்றன. ஹைக்கூ கவிதைகளுக்கு ஒரு சில பத்திரிகைகளே இடம் கொடுக்கின்றன. இத்தகைய சூழலில் முழுக்க முழுக்க ஹைக்கூ கவிதைகளுக்கென்றே வெளிவந்து கொண்டிருக்கிறது 'இனிய ஹைக்கூ' - இருமாத இதழ்.

தமிழில் புதிய அலையென எழும்பியுள்ள ஹைக்கூ கவிதைகளையும் இளைய ஹைக்கூ கவிஞர்களையும் தமிழ் வாசகப் பரப்பில் அறிமுகம் செய்வதும், ஹைக்கூ கவிதைகள் குறித்த தெளிவையும் புரிதலையும் தருவதுமான நோக்கில் தொடங்கப்பட்ட இவ்விதழ், ஆகஸ்டு 2000 - இல் முதல் இதழ் வெளிவந்தது. இதுவரை 20 இதழ்கள் வெளிவந்துள்ளன. இதன் ஆசிரியர், கவிஞர் மு.முருகே‰, சிறப்பாசிரியர், கவிஞர் கவிமுகில், துணையாசிரியர்கள் : பல்லவி குமார், சோலை இசைக்குயில், குடந்தை ஆர்.எஸ்.நாதன், கா.ந.கல்யாணசுந்தரம், ஆரிசன் ஆகியோர். அத்துடன் 25 மாவட்டப் பொறுப்பாசிரியர்களும் உள்ளனர்.

ஹைக்கூ, நூல்முகம், ஹைக்கூ செய்திகள், மொழிபெயர்ப்பு ஹைக்கூ என வெளியாகி வருகின்றன. பெரும்பாலான ஹைக்கூ கவிஞர்களின் படைப்புகள் இதில் இடம்பெற்று வருகின்றன. 'கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே' எனும் இலக்கிய கொள்கையோடும் சமூகப்பார்வை குறித்த அக்கறையோடும் படைப்புகள் வெளியாகி வருகின்றன. அறிமுகக் கவிஞர்களை அடையாளப்படுத்தி வருவதும் நிலையான வடிவம் ஏதுமின்றி ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு வடிவத்தில் வருவதும் மாவட்டப் பொறுப்பாசிரியர்கள் ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பிதழாகக் கொண்டு வருவதும் இனிÂ ஹைக்கூவின் சிறப்பம்சமாகும். கவிஞர் ஈரோடு தமிழன்பனின் ஹைக்கூ கேள்வி-பதிலும், கவிஞர் நிர்மலா சுரே„¢ன் ஹைக்கூ தொடரும் சிறப்புப் பகுதிகளாகும். இதழின் சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் 'ஹைக்கூ கவிதைத் திருவிழா'க்களை நடத்தி இளைய படைப்பாளிகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்து வருவது குறிப்படத்தக்கது.

"ஹைக்கூ கவிஞர்களை ஒரு இயக்கமாகி, ஹைக்கூ கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்துவதும் தமிழ் ஹைக்கூ கவிதைகளைப் பிறமொழிகளில் அறிமுகம் செய்வதும் எதிர்காலத் திட்டங்கள். புதுப்புது படைப்பாளிகளை நோக்கியும், கல்லூரிக்கவிஞர்களைத் தேடியும் பிற மாநில ஹைக்கூ ஆர்வலர்கள், பிற நாட்டுக் கவிஞர்கள் என இதழ் தனது பயணத்தைத் தொடர்கிறது" என்கிறார், ஆசிரியர் மு.முருகே‰.

ஆசிரியர் பற்றி.....
தற்போது 36 வயதாகும் மு.முருகே‰, இதழ்ப் பணியோடு பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து சமூகப்பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். 'விரல் நுனியில் வானம்' எனும் இவரது முதல் தொகுப்பு 1993 இல் வெளிவந்தது. 2004 இல் வெளிவந்த 'மின்னல் பூக்கும் இரவு' வரை 10 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் நான்கு ஹைக்கூ தொகுப்புகளை நண்பர்களுடன் இணைந்து தொகுத்திருக்கிறார். 'நிலா முத்தம்' எனும் பெயரில் இவரது ஹைக்கூ கவிதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. துணைவியார் கவிஞர் அ.வெண்ணிலா மற்றும் மகளுடன் வந்தவாசியில் வசித்து வருகிறார்.

ஹைக்கூ கவிதைகளுக்கான ஒரு களமாக வெளிவந்து கொண்டிருக்கிறது - 'இனிய ஹைக்கூ'.

சந்தா மற்றும் முகவரி :
தனி இதழ் சந்தா : ரூ. 5.00
10 இதழ் சந்தா : ரூ. 50.00

'இனிய ஹைக்கூ'
எண் : 3, பழைய பள்ளிக் கூட வீதி,
அம்மையப்பட்டு,
வந்தவாசி - 604 408.
தொ.பேசி : 04183 - 226543, செல்பேசி : ௯௪௪௪௩௬0௪௨௧

நன்றி : அந்திமழை

உழைப்பவர் ஆயுதம்

"உழைக்கும் மக்களின் சமூக விடுதலைக்காக கலை இலக்கியப் பண்பாட்டுத் தளங்களில் பணியாற்றும்போது பல்வேறு சமூகக் கொடுமைகளுக்குப் பலியான இலக்கியப் படைப்பாளர்களுக்கு உங்களுடன் உழைப்பவர் ஆயுதம் சார்பில் வீரவணக்கம்.

உங்கள் கைகளில் இருக்கும் உழைப்பவர் ஆயுதம் இதழ் சலவைத் தொழிலாளர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் சமூக விடுதலைக்கான வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கலை இலக்கிய பண்பாட்டுத் தளங்களில் பணியாற்ற உழைப்பவர் ஆயுதம் இதழ் மூலமாக உங்களுடன் கலந்திட வருகிறோம்." என நவம்பர் 2005 இல் புறப்பட்ட இலக்கிய பண்பாட்டு மாத இதழ் 'உழைப்பவர் ஆயுதம்'. ஆசிரியர் த.ம.பிரகா‰ ஆலோசனைக் குழு : சௌ.சுந்தரராசன், பெ.அன்பு, மு.சி.இராதா¸¢ரு‰ணன், அ.மு.முரகராசன். பல வண்ண அழகிய அட்டையுடன் 64 பக்கங்களில் A4 அளவில் வெளிவருகிறது.

கட்டுரைகள், கவிதை, சிறுகதை, நேர்காணல் பதிவுகள், நாடகம், நூல் அறிமுகம், கடிதங்கள் என வெளியாகி வருகின்றன. ஆ.சிவசுப்ரமணியனின் 'பண்பாட்டுப் போராளி நா.வானமாமலை' எனும் முக்கியமான தொடர் வெளியாகி வருகிறது. 'தொடங்கிவிட்டதா மூன்றாம் உலக நாடுகளின் மீதான யுத்தம்' - ந.முத்துமோகன், 'பெரியாரியலும் நாட்டார் தெய்வங்களும்' - தொ.பரமசிவன், 'புதிய ஜனநாயக புரட்சியின் திசை நோக்கி இட ஒதுக்¸£ட்டு உரிமைப் போரை வளர்த்தெடுப்போம்' - அ.பெ.இரவிச்சந்திரன், 'விளக்குத்தூண் போல் மக்கள்' - பா.செயப்பிரகாசம், 'கலாச்சாரக் கொடுங்கோன்மை' - ராஜ்கௌதமன், 'தெபாகா இயக்கம்' - இரா.ப.அண்ணாதுரை, 'தலித் அரங்கம்' - க.பஞ்சாங்கம், 'பின்னைக் காலனியம்' - ந.முத்துமோகன், பல்வேறு சமூகக் குழுக்கள் மீதான உலகமயமாக்களின் தாக்கம் குறித்த கட்டுரை 'உள்ளாடையையும் அவிழ்த்துப்போடு' - அரங்க குணசேகரன், 'சித்த மருத்துவம்' தொடர்பான - ப.உ.லெனின் தொடர் போன்ற முக்கியமான கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

4 ஆம் இதழ் (பிப் 06) பழங்குடியினர் º¢றப்பிதழாக வெளிவந்துள்ளது. இதில் 'பழங்குடிகளின் தொப்புள் கொடிமண்' - ச.பாலமுருகன், 'இருண்டு கிடக்கும் இருளர்கள் வாழ்க்கை' - இரா.முருகப்பன், 'இன்றைய பழங்குடிகளின் நிலை' - பெ.சண்முகம், 'பனான் அல்ஜிரிய வாழ்வும் விடுதலையும்' - சூரிய நாகப்பன், 'தமிழக பழங்குடியினரின் வாழ்வுரிமைப் போர்' - நா.நஞ்சப்பன், 'வனமும் பழங்குடியினரின் வாழ்வுரிமைப் போர்' - நா.நஞ்சப்பன், 'வனமும் பழங்குடிகளும்' - வி.பி.குணசேகரன் எனப் பழங்குடிகளைப் பற்றிய முக்கியமான கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஓவியர் சந்Ðருவின் நேர்காணலும் இதழ் 2இல் வெளியாகியுள்ளது. என்.டி.ராஜ்குமார், சல்மா, இரவீந்தரபாரதி, தி.பரமேஸ்வரி, பழமலய், விழி.பா.இதயவேந்தன், மாலதிமைத்ரி, நிகரகவி, பெ.அன்பு போன்றோரது கவிதைகள் வெளியாகியுள்ளன.

சலவைத் தொழிலாளர்களின் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் வெளிவந்தாலும் இது சமூக விடுதலைக்கான எழுத்துக்களை தாங்கியே வெளிவருகிறது. தமிழின் முக்கிய படைப்பாளிகளுடன் புதியவர்களும் இவ்விதழில் எழுதிவருகின்றனர். இந்த அறக்கட்டளையில் பணியாற்றுபவர்கள் மனித உரிமைகளுக்கான மீட்பு போராட்டங்களில் பங்கெடுத்த பெருமைக்குரியவர்கள்.

"மக்களோடு முØமையாக
இணைந்து கொள்ளாமல்
அறிவு ஜீவியும் கலைஞனும்
போராட்டத்திற்கு வெளியில்
எந்த நிலைப்பாட்டையும்
மேற்கொள்ள முடியாது" - இது போன்ற சேகுவேராவின் சிந்தனைகள் அவ்வப்போது இவ்விதழில் வெளியிடப் படுகின்றன.


ஆசிரியரைப் பற்றி...

தற்போது 55 வயதாகும் த.ம.பிரகா‰ ஒரு சலவைத் தொழிலாளி. பள்ளிப்படிப்பு கூடப் படிக்க இயலாமல் போனவர், இவ்விதழை நடத்துகிறார் என்பது வியப்பளிக்கிறது. அரசியல் கட்டுரைகள் எழுதிவரும் இவர், "இடதுசாரிகளை ஐக்கியப் படுத்துவதே உழைப்பவர் ஆயுதத்தின் குறிக்கோள்" என்கிறார். தமிழ் இலக்கிய இதழியில் வரலாற்றில் முக்கிய நிகழ்வு 'உழைப்பவர் ஆயுதம்'.

சந்தா விவரம் :

தனி இதழ் - ரூ. 15.00
ஓராண்டு சந்தா - ரூ. 130.00
தொடர் சந்தா - ரூ. 1000.00
மாணவர்களுக்கு தனி இதழ் - ரூ. 10.00
ஆண்டுச் சந்தா - ரூ. 100.00

முகவரி :

ஆசிரியர்,
உழைப்பவர் ஆயுதம்,
199, குறிஞ்சி வீதி,
தந்தை பெரியார் நகர்,
திருவண்ணாமலை - 606 601.
தொலை பேசி - 04175 - 251980
செல்பேசி - 9842307821.

தச்சன்

"தோற்றின் சுவடுகள்....
இன்றின் பதிவுகள்....
நாளையின் விடியல்கள்....
வாழ்வுச் சுழற்சியின்
ஓயாத ஓட்டங்கள்
ஓட்டம் முடிவதற்குள்
கடந்துவிடு அதிக தூரம்
ஏனெனில்
கடந்த தூரத்தால் மட்டுமே கணிக்கப்படுகிறது
உனது வாழ்வின் எல்லை"

- சிங்க.சௌந்தர்ராஜன்
('தச்சன்' - மார்ச் - ஏப்ரல் 2006)

மக்களுக்கானவற்றைப் பதிவுசெய்ய வேண்டும் என்கிற இலட்சிய நோக்கில் தொடங்கப்பட்ட சிற்றிதழ், 'தச்சன்' - இருமாத இதழ். முதல் இதழ் 2001, ஜீன் - ஜுலையில் வெளிவந்தது. இதுவரை (மார்ச் - ஏப்ரல் 2006) 15 இதழ்கள் வெளிவந்துள்ளன. முதல் இரண்டு இதழ்கள் நகலில் 8 பக்கத்தில் வந்தது. பிறகு 16 பக்கங்களில் கருப்பு வெள்ளையில் வெளிவந்துகொண்டிருந்த இவ்விதழ், தற்போது 20 பக்கங்களில் வருகிறது. முழு வெள்ளைத் தாளில் நான்கில் ஒரு பங்கு அளவில் மாறுபட்ட வடிவில் இவ்விதழ் வடிவமைக்கப்ட்டிருக்கிறது. இதன் ஆசிரியர், இரா.நாகராஜன்.

இவரது தந்தை ஆச்சாரி வேலை பார்த்து இவரைப் படிக்க வைத்ததால் தந்தையின் உழைப்பை போற்றும் விதமாக 'தச்சன்' என்று இதழுக்குப் பெயர் சூட்டியதாக இவர் சொல்வது நெகிழ்ச்சியான செய்தி. பல்வேறு மரங்களை இணைத்து நல்ல பொருள் செய்வதுபோன்று பல்வேறு படைப்புகளைத் தாங்கி நல்ல சிற்றிதழாகக் கொண்டுவர வேண்டும் என்கிற நோக்கத்தையும் உள்ளடக்கி 'தச்சன்' எனப் பெயரிட்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார், ஆசிரியர். இரா.நாகராஜன்.

தலையங்கம், கவிதை, சிறுகதை, நேர்காணல், நூல் விமர்சனம், கட்டுரை ஆகியவை இவ்விதழில் வெளியாகிவருகின்றன.

குஜராத் கலவரம், ஈராக் பிரச்சினை குறித்த தலையங்கங்கள் குறிப்பிடத்தக்கவை. சிற்றிதழ் ஆசிரியர்கள் எழுதிய 'இதழாளன் அசைபோடுகிறேன்' தொடரும் முக்கியமானதாகும். இலக்கியக் கூட்டங்கள் பற்றிய செய்தித்தொகுப்பு 'அரங்கிலிருந்து' எனும் பகுதியில் வெளியாகிவருகிறது. ஆதிகம் அறியப்படாத, காத்திரமான படைப்பாளிகளின் நேர்காணல்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன. அவ்வகையில், புதிய மாதவி, தமிழ்மொழி ஆகியோரது நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.

பாப்லோ அறிவுக்குயில், கீரனூர் ஜாகீர்ராஜா, வே.சபாநாயகம் உள்ளிட்§¼¡ரது சிறுகதைகளும், விக்ரமாதித்யன், மு.முருகே‰, இலக்குமி குமரன் ஞாலிதிரவியம், பாலபாரதி, சிங்க.சௌந்தர்ராஜன் உள்ளிட்டோரது கவிதைகளும் வெளியாகியுள்ளன. 'திருவையாறு பாரதி இயக்கம்' வெள்ளிவிழா ஆண்டு சிறப்புமலர் ஒன்றையும் 'தச்சன்' வெளியிட்டிருக்கிறது. இவ்வியக்கம் பற்றிய செய்திகளும் பாரதிபடைப்புகளும் அறிவுமதி கவிதையும் இம்மலரில் வெளியாகியுள்ளன. 'தச்சன்' பதிப்பகம் சார்பில் 'காற்றுபுகா வனம்', 'இளமகளின் மௌனங்கள்' எனும் இரண்டு கவிதைத்தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

"இதயம் பேசுகிறது இதழில் வெளியான 'சிற்றிதழ் அறிமுகம்' பகுதிதான் எனக்குச் சிற்றிதழ் உலகை அறிமுகப்படுத்தியது. நம் பகுதி வாசகர்களின், படைப்பாளிகளின் படைப்புகள் வெளியிடுவதற்கு ஓர் இதழைத் தொடங்க வேண்டும் என்கிற எண்ணத்தால் 600 ரூபாய் சம்பளத்திற்கு விற்பனைப்பிரதிநிதியாகப் பணியாற்றிய போது 'தச்சன்' இதழைத் தொடங்கினேன்" என்கிறார், இரா.நாகராஜன்.

ஆசிரியர் பற்றி....

முப்பதே வயதான இளைஞர் இரா.நாகராஜன் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கவிஞர், பத்திரிகையாளர், சமூகச்சிந்தனையாளர், பதிப்பாளர் எனப் பன்முகந்தன்மை கொண்டவர். 'சங்கமம்' இணைய இதழின் ஆசிரியர் குழவில் இணைந்து பணியாற்றியவர். சிற்றிதழ்களுடன் தொடர்புடைவர்.

சந்தா மற்றும் முகவரி :
ஆண்டு நன்கொடை - ரூ. 30.00
இரண்டாண்டுக்கு - ரூ. 50.00
மூன்றாண்டுக்கு - ரூ. 75.00
வாழ்நாள் - ரூ. 300.00

முகவரி :
இரா.நாகராஜன்,
தெ‰ண பாஸ்கரன், (ஸ்ரீ நாச்சி ஸ்டோர்ஸ்),
70/24, செல்வம் பாரடைஸ், அகஸ்தியர் தெரு,
சிவானந்த குருகுலம் எதிரில்,
தாம்பரம் கிழக்கு, சென்னை - 600 059.
பேச : 98405 16052.
மின்னஞ்சல் : nagarajan_tyr@yahoo.co.இன்

நன்றி: அந்திமழை

மண் மொழி

தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சியில் உட்கட்சி சனநாயகம், கருத்துச் சுதந்திரம் இல்லை, மாற்றுக்¸ருத்துக்கள் ஒடுக்கப்படுகிýறன என்று சொல்லி அக்கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் இராஜேந்திரசோழனை அமைப்பாளராகக் கொண்டு 'தமிழ்த்தேச மார்க்சியக் கட்சி' என்கிற புதிய அமைப்பைத் தோற்றுவித்துள்ளனர். மார்க்சிய வழியில் தமிழ்த்தேச தன்னுரிமைக்குப் போராடுவதையே நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பு 'மண், மொழி' என்கிற மாத இதழைத் தொடங்கியிருக்கிறது. முதல் இதழ் ஜனவரி - பிப் 06இல் வெளிவந்துள்ளது. ஆசிரியர், இராஜேந்திர சோழன். ஆசிரியர் குழு : காஞ்சி அமுதன், சக்தி சுப்பு, பொன் மாயவன் ஆகியோர்.

"இன்று தமிழ், தமிழக நலன் சார்ந்து குரல் கொடுக்க º¢ற்சில அமைப்புகள், கட்சிகள் இருக்கின்றன. இக்குரல்கள் அவ்வப்போது நிலவும் சூழலுக் கேற்ப எழுந்தும் தணிந்தும், வீறுபெற்றும், நீர்த்தும் ஏற்ற இரக்கங்களோடே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வமைப்புகள் அனைத்திலும் உள்ள உணர்வாளர்களை ஒன்றிணைக்கவும் உடனடியாக வென்றெடுக்கும் சாத்தியமுள்ள கோரிக்கைகளை முன்வைத்து விடாப்பிடியாகவும் தொடர்சியாகவும் அதற்காக - போராடவுமான நிலைத்த ஒர் இயக்கத்தை உருவாக்க முடியாதா என்னும் அவாவில் அதற்கான ஒரு ஒருங்கிணைப்பாளனாகச் செயல்படமுடியாதா எனும் முயற்சியில் தோற்றம் பெறுவதே இந்த இதழ்" என இதழ் தோற்றத்துக்கான காரணத்தை விளக்குகிறது முதல் இதழ் தலையங்கம்.

இதில் காத்திரமான கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றன. இராசேந்திர சோழனின், 'மண் உரிமைகாக்க மலைவாழ் பழங்குடி மக்கள் போர்', கணியனின், 'கட்சத்தீவு பிரச்சினை கோர வேண்டியது குத்தகையல்ல, பெற வேண்டியது மொத்தத் தீவையும்', சாங்கியனின், 'பீகார் : மாறும் அதிகாரம் மாறாத வன்முறை', பரிமுதல்வனின், 'தனியார் கல்வி நிறுவன இட ஒதுக்கீடு திருத்தச் சட்டம்', காஞ்சி அமுதனின், 'பாலாற்றைப் பாதுகாப்போம்' போன்ற முக்கியமான கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன.

"இன்று தமிழகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளாக மண் பிரச்சனை, ஆற்று நீர் பிரச்சினை, இயற்கைக்கனி வளங்கள் பற்றிய பிரச்சனை, மொழிப்பிரச்சனை, கலை, பண்பாட்டுப் பிரச்சனை என எவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்காக பல்வேறு சக்திகள் குரல் கொடுத்தும் வருகின்றன. இச்சக்திகளை அடையாளம் காண்பதும் இவற்றை ஒன்றுக் கொன்று தொடர்பு படுத்துவதும் முடிந்த அளவில் இவற்றிற்கிடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதும் இவற்றை ஒர் அணியில் திரட்ட முயல்வதுமே இதழின் நோக்கம்" என்கிறார், ஆசிரியர் முதல் இதழ் தலையங்கத்தில்.

சந்தா :
ஆண்டுக்கட்டணம் - ரூ.70.00
தனி இதழ் - ரூ. 5.00
மூன்றாண்டுக்கட்டணம் - ரூ.200.00
வாழ்நாள் கட்டணம் - ரூ. 1000.00

முகவரி :
மண் மொழி (மாத இதழ்),
காந்தி நகர், மயிலம் - 604 304,
திண்டிவன வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.
தொலைபேசி : 04147 - 241256
செல் : 9443212761
நன்றி : அந்திமழை

தை

"தமிழ் எங்கள் இளமைக்குப் பால் என்றான் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன். அந்தத் தமிழ்ப் பால் பொங்கத் தொடங்குகிறது தை.... எல்லா ஒடுக்கு முறைகளையும் மூடுதிரைகளையும் கடந்து ஒடுக்கப்பட்ட சாதியின் குரலும் ஒடுக்கப்பட்ட பெண்ணியக் குரலும் இன்றைய கவிதையின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது. மார்க்சியம், பெரியாரியம், தலித்தினம், பெண்ணியம், சூழலியம், தமிழ்த் தேசியம் சார்ந்து எழும் இன்றைய காலத்தின் குரலைப் பதிவு செய்வதற்காகவே வருகிறது தை. தமிழில் தனித்த அடையாளங்களோடு எழுத வருகிற கவிஞர்களை உலகத் தமிழர்களுக்கெல்லாம் தை அறிமுகப்படுத்தும். மறைக்கப்படும் இலக்கிய வரலாற்றை நேர்ப்படுத்தும் இலக்கிய நேர்மையோடு ஒரு முழுமையான கவிதை இதழாகத் தொடரும்... புதிதாக எழுத வருகிறவர்களுக்கும் புரிதலோடு எழுதுகிறவர்களுக்கும் இடையில் ஒரு தமிழ்ப்பாலமாய் தை இருக்கும். வாருங்கள் கை கோர்த்து நடப்போம்". என்கிற அறைகூவலுடன் ஜனவரி 2006இல் வெளிவந்திருக்கிறது 'தை' - கவிதைக் காலாண்டிதழ். இதன் ஆசிரியர், கவிஞர் அறிவுமதி. இளம் கவிஞர்கள், மூத்த கவிஞர்கள், திரைப்பட கவிஞர்கள், வெளிநாட்டு கவிஞர்கள் என அனைத்து தரப்பினரின் கவிதைகளையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. கபிலன், கோசின்ரா, இந்திரன், அறிவுமதி, அழகியபெரியவன், மீனாட்சி, அழகுநிலா, மு.மேத்தா, அப்துல் ரகுமான், சிற்பி, பச்சியப்பன், தமிழச்சி, இளம்பிறை, இன்குலாப், வே.ராமசாமி, பாரிகபிலன் உள்ளிட்ட தமிழ்நாட்டுக் கவிஞர்கள் பலரது கவிதைகளும் வெளிநாட்டுத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளும் நாடு வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.

மலேசியக் கவிஞர்கள் பா.இராமு, அருண், பூங்குழலி வீரன், சிங்கப்பூர் கவிஞர்கள் பிச்சினிக்காடு இளங்கோ க.து.மு.இக்பால், இளங்கோவன், கடைக்கவிஞர்கள் ஜி.பி.இராசரத்தினம், ஜம்பண்ணா, அமரச்சிந்தா, ஈழத்துக் கவிஞர்கள் சித்தாந்தன், சு.வில்வரத்தினம், நளாயினி தாம¨Ãச்செல்வன், கருணாகரன், செல்வம், துபாய் கவிஞர்கள் கவிமதி, இசாக் என உலகத் தமிழ்க கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கி தை வெளிவந்திருக்கிறது. ஒரு சில மொழிபெயர்ப்புக் கவிதைகளும் வெளிவந்துள்ளன. வழ வழ தாளில் அழகிய கருப்பு வெள்ளை படங்களுடன் கவிஞர்களின் புகைப்படத்துடனும் குறிப்புகளுடனும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது 'தை'யின் சிறப்பம்சமாகும் எனலாம்.

நன்கொடை - ரூ.20.00.

முகவரி :
அறிவுமதி,
189 அபிபுல்லா சாலை,
தியாகராய நகர், சென்னை - 17.
போன் - ௯௪௪௪௨௮0௮௬௪

நன்றி : அந்திமழை

ஆயுத எழுத்து

"தமிழர்களின் லட்சியம் திரைப்பட நடிகர்களை முதல்வராக்குவது. மொத்தத்தில் தமிழனென்றால் சொரணையற்றவன் என திட்டமிட்டு பத்திரிகைகள் மாற்றிவரும் இச்சூழலில் அதிலிருந்து தமிழர்களையும் தமிழர்களின் வாழ்வையும் தழைக்கச் செய்யும் சிறு முயற்சியாகவே உங்கள் கைகளில் ஆயுதஎழுத்து தவழ்கிறது" என்கிற அறிமுகத்துடன் 'ஆயுதஎழுத்து' நவம்பர் 2005 முதல் இருமாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுவரை ஜன (06) மூன்று இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆசிரியர் பா.ஜோதிநரசிம்மன் இணை ஆசிரியர் கோ.பாபு, பொறுப்பாசிரியர் குமார் எடைக்கல், ஆசிரியர் குழு, எழில், இÇங்கோ, இரா.கருணாநிதி, சாத்தனூர் அ.ராசன், கோ.கணேசன்.

சிறுகதை, கவிதை, நூல் அறிமுகம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, சர்ச்சை, விழுப்புரம் மாவட்ட தொன்னைச் சிறப்புகள் போன்ற பகுதிகள் வெளியாகி வருகின்றன. படைப்பிலக்கியத்துடன் அரசியல் கட்டுரைகளும் வெளியாகி வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியல் இதழின் மையச்சரடாக இருக்கிறது. தமிழ் மொழக்கும் தமிழ் இனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது. சிறந்த கவிதைகளும் கட்டுரைகளும் புத்தகங்களிலிருந்து மறுபிரசுரம் செய்யப்படுகின்றன. த.பழமலய், பா.ஜோதிநரசிம்மன், இளையநந்தன், ஜெயபாஸ்கரன், சீ.விக்கரமன், கோ.கிரு‰ணமூர்த்தி, தடா.நல்லரசன், எ.மு.இராதா, குமார் எடைக்கல், அசாருதீன், செஞ்சி தமிழினியன், பனிமலர், எழில் இளங்கோ, ச.பொன்னியின் செல்வன், பொன்.குமார், தங்க ரமே‰, லலித்குமார், க.பனசை சுரங்கன் போன்றோÃது ஆக்கங்கள் இடம் பெற்று வருகின்றன.
தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து குஷ்பு தெரிவித்த கருத்தும் அதற்கு ஆதரவாக எழுந்த குரல்களுக்கு மறுப்பாகவும் 'கற்பு கருத்துரிமை பெண்ணுரிமை' குறித்த விவாதங்களடங்கிய சிறப்பிதழ் ஒன்றையும் ஆயுதஎழுத்து வெளியிட்டுள்ளது. இரா.முருகப்பன், அ.ராசன், சுபா போன்றோரது கட்டுரைகள் இச்சிறப்பிதழில் இடம் பெற்றுள்ளன. மூன்றாவது இதழ் (ஜன-06) பொங்கல் சிறப்பிதழாக வெளிவந்தது.

'தமிழர்கள் யாரும் இந்துக்கள் அல்ல', 'தமிழ்த் தேசியப் போரில் ஆதித்தனார்' போன்ற கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. பெரியாரின் பட்த்தையும் 'கொலை வாளினை எடடா மிகக் கொடியோர் செயல் அறவே' எனும் பாரதிதாசனின் வரியையும் ஆயுதஎழுத்து அட்டைப்பட முகப்பில் தாங்கி வருகிறது.

"இளம் கவிஞர்களை ஊக்கப் படுத்துவதற்காகவும், தமிழ்த் தேசிய அரசியலைப் பரவலாக்குவதற்காகவும் இவ்விதழைத் தொடங்கினோம்" என்கிறார், ஆசிரியர் பா.ஜோதிநரசிம்மன். இவர் பழநெடுமாறனின் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கத்தின் விழுப்புரம் மாவட்ட துணைத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். சிறுகதைகளையும் எழுதி வருகிறார். இவருடன் சேர்ந்து இவ்விதழை நடத்திவரும் நண்பர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களனைவரும் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடும் நம்பிக்கையும் உடையவர்கள். இவ்விதழும் அதை நோக்கிய பயணப்பட்டு வருகிறது.

தொடர்பு முகவரி :

பா. ஜோதிநரசிம்மன்
92, டாக்டர் இராதாகிரு‰ணன் வீதி,
வி.ஜி.பி. நகர் கிழக்கு,
சாலாமேடு, விழுப்புரம் - 605 401.
பேச : ௯௮௯௪௫௬௧௧௫௪

நன்றி : அந்திமழை

சமரசம்

கலை இலக்கியத் தளத்தில் பல சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருப்பது போலவே மதம் - மார்க்கம் சார்ந்தும் பல சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இஸ்லாம் மதத்தைச் சார்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் இதழ் சமரசம். இரு மாத இதழ். 1948 இல் தொடங்கப்பட்ட ஜமா அத்தே இஸ்லாமியஹிந்த் எனும் அகில இந்திய இஸ்லாமிய அமைப்பின் இதழ் சமரசம். இவ்விதழின் நிறுவன ஆசிரியர், எம்.ஏ.ஜமீல் அஹ்மத். ஆசிரியர், ஹெச்.அப்துர்ரகீம், பொறுப்பாசிரியர் சிராஜுல்ஹசன், துணை ஆசிரியர், டி. அஜுஸ்லுத்புல்லாஹ். இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் இவ்விதழ். 1980 ஆம் ஆண்டு ஜுன் 16 முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இப்போது 26 வது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

முக்கியமாக இஸ்லாமிய வாசகர்களையும், படைப்பாளிகளையும் முன்னிலைப்படுத்தி இதழ் நடத்தப்பட்டாலும் இஸ்லாமியர் அல்லாதவர்களும் இதன் வாசகர்களாகவும் எழுத்தாளர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இஸ்லாமிய இதழ்கள் எல்லாம் உருதுச் சொற்களையும் அரபிச் சொற்களையும் கலந்து இஸ்லாமியர்களுக்கு மட்டுமே புரியும் படியான மொழியில் வெளிவந்து கொண்டிருந்தபோது எல்லாருக்கும் புரியும் படியான எளிய தமிழில் சமரசம் வெளிவரத் தொடங்¸¢யது. அதன் பிறகு தான் மற்ற இஸ்லாமிய இதழ்கள் எல்லாம் எளிய தமிழில் வெளிவர ஆரம்பித்தன என்கிறார் இதன் பொறுப்பாசிரியர், சிராஜுல்ஹசன்

சிறுகதை, கவிதை, நேர்காணல், தொடர், கேள்விபதில், நாட்டுநடப்பு, முகப்புக் கட்டுரை, தேசம், சர்வதேசப்பிரச்º¢னைகள், பெண்ணுலம், ஆளுமை, சிறுவர் அரங்கம், மருத்துவம் ஆய்வு, தனித்துவமான தலையங்கம், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், புத்தக அறிமுகம், கடைசி பக்கம், போன்ற பகுதிகள் இவ்விதழில் வெளியாகி வருகின்றன.

அருந்ததிராய், பி. சாய்சாத், குல்தீப்நய்யார், கு‰வந்த்சிங், சாமிநாதன், எஸ். ஐயர், கல்பனாசர்மா, சசிதரூர், போன்றோரது கட்டுரைகள் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. நவீன ஏகாத்திபத்தியத்தை நடுங்க வைக்கும் திட்டங்கள், கணவன் மனைவியின் உளவியல் தேவைகள், திரைப்பட பாடல்களும் பாலியல் சீண்டல்களும், தண்ணீர் தரும் செய்தி, இந்தியா ஒளிர்கிறது, எருமை தேசம் §À¡ன்றபல முக்கியமான கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.

சாலை இளந்திரையன், பிரபஞ்சன், பேரா.அ.மாக்ஸ், பேரா.பொன்னுசாமி, க.திருநாவுக்கரசு, சௌந்தரா கைலாசம், ஸ்பிக் இரவீந்தரன், பிர்தௌஸ் இராஜகுமாரன், சிராஜுல்ஹசன், இக்மான் அமீர், தாழை மதியவன், அஜுஸ்லுத்ஃபுல்லாஹ் போன்றோரின் படைப்பாக்கங்கள் இவ்விதழில் இடம் பெற்று வருகின்றன.

நவீன எழுத்தாளர்கள், வெகுசன எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கவிஞர்கள், சமூகவியலாளர்கள் போன்றோரின் நேர்காணல்கள் இடம் பெறுகின்றன. கவிஞர்கள் அப்துல் ரஹ்மான், அபி, எழுத்தாளர்கள் தோப்பில் முகமது மீரான், சாருநிவேதிதா, தேவிபாலா, லேனாதமிழ்வாணன், ஆர்னிகாநாசர் போன்றோரது நேர்காணல்கள் குறிப்பிடத்தக்கது.

அவ்வப்பொழுது சர்ச்சைகளையொட்டி விவாதங்களும் இவ்விதழில் மேற்கொள்ளப்படுகின்றன. மணிரத்தினத்தின் ரோஜா, பம்பாய் படங்கள் குறித்தும், மதரஸாக்களின் பாடத்திட்டம், கிரிக்கெட், குடும்பக் கட்டுப்பாடு, இந்துத்துவா ஆகியன குறித்தும் நடத்தப்பட்ட விவாதங்கள் பரவலான கவனத்தைப் பெற்றன. மற்ற இஸ்லாமிய இதழ்களில் இஸ்லாம் குறித்து மட்டுமே கேள்வி - பதில் பகுதி அமையும். எங்கள் பத்திரிகையில் சமூக, அரசியல், இலக்கியம், சார்ந்தும் கேள்வி - பதில் பகுதி அமைந்திருக்கிறது. என்கிறார், துணை ஆசிரியர் அஜுஸ்லுத்ஃபுல்லாஹ். இவ்விதழில் வெளியாகி வரும் கடைசிப்பக்கம் பகுதியில் முக்கிய பல செய்திகள் இடம் பெறுகின்றன.

சமரசத்தில் வெளியாகும் கட்டுரைகளை இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்(ஐகுவு)நூல்களாகத் தொகுத்து வெளியிட்டு வருகிறது.

சில முக்கிய நிகழ்வுகளையொட்டி கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது சமரசம்.

இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவது, தேசம், மாநிலம் சார்ந்த பிரச்சினைகளை இஸ்லாம் சார்ந்து அணுகுவது சமரசத்தின் நோக்கமாகும் என்கிறார் பொறுப்பாசிரியர் சிராஜுல்ஹசன்.

ஆசிரியர் பற்றி :

ஐம்பது வயதைக்கடந்துவிட்ட அப்துர் ரகீம் இளம் அறிவியல் வேதியியல் பட்டதாரி. ஜமா அத்தே இஸ்லாமியஹிந்த் மாநில தலைவராகவும் அதன் மத்திய ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். தற்போது இஸ்லாமிய வங்கியில் ஆர்வம் செலுத்தி வரும் இவர் ஒரு தொழிலதிபரும் கூட.

இஸ்லாமிய மார்க்க செய்திகளுடனும் இயக்க செய்திகளுடனும் படைப்பிலக்கியத்திற்கும் இன்றும் முக்கியத்துவம் கொடுக்க சமரசம் செய்து கொண்டால் பொதுத்தளத்தில் சமரசம் கூடுதல் கவனம் பெறக்கூடும்.

ºó¾¡ Å¢ÀÃõ :

தனி இதழ் - ரூ10
ஆண்டுசந்தா - ரூ220
வெளிநாட்டுசந்தா - ரூ 820

முகவரி:

ஆசிரியர்,
138, பெரம்பூர் நெடுஞ்சாலை,
சென்னை 600012
தொலைபேசி : 044 26620091
fax :26620682

email:
iftchennai 12@gmail .com

website:www.iftchennai.ஒர்க்

நன்றி : அந்திமழை

பன்முகம்

"1996 ஆம் ஆண்டு அது நிகழ்ந்தது. அமெரிக்காவிலிருக்கும் ஜான்
ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் ஜாக்ஸ்டெரிடா என்பவர் உரையாற்றியபோது அது நடந்தது. நிர்-நிர்மாணம் (De-Construction) என்ற வார்த்தையை முதன் முதலாக அவர் உச்சரித்தபோது ஒரு அதிசயம் போல் அது நேர்ந்தது. யாருமே சற்றும் எதிர்பாராத வகையில் டெரிடா என்ற அந்த இளம் பேராசிரியர் அதுவரை அறியப்பட்டிருந்த மேற்கத்திய தத்துவ கலை இலக்கிய வரலாற்றை தலைகீழாகக் கொட்டி கவிழ்த்த போது பார்வையாளர்கள் தங்கள் கால்களுக்குக் கீழே இருந்த தரை நழுவியதை உணர்ந்தார்கள். அன்று முதல் பின்நவீனத்துவம் என்ற பூதம் உலகத்தை பிடித்தாட்ட வந்திருக்கிறது என்பதையும் உணர்ந்தார்கள்"1930 ஆம் ஆண்டில் பிரான்சின் ஆதிக்கத்துக்குட்பட்ட அல்ஜீரியாவில் யூதப் பெற்றோருக்குப் பிறந்து உலக பின் நவீனத்துவச் சிந்தனையாளர் வரிசையில் தவிர்க்க முடியாத பெயராக நிலைத்துவிட்ட 'டெரிடா'வைப் பற்றிய மேற்கண்ட பதிவு 'டெரிடா'வின் மறைவையொட்டி 'பன்முகம் அக்டோபர்-டிசம்பர் 2004' இதழில் பதிவாகியுள்ளது.

இப்படி பின் நவீனத்துவம் சார்ந்த அதன் அனைத்துலக நிகழ்வுகளையும் தமிழ் வாசகர்களுக்குத் தரும் நோக்குடன் வெளிவந்து கொண்டிருக்கிறது 'பன்முகம்' கலை இலக்கியக் கோட்பாட்டுக் காலாண்டிதழ். இதன் ஆசிரியர் எம்.ஜி.சுரேஷ். பதிப்பாளர் ஆர். ரவிச்சந்திரன். முதல் இதழ் 2001ஆம் ஆண்டு செப்டம்பர்-நவம்பர் இதழாக வெளிவந்தது. இதுவரை 16 இதழ்கள் வெளிவந்துள்ளன. பின் நவீனத்துவம் சார்ந்த படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டாலும், முன்னோர்களின் படைப்புகளை நிராகரிக்காமல் நவீன படைப்புகளையும் ஒருங்கே வெளியிட்டு வருகிறது பன்முகம். அவ்வப்போது சில முக்கியமான சிறப்பிதழ்களையும் வெளியிட்டு வருகிறது.

ஏழாவது இதழ்(ஏப்ரல்-ஜூன் 2003) க.நா.சு. நினைவு சிறப்பிதழாக வெளிவந்தது. பிறகு சிறுகதைச் சிறப்பிதழ் (ஜூலை-செப்டம்பர் 2003), ஜெம் ஜாய்ஸ் சிறப்பிதழ் (ஜூலை-செப்டம்பர் 2004), எட்கர் ஆலன்போ சிறப்பிதழ் (ஜனவரி-மார்ச் 2005) எனத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

நவீன இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் ரமேஷ்:பிரேம், யுவன் சந்திரசேகர், மாலதி மைத்ரி,பாவண்ணன், லதா ராமகிருஷ்ணன் போன்றோர் தொடர்ந்து பன்முகத்தில் எழுதி வருகின்றனர்."பரிசோதனை முயற்சிப் பிரதிகளை வெளியிடுவது பன்முகத்தின் முக்கிய அம்சமாகும்" என்கிறார், எம்.ஜி.சுரேஷ். டாடாயிசம், சர்ரியலிசம், கியூபிசம் போன்ற இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய எம்.ஜி. சுரேஷின் தொடர் முக்கியமானதாகும்.

"கோட்பாடுகள் (இசங்கள்) தமிழில் ஒதுக்கப்படுகிறது. இலக்கியத்திற்குத் தொடர்பு இல்லாதது என்று ஒதுக்கிவிடும் பொறுப்பற்ற தன்மை தமிழில் உள்ளது. உண்மையான இலக்கியம் என்பது கோட்பாடுகளை மீறி நிற்பது என நினைக்கிறார்கள். கோட்பாடு பற்றிய உணர்வு வேண்டும் என்பதால் இத்தொடரை எழுதினேன்" என்கிறார் எம்.ஜி.சுரேஷ்.

சிறந்த மொழிபெயர்ப்புக் கதைகளையும் கவிதைகளையும் வெளியிட்டு வருகிறது பன்முகம்.'பின் நவீனத்துவக் கவிதைகள் (Post modern poetry), 'மீ பிரதிக் கவிதைகள்' (Hyper text) போன்ற புதிய வகைமை கவிதைகளையும் அறிமுகம் செய்து வருகிறது 'பன்முகம்'.
'சிஸிபஸ்' போன்ற சர்ச்சைக்குரிய கதையும் வெளிவந்துள்ளது. பன்முகத்தின் பதிப்பாளர் ரவிச்சந்திரன் 'புதுப்புனல்' என்ற பதிப்பகம் நடத்தி வருகிறார்.
பிரேம்: ரமேஷின் குறுநாவலான 'கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்', ரிஷியின் 'என் உனக்கு' கவிதைத் தொகுப்பையும், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் பெண்ணிய நாவலான 'நாளைய மனிதர்கள்', கோவை ஞானியின் 'மார்க்ஸியத்திற்கு அழிவில்லை' போன்றவை புதுப்புனலின் முக்கிய வெளியீடுகளாகும். அத்துடன் எம்.ஜி. சுரேஷின் சமீபகால அனைத்து நாவல்களையும் வெளியிட்டு வருகிறது புதுப்புனல்.

ஆசிரியர் எம்.ஜி. சுரேஷைப் பற்றி....

எம்.ஜி. சுரேஷ் பின் நவீனத்துவ எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். நாவல், சிறுகதை, கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். அரசு சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்த இவர், விருப்ப ஓய்வு பெற்று முழுநேர இலக்கியவாதியாக இயங்கி வருகிறார். இவரது 'இரண்டாவது உலகைத் தேடி' என்கிற சிறுகதைத் தொகுப்பு 1981-இல் வெளிவந்தது.

1984-இல் 'தாஜ்மஹாலுக்குள் சில எலும்புக் கூடுகள்' எனும் நாவலும், 1985-இல் 'கான்கிரீட் வானம்' என்கிற நாவலும் 1998-இல் 'கனவுலகவாசியின் நனவு குறிப்புகள்' எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. இவை நான்கும் நவீனத்துவ படைப்புகளாகும்.

'அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்' (1999), 'அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்'(2000), 'சிலந்தி' (2001), 'யுரேகா என்றொரு நகரம்'(2002), '37'(2003), ஆகிய ஐந்து பின்நவீனத்துவ நாவல்களும் 'பின்நவீனத்துவம் என்றால் என்ன?'(2004) என்கிற நூலும் தொடர்ந்து வெளிவந்துள்ளன.

இனி அவருடன்....

பின் நவீனத்துவத்திற்கென்று இதழ் தொடங்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

"பின் நவீனத்துவத்திற்கென்று அ. மார்க்ஸ், ரவிக்குமார் நடத்திய 'நிறப்பிரிகை', நாகர்ஜூனாவின் 'வித்தியாசம்', சாருநிவேதிதாவின் 'சிதைவு', பிரேம்: ரமேஷின் 'கிரணம்' முதலிய இதழ்கள் வெளிவந்தன. ஒரு கட்டத்திற்குப் பிறகு அவை நின்று போயின. கல்குதிரை, நிகழ் போன்ற இதழ்களில் பின்நவீனத்துவம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. தொடர்ந்து பின்நவீனத்துவத்திற்கான விவாதத்தளம் வேண்டும் என்பதால் பன்முகத்தைத் தொடங்கினேன். பின்நவீனத்துவம் குறித்து பேச வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டாலும் நேரடியாக பின் நவீனத்துவ இதழாக அறிவிக்காமல் 'கலை இலக்கியக் கோட்பாட்டு இதழ்' என்றுதான் முதலில் ஆரம்பித்தேன்.

ஏனென்றால் பின்நவீனத்துவம் குறித்து ஒரு தவறான புரிதல் தமிழ்ச் சூழலில் நிலவியது. குடும்பத் தகர்ப்பு, ஒழுக்க விழுமியங்கள் மீது அதிர்ச்சி மதிப்பீடு என பின்நவீனத்துவம் புரிந்து கொள்ளப்பட்டதால் முன் தீர்மானத்துடன் நிராகரித்துவிடுவார்கள் என்பதால் இப்படிச் செய்தேன். நாளடைவில்தான் பின்நவீனத்துவ இதழாக அறியப்பட்டது".

இதழ் நடத்துவம் அனுபவம் எப்படி இருக்கிறது?

முன்பு எனக்கு பல இலக்கியவாதிகள் நண்பர்களாக இருந்தார்கள். இந்த இதழை ஆரம்பித்தப் பிறகு அவர்களெல்லாம் எதிரிகளாகிவிட்டார்கள். நான் ¾னியாக இருந்தபோது பல நண்பர்கள் இருந்தார்கள்.

இப்போது என்னை 'Post modernist' குழுவில் ஒதுக்கிவிட்டார்கள். இது தவிர்க்க முடியாதது. இதை நான் எதிர்மறையாகப் பார்க்கவில்லை என்கிறார் எம்.ஜி. சுரேஷ்.

புதிய கோட்பாடுகள் குறித்து அறிது கொள்ள விரும்புபவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டிய இதழாக பன்முகம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தனி இதழ் ரூ25/
ஆண்டுச் சந்தா ரூ 100/
வெளிநாடுகளுக்கு ஆண்டுச் சந்தா ரூ 400/

படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:

புதுப்புனல்
5/1, பழனி ஆண்டவர் கோயில் தெரு,
முதல் மாடி, அயனாவரம்,
சென்னை- 600 023.

மின்னஞ்சல்:panmugam@yahoo.காம்

நன்றி : அந்திமழை

நடவு

".....
ஏதாவது காரணம் சொல்லி
அடிக்கடி சந்திக்கும்
உன் தோழியரின் முகங்கள்
அச்சுறுத்தவில்லை என் இரவுகளை
எப்போதோ சந்தித்த
என் பள்ளிப் பிராயத்து நñபனை
இப்போதும் நான் சந்திப்பதாக
நீ சந்தேகப்படும் வரை".

ஆணாதிக்கத்தை கேள்விக்குட்படுத்தும் புதிய மாதவியின் ' கணவரின் தோழியர்' எனும் இக்கவிதை நடவு-ஜூலை'05 இதழில் வெளியாகியுள்ளது."
"மணிமுத்தாற்றங்கரையிலிருந்து முதல் படைப்பிலக்கியக் குரல் எழுகிறது". என்கிற முழக்கத்துடன் 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடவின் முதல் இதழ் வெளி வந்தது. இது வரை (ஜூலை'05) 13 இதழ்கள் வெளிவந்துள்ளன.

இவ்விதழின் ஆசிரியர் ஜி.டி. என்கிற கோ. தெய்வசிகாமணி.ஆசிரியர் குழு, தமிழ்ச் சேரன், அரசிளங்குமரன்.

சிறுகதை,கவிதை, கட்டுரை, கலைகள் பற்றிய விமர்சனம் எனத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.சினிமா ரசிகர் மன்ற செயல்பாடுகள், மனித உரிமைப் பிரச்சனைகள்,பாசிசமயமாகிவரும் சமூக அமைப்பு எனப் பொதுவான சமூகப் பிரச்சினைகள் குறித்த கட்டுரைகளும் இதில் வெளிவருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில் வீரப்பன் பெயரால் அதிரடிப்படை நடத்திய அத்துமீறல்கள் குறித்து " குருதி உறைந்த பூமி", "நிழல் தேடும் பாதங்கள்", "சில இடத்தில்" ஆகிய சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறது.

காவல் துறையின் அத்துமீறல்கள் குறித்த படைப்புகளையும் நடவு வெளியிட்டு வருகிறது." தொடர்ந்து தரமான கவிஞர்களையும்,கலைஞர்களையும் உருவாக்குவதை எதிர்காலத் திட்டமாகக் கொண்டு நடவு செயல்படுகிறது.

இதன் ஆசிரியர் ஜீ. டி. கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

'நடவு' வின் நோக்கம்..

"வட தமிழ் நாட்டில் கலை இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பது,சமூக விழிப்புணர்வையும்,நல்லிணக்கத்தையும் வளர்ப்பது, மாற்றுக் கலாச்சரத்தை உருவாக்குவது. அத்துடன் விளிம்பு நிலை,கலை, இலக்கிய வளர்ச்சி, அதிகார வர்க்கத்துக்கு எதிரான மாற்றுக் குரல் ஆகியனவற்றை மையப்படுத்தி எங்கள் இதழ் பயணித்துக் கொண்டிருக்கிறது. அச்சுக்கூட வசதியின்மையால் வணிக நோக்கில் இதழைக் கொண்டு செல்லமுடியவில்லை.வாசகர்களிடமும் பரவலாக்க முடியவில்லை" என்கிறார்.

சந்தா விபரம்:
தனி இதழ்: ரூ 15/-
ஆண்டு சந்தா : ரூ 60/-

படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப முகவரி:

கோ. தெய்வசிகாமணி
269, காமராஜ் நகர்,
ஆலடி சாலை,
விருத்தாசலம்,606001
தொலைபேசி: 04143- ௨௬௧௭௯௪

நன்றி : அந்திமழை

குழலோசை

"இவ்விதழ் பல்சுவை இதழாக வெளிவருகிறது. கலை, இலக்கியம், சமூகம், மொழி, தேசம், தெய்வீகம், போன்றப் பல சுவைகள் இவ்விதழில் காணப்படும். ஏதேனும் இÉம் சார்ந்தப் பார்வைக்கோ, இயக்கம் சார்ந்த சிந்தனைகளுக்கோ, வலுக்கொடுக்கும் முயற்சி இவ்விதழில் காணக் ¸¢டைக்காது. இப்பிரபஞ்ச இயக்கத்தில், இது இப்படித்தான் என்று எதையும் தீர்மானமாக முடிவு செய்துவிட முடியாது. எது எப்படியும் மாறும். அதற்கான சூழலை காலம் கொண்டு வந்து சேர்க்கும்.

முடிந்தவரை இவ்விதழ் சக மனிதனின் துயர்களையபாடுபடும். அவனின் மகிழ்ச்சி, துக்கம், இயலாமை, கோபம் இவற்றையே எதிரொலிக்கும். சக மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களை அவிழ்க்க அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொள்ளும்" என்கிற அறிவிப்புடன் செப்டம்பர் 2005இல் வெளிவந்த இதழ் குழலோசை. இதன் ஆசிரியர் வெ.கோகுலமுத்தரசன். கவிதை, சிறுகதை, நூல்விமர்சனம், மொழிபெயர்ப்பு, நேர்காணல், கட்டுரை என வெளியாகி வருகின்றன.

தற்போது இவ்விதழ் கணிப்பொறி ஒளியச்சு நகலில் வெளி வருகிறது. வண்ணைசிவா, தங்கம் சரவணன், சூரியராஜன், செந்தூரம் ஜெகதீ‰, பாக்யம் சங்கர், இர.முனுசாமி, கோ.மகேசன், வெ.கோகுலமுத்தரசன், ச.அறிவழகன் போன்றோர்கள் இவ்விதழில் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.

சிறிய அளவில் இவ்விதழ் வெளிவந்தாலும் தரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

முகவரி :

குழலோசை,
146, இரண்டாவது தெரு,
நேதாஜி நகர்,
தண்டையார்பேட்டை,
சென்னை - 81.

சந்தா விவரம் :
இதழ் நன்கொடை - ரூ. 5.00
ஆண்டு சந்தா - ரூ. 50.00

நன்றி : அந்திமழை

அதிர்வு

" 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றுரைத்த வள்ளலாரின் காலடித் தடங்கள் பதித்த கடலூர் மண்ணிலிருந்து தமிழின உறவுகள் கைகோர்க்கும் முற்போக்கு முயற்சிகளோடு இதோ உங்களின் கைகளில் கொடுத்திருக்கின்றோம் முதல் அதிர்வினை" என்கிற அறிவிப்புடன் Êசம்பர் 2005இல் இருந்து வெளிவந்துகொண்டிருக்கிறது 'அதிர்வு' - இலக்கியப் பண்பாட்டு மாத இதழ். இதன் ஆசிரியர், தடா.நல்லரசன், ஆசிரியர் குழு : புகழ் மங்கான், கு.பரிதிவாணன், வி.சு.அன்புச்செல்வன், சிவா.கார்த்திகேயன், ஏழுமலை, கா.வெற்றியழகன்.

கவிதை, கட்டுரை, சிறுகதை, நூல்விமர்சனம், நேர்காணல், மொழிபெயர்ப்பு என வெளியாகி வருகின்றன. பிடல்காஸ்ட்ரோ, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களது சிந்தனைகள் ஆங்காங்கே வெளியிடப் படுகின்றன. 'தெரிந்து கொள்ளுங்கள்' என்ற பகுதியில் வழக்கிலுள்ள பிறமொழிச் சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொற்கள் வழங்கப்படுகின்றன. படைப்புகள் பெரும்பாலும் அரசியல் விழிப்புணர்வூட்டும் தன்மையுடன் வெளிவருகின்றன. தலித்தியம், தமிழ் தேசியம், மார்க்சியம் சார்ந்த கோட்பாடுகளை வெளிப்படுத்துவனவாக படைப்புகள் வெளிவருவது அதிர்வின் தனித்தன்மை எனலாம். மிகவும் முற்போக்கான கருத்துகளை தமிழின் தொன்மை வடிவங்களான ஒப்பாரி, தாலாட்டு வடிவில் கவிதைகள் வெளிவருவதும் அதிர்வின் சிறப்பாகும். அவ்வகையில் முதல் இதழில் வெளியான 'எத்தனை முறைதான் அழுவது' எனும் தலித்தியப் பாடலும், இரண்டாம் இதழில் வெளியான 'ஈழத்தாலாட்டு' பாடலும் குறிப்பிடத்தக்கன.

'கெடல் எங்கே தமிழர் நலம்
அங்கெல்லாம் சென்றுகிளர்îசி செய்க' என்கிற

பாவேந்தர் பாரதிதாசனின் எழுச்சிப் பாடலோடு அவரது படமும் முதல் இதழின் அட்டையில் வெளியானது. "நாணல்கள் தலையாட்டும் ஆற்றங்கரைகளோடு, மூலிகைச் செடிகள் படர்ந்திருக்கும், வாய்க்கால், வரப்புகள் என பசுமைபூத்த இலைகள் வருடும் இயற்கையோடு இயற்கையாய் தமிழ் கிராமங்கள்தோறும் இலக்கிய படைப்புகளைப் பதிவு செய்யமுடியாமல் அடைகாத்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் படைப்புகளையும், நகரங்கள் தோறும் நச்சுப் புகை நுகர்ந்து நான்கு சுவற்றுகள் சுயநலத்தோடு தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தூங்கி வழிகின்ற இலக்கிய ஆர்வத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் படைப்புகளையும் பதிவு செய்து அவர்களை மெருகேற்றுவதே இதழின் நோக்கமும் தாகமும் ஆகும்" என இதழின் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது முதல் இதழின் தலையங்கம். முதல் இதழில் வெளியாகியுள்ள இள.புகழேந்தியின் 'கடவுளைப் படைத்தவன் மனிதன்', கா.தமிழ்வேங்கையின் 'திரைப்படத்தில் வன்முறை', பழநெடுமாறனின் 'சுவடுகள்' இரண்டாம் இதழில் வெளியாகியுள்ள வேல்தொண்டைமானின் 'தீர்வினைத்தேடி' ஆகியவை முக்கியமான கட்டுரைகளாகும்.

கா.தமிழ்வேங்கை, பைந்தமிழ்பாவை, அ.மோகன்ராசு, க.பூபாலன், பித்தன்கல்கி, ஏ.தனு‰கோடி, கு.பரிதிவாணன், ஆல்பேட்டைபாபு, ந.பர்னாட் பாத்திமா, அமுதராஜ், இரா.மோகன்தாசு, ந.சுரே‰ நாராயணன், வெண்ணிலவன், புவனாதனு‰கோடி, இரா.அப்பாஜி, தொ.எழில்நிலவன், கி.பாலு போன்றோரது கவிதைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. தெலுங்கானாவை சேர்ந்த அல்லம் ராசைய்யாவின் 'புயல்' மொழிபெயர்ப்புச்சிறுகதை இரண்டாவது இதழில் வெளியாகியுள்ளது.

சில நேரங்களில், நடையைக் குறித்து அக்கறை கொள்ளாமல் கருத்தை மட்டும் வெளிப்படுத்தும் கவிதைகள் வெளியிடப்படுகின்றன. அரசியலுடன், வெளிப்படுத்தும் முறையும் முக்கியம் என்பதைக் கவனத்தில் கொண்டு கவிதைகளை கறாராகத் தேர்வு செய்து வெளியிட்டால் அதிர்வுக்கு இன்னும் 'அதிர்வு' கூடும்.

ஆசிரியர் பற்றி....

விதைநெல், வாக்குமூலம், முகங்கள் கவிதைத் தொகுப்பும், 'தழும்புகள்' ஹைக்கூ அந்தாதி தொகுப்பு, 'திசைகள்' எனும் நவீன ஆத்திச்சூடி தொகுப்பும் எழுதியிருக்கும் தடாநல்லரசன், தமிழ் தேசிய அரசியலில் ஈடுபாடுள்ளவர்.

சந்தா மற்றும் முகவரி :
தனி இதழ் - ரூ. 5.00
ஆண்டு சந்தா - ரூ. 100.00

முகவரி :
4/7, சபாபதி தெரு,
மஞ்சகுப்பம்,
கடலூர் - 607 001.
பேச - 04142 284184, ௨௩0௪௭௭

நன்றி : அந்திமழை

'ச‌ம‌ உரிமை' மாத‌ இத‌ழ்

க‌விக்கோ அப்துல் ர‌ஹ்மானைக் கொண்டு 'சம‌ உரிமை' மாத‌ இத‌ழ் பிப்ர‌வ‌ரி மாத‌ம் முத‌ல் வெளியிட‌ப்ப‌ட‌ இருப்ப‌தாக‌ இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ பொதுச் செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லாஹ் செய்தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார்.'ச‌ம‌ உரிமை' மாத‌ இத‌ழில் சிறுபான்மையின‌ருக்கு அர‌சு வ‌ழ‌ங்கும் ச‌லுகைக‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள், சிறுபான்மையின‌ரின் செய்திக‌ள், ச‌மூக‌, க‌ல்வி ம‌ற்றும் பொருளாதார‌ மேம்பாட்டு நிக‌ழ்வுக‌ள் குறித்த‌ செய்திக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌க‌வ‌ல்க‌ள் இட‌ம்பெறும்.'ச‌ம‌ உரிமை' மாத‌ இத‌ழை அனுப்ப‌ த‌மிழ‌க‌மெங்குமுள்ள‌ ஜ‌மாஅத்துக‌ள், முக்கிய‌ப் பிர‌முக‌ர்க‌ள் ம‌ற்றும் பொதுந‌ல‌ அமைப்புக‌ள் குறித்த‌ முக‌வ‌ரி ம‌ற்றும் தொலைபேசி எண்க‌ளை கீழ்க்க‌ண்ட‌ முக‌வ‌ரிக்கு அனுப்பி வைக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்,எண் 27 உட்ஸ் சாலை,அண்ணா சாலை,சென்னை 600 002,தொலைபேசி : 044 28460127 / 9840040067,மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி: ithayathulla@gmail.காம்

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

பிரம்மராஜன், கோணங்கி, பிரமிள்... மற்றும் ஒரு வேண்டுகோள்.

பிரம்மராஜன், கோணங்கி, பிரமிள்... மற்றும் ஒரு வேண்டுகோள்.
ஆர்வமுள்ளவர்களுக்கு ஒருவேளை இந்த பதிவு உதவலாம்... உதவாமலும் போகலாம்... என்றாலும்... சிறு பத்திரிகைகளின் காலம் முடிந்துவிட்டது என மூத்த எழுத்தாளரான அசோகமித்திரன் அறிவித்துள்ள நிலையில் சில சிற்றேடுகள் இப்போது வீரியத்துடன் தமிழில் வர ஆரம்பித்திருக்கின்றன. ஆங்கிலத்தில் அவான் கார்ட் (Avant - garde) என்றொரு சொல் உண்டு. இது இலக்கிய சொல் என்றாலும் ராணுவ உருவகம் கொண்டது. இதன் அர்த்தம் 'இலக்கிய முன்னணிப்படை'.புதிய மற்றும் சோதனை ரீதியான படைப்பாக்கங்களை ஒருபோதும் வணிக எழுத்தாளர்களாலோ, நடு இதழ் எழுத்தாளர்களாலோ படைக்க முடியாது. அந்த இதழ்களை நிரப்பும் பக்கங்கள் அந்தவகை எழுத்துக்களை என்றுமே கோர்க்காது. இலக்கிய முன்னணி படையை சார்ந்த எழுத்தாளர்களாலேயே அந்தவகை படைப்பை படைக்க முடியும். அதற்கு சிறு பத்திரிகைகள் மட்டுமே இடம் கொடுக்கும். இது உலக இலக்கிய சரித்திரத்தின் அனைத்து கலைகளிலும் பதிவாகியிருக்கும் விஷயம். கண்டிப்பாக ஜாய்ஸின் 'யூலிஸிஸ்' நாவலோ அல்லது ராபர்ட் மியூஸிலின் 'நிர்க்குண மனிதன்' போன்ற நாவலோ அல்லது 'டிக் ஷ்னரி ஆஃப் கசார்ஸ்' பிரதியோ நடுப்பத்திரிகைகளில் வர வாய்ப்பேயில்லை.இப்படியான பின்நவீனத்துவ சூழலில் மீண்டும் தமிழில் சில சிறு பத்திரிகைகள்...ஆத்மாநாமின் 'ழ' பத்திரிகை வழியே வெளிச்சத்துக்கு வந்த கவிஞர் பிரம்மராஜனின் 'மீட்சி' சிற்றிதழை அவ்வளவு சுலபத்தில் யாரும் மறந்துவிட முடியாது. பிரம்மராஜனின் கவிதைகள் புரியவில்லை... என விமர்சனம் எழுந்தபோது நாகார்ஜுனன், அவரது கவிதைகளில் உள்ள முன் - பின் வார்த்தை விளையாட்டை கட்டுடைத்து, கலைத்து எழுதிய கட்டுரை இன்றளவும் தமிழின் சிறந்த கட்டுரைகளில் ஒன்றாக இருக்கிறது. அதேபோல் மீட்சியின் உலக கவிதைகள் தொகுப்பு பல கவிஞர்களுக்குள் வேகத்தை கிளப்பிய தொகுப்பு.அதே பிரம்மராஜன் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் 'நான்காம் பாதை' சிற்றிதழை ஆரம்பித்திருக்கிறார். முதல் இதழ் இப்போது வெளியாகியிருக்கிறது. தனியிதழ் ரூ. 50. ஆண்டுச் சந்தா ரூ. 200. கூரியில் செலவு தனி.தொடர்புக்கு A30, ASTC நகர், பென்னாகரம் சாலை, தருமபுரி - 636 703. தொலைபேசி எண்: 04342 - 281239. கைபேசி: 98941 41752 e - mail: bramoraj@yahoo.comஅடுத்து 'லயம்'. பிரமிளை முன்வைத்து இயங்கிய அதே 'லயம்' சிற்றிதழ்தான். பத்தாண்டுகளுக்கு பின் மீண்டும் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. ஆசிரியர் மாறவில்லை. அதே கால சுப்ரமணியம்தான். பிரமிளின் பிரசுரமாகாத படைப்புகளையும் அவரை குறித்த விமர்சனங்களையும் 'லயம்' வெளியிட்டு வரும் என ஆசிரியர் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் பிரமிளின் பிரசுரமாகாத கவிதையொன்று இந்த இதழில் வெளியாகியுள்ளது. அந்தக் கவிதை...பிலம்ஒப்புமைப் பின்னலின்நரம்பு முடிச்சுகளாய்நக்ஷத்ரங்கள் -அண்டத்தின் அநந்தங்கள்.அவற்றின்ஈர்ப்பு வெளிக் கோளங்கள்ஒன்றை ஒன்றுஊடுருவுகின்றன.ஜடத்தினுள் ஜடம் சிக்கிஎங்கோ ஒரு முடிச்சில்அதீத ஜடத் திணிப்பு.அதையே நோக்கிவளைகிறது புவனவெளி.பிரபஞ்ச நியதியில்பிறக்கிறது புரட்சி.ஒப்புமைப் பின்னல்கலைகிறது.ஒரு புள்ளி நோக்கிஅண்டத்தின்பரிமாணங்கள் சரிந்துஒரே ஒருநக்ஷத்திரத்தின் முடிச்சினுள்ளேவீழ்கிறது காலவெளி.ஒளிரும் ஒரு நக்ஷத்திரத்தின்ஜடம் ஒரு பொந்தாகிதன் ஒளியை அதுதானே கபளீகரிக்கிறது.வெளி வளைந்து குவிந்துவெளியில் பிறக்கிறதுஒரு பிலம்.(??? 1955)தனியிதழ் ரூ. 15. ஆண்டுச் சந்தா ரூ. 100.தொடர்புக்கு எஸ். விமலா, 155, கிழக்கு வீதி, நேரு நகர், சத்தியமங்கலம் - 638 402. தொலைபேசி எண்: 04295 - 220097. கைபேசி: 9442680619எந்த சிமிழுக்குள்ளும் அடங்காமல் இருக்கும் கோணங்கியின் 'கல்குதிரை', தமிழ் சிறுபத்திரிகை வரலாற்றில் தனியிடம் கொண்டது. அந்த இதழ் வெளியிட்ட மார்க்யூஸ் சிறப்பிதழும், உலக சிறுகதை தொகுப்பும் ஏற்படுத்திய அதிர்வு இன்றுவரை தொடர்கிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த இதழ் வரலாம்... வராமலும் போகலாம்... அப்படி வந்தால் எப்போது வரும் என்பது கோணங்கிக்கே தெரியாது...இந்த நிலையில் கோணங்கியின் ஒரு புத்தகம் வாசகனுக்காக காத்திருக்கிறது...வணிக இதழ்களிலோ, நடு இதழ்களிலோ எழுதாமல், விலைபோகாமல் சிறு பத்திரிகைகளில் மட்டுமே இயங்குவதை பிடிவாதமாக பின்பற்றி வரும் ஐகான், கோணங்கி. புரியாமல் எழுதுகிறார்... என்ற குற்றச்சாட்டு அவர் மீது காலம் காலமாக வீசப்பட்டு வருகிறது... இதற்கு கோணங்கி என்ன செய்வார்?அவரது சில சிறுகதைகளும், சில குறுநாவல்களும் இணைந்து 'இருள்ள மெளத்திகம்' என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. பின்னிணைப்பாக 'தன்னுடன் தன் நேர்காணல்' இணைக்கப்பட்டுள்ளது. தேவதச்சன், ந. நடராஜன், பூபதி, அறிவழகன் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு கோணங்கி பதில் சொல்லியிருக்கிறார்.விலை: ரூ. 212. 'தென் திசை' பதிப்பகத்தின் ஒர் அங்கமான 'காதை' வெளியீடு.தொடர்புக்கு A19, Srinivasa reddy street, T. Nagar, Chennai - 600017. தொலைபேசி எண்: 044- 2433 8169. e - mail: kkbooks07@rediffmail.comஇறுதியாக... பதிவுலகை சேர்ந்த இருவருக்கு இந்தப் பதிவின் வழியே ஒரு கோரிக்கை. ஒருவர் ஜமாலன். 'காலக்குறி' சிற்றிதழை மீண்டும் அவர் ஆரம்பிக்க வேண்டும். அடுத்தவர் நாகார்ஜுனன். 'வித்தியாசம்' இதழை திரும்பவும் தமிழ் சூழலுக்கு அவர் கொண்டு வரவேண்டும். வருவார்கள். பின்நவீனத்துவசூழல் அவர்கள் இருவரையும் மீண்டும் சிற்றிதழை தொடங்க வைத்துவிடும்...

நன்றி: பைத்தியக்காரன்,
naayakan.blogspot.com/2008/03/blog-post_17.html

தமிழ்நெறி - தமிழ்த்தேசிய இதழ் - மலேசியா

தமிழ்நெறி - தமிழ்த்தேசிய இதழ்
மலேசியத் தமிழ் இதழியல் துறையில், மறுவரவு மேற்கொண்டு மீண்டும் வந்துள்ளது 'தமிழ்நெறி' என்னும் தமிழ்த் தேசிய மாதிகை (மாத இதழ்). "தமிழைக் காப்போம் தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்" என்ற முழக்கத்தோடு இந்தச் செப்தெம்பர் திங்களில் தமிழ்நெறி இதழ் வெளிவந்துள்ளது. தமிழ்நெறிச் சிந்தனைகளைத் தாங்கி தமிழ் மீட்புக்காகவும் காப்புக்காகவும் குரல்கொடுக்கும் ஏடாக வெளிவந்துள்ள 'தமிழ்நெறி' இதழை ஒவ்வொரு மலேசியத் தமிழனும் மனதார வாழ்த்தி வரவேற்க வேண்டும்.
தமிழ் மொழியின நலன் தொடர்பிலான பல அரிய செய்திகளையும் கட்டுரைகளையும் இந்த இதழ் தாங்கிவந்துள்ளது. அறிஞர் அண்ணா, பெரியார், மாவீரன் திலிபன் ஆகியோர் பற்றிய சிறப்புக் கட்டுரைகள், மாணவர்களுக்கான தமிழ்நெறிக் கல்வி, தமிழ்நெறித் தெளிவு வினாவிடை பகுதி, உளவியல் கட்டுரை, ஈழத்துக் கட்டுரை என பல்வேறு அரிய செய்திகளை உள்ளடக்கி மிகவும் தரமான தாள்களில் கவரும்படியாக இவ்விதழ் வெளிவந்துள்ளது. "தமிழ்நெறியின் வேலை விழிப்புணர்வு ஏற்படுத்துவதே. இது கருத்துப்பரப்பும் அறிவுசான்ற இதழ். எனவே, தமிழ், தமிழர் தொடர்பான அரிய செய்திகளைத் தேவையான கருத்துகளைத் தமிழ் மக்களுக்குச் கொண்டுபோய்ச் சேர்த்து, அவர்களை விழிப்படையச் செய்யும் பணியே தமிழ்நெறிப்பணி" என்று இதழின் பொறுப்பாசிரியரும் மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தலைவருமாகிய இரா.திருமாவளவன் அவர்கள் தலையங்கத்தில் எழுதியிருப்பது பலித்திட வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் அவா.மலேசியத் தமிழர்க்குத் 'தமிழ்நெறி' புதிய இதழல்ல. கிட்டதட்ட 14ஆண்டுகளுக்கு முன்பே 1994 ஏப்பிரல் திங்கள் மலேசியாவில் தமிழ்த் தேசியத்தை உயர்த்திப்பிடிக்கும் நோக்கில் புயலென புரப்பட்ட எழுச்சிமிக்க ஏடுதான் 'தமிழ்நெறி'. மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனாரின் அறிய சிந்தனையில் கருவாகி கழகத்தின் உயிர்த்தொண்டர்களின் அயராத உழைப்பில் உருவாகி மலேசிய மண்ணில் தமிழ் முரசு கொட்டிய வரலாற்றுச் சிறப்பு இந்தத் 'தமிழ்நெறி' இதழுக்கு உண்டு.ஆனால், வெளிவந்த சில மாதங்களில் பல்வேறு இடர்களின் காரணமாக தமிழ்நெறி நின்று போனது. பின்னர், பத்தாண்டுகள் கழித்து 2004 மே திங்களில் 'தமிழ்நெறி' மீண்டும் புத்துயிர் பெற்று புதிய வடிவில் புதிய தோற்றத்தில் வெளிவந்தது. தமிழ் உணர்வையும் தமிழர் உணர்ச்சியையும் முன்னெடுக்கும் ஒரு இதழை வாங்கி அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவும் உணர்வும் கெட்டுப்போன தமிழர்களிடையே, பெயர்போட முடியாமல் மீண்டும் தடைபட்டது 'தமிழ்நெறி'.ஆயினும், உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்குக் காலந்தோறும் பல்வேறு தடைகளையும், இடர்களையும், இருட்டடிப்புகளையும், மறைப்புகளையும் தாண்டி இன்றளவும் நிலைபெற்று தனித்தன்மையோடு வாழ்ந்து வரும் தமிழ்மொழி போல, 'தமிழ்நெறி' இதழும் பல்வேறு சிக்கல்களை கடந்து இப்போது மறுபடியும் புதுவடிவம் பெற்றுள்ளது. எந்தத் தடைக்கும் அஞ்சாமல், வந்த தடங்கல்கள் அனைத்தையும் வென்று மீண்டும் வெளிவந்துள்ள 'தமிழ்நெறியின்' நெஞ்சுரத்திற்குத் தமிழர்கள் தலைதாழ்த்தி வணக்கம் செய்யவேண்டும்.இவ்விதழ் இந்நாட்டில் பலமிக்க ஓர் இதழாக உருவெடுக்க வேண்டும். அதற்குண்டான அனைத்து வினைப்பாடுகளையும் ஆழ ஆராய்ந்து ஆசிரியர் குழுவினர் செயல்பட வேண்டும். தமிழின்; தமிழர்களின் நலன்பேணும் செய்திகளைத் தாங்கிவருவதோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கி சரியான இலக்கை நோக்கி தமிழரை வழிநடத்த வேண்டும். தமிழ்ப்பற்றாளர்கள் ஊணர்வாளர்கள் அனைவரையும் தமிழ்நெறி எட்டிப்பிடிக்க ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும். நாடு முழுவதும், 'தமிழ்நெறி' அறிமுக விழா, வாசகர் விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தித் தமிழ்நெறியைப் பரவச் செய்ய வேண்டும். ஆண்டுக் கட்டண உறுப்பினர்களைப் பெருக்குவதற்கான வழிவகைகளை காணவேண்டும். நாடு முழுவதும் உள்ள தமிழ் சார்ந்த இயக்கங்களின் ஆதரவை நாடி ஒவ்வொரு ஊரிலும் வட்டாரத்திலும் தமிழ்நெறி உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகள், தமிழ் ஆசிரியர்கள், மாணவர்களை இலக்காகக் கொண்டு தக்க திட்டங்களைத் தீட்டி முன்னேற வேண்டும். இடைநிலைப்பள்ளிகள், உயர்க்கல்விக் கூடங்கள் ஆகியவற்றுக்குள் தமிழ்நெறி ஊடுறுவும் வழிகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.இத்தனைக் கருத்துகளும் 'தமிழ்நெறி' ஆசிரியர் குழுவினருக்குத் தெரியாதவை அல்ல. இருந்தாலும், தமிழ்நெறி தமிழரின் உயிர்நெறியாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தால்தான் இத்தனைக் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.இவ்விதழின் வெற்றியில் மலேசியத் தமிழரின் பங்கு, குறிப்பாகத் தமிழ்ப்பற்றாளர், உணர்வாளர் என்று முழங்கிக்கொள்வோரின் பங்கு மிக அளப்பரியதாகும். அதோடு, தமிழால் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்கள், அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இவ்விதழை பலமிக்க இதழாக வளர்த்தெடுக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.காரணம், தமிழை முன்னெடுப்பது ஒன்றே இந்த நாட்டில் தமிழர்களின் நூற்றாண்டு வரலாற்றைக் காப்பதற்கான வழியும்; தமிழர்களின் அடுத்த நூற்றாண்டின் வாழ்வை, வளர்ச்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பும் ஆகும். தமிழ் இல்லையேல் தமிழர்க்கு எதுவே நிலைக்காது என்பதை மேற்குறிப்பிட்டவர்கள் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே, ஒவ்வொருவரும் தமிழ்நெறியை வாங்கி ஆதரவு செய்ய வேண்டியதும் இன்னும் பலரை வாங்க ஊக்குவிப்பதும் பிறந்த இனத்துக்குச் செய்யும் கடமையாகும்.தமிழ்நெறி இதழ் பற்றிய முக்கிய விவரங்கள்:-1.இதழின் விலை ம.ரி.3.00 மட்டுமே2.தமிழ்நெறி உறுப்பினர் கட்டணம் ம.ரி20.00 (6 மாதங்களுக்கு)3.தமிழ்நெறி முகவரி: Lot, 274, Kampong Bendahara Baru, jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor.4.தொலைபேசி: 03-61874103 தொலைப்படி: 03-61874099

தமிழ்நெறி இதழை வாங்குவோம்!
தமிழைக் காப்போம்!
தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்!

நன்றி: சுப.நற்குணன் - மலேசியா
http://www.thirutamil.blogspot.com/