Sunday, July 27, 2008

அந்திமழை

அந்திமழை (www.anthimazhai.com)
இத்தளத்தில் வாரம் ஒரு சிற்றிதழை அறிமுகப் படுத்துவதாக அறிவித்து இதுவரை பல இதழ்களையும் அறிமுகப் படுத்தியுள்ளார்கள்.

அவற்றில் ஒரு சில இதழ்களின் பெயர்கள்:
கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை
மண்மொழி
தச்சன்
அதிர்வு
குழலோசை
தமிழ் நேயம்
யாதும் ஊரேமது
மலர்
தலித்முரசு
மீண்டும் கவிக்கொண்டல்
அநிச்ச
தமிழ் பணி
வல்லினம்
நறுமுகை
சோலைக்குயில்
கணையாழி
அணி
கிழக்குவாசல்
அணங்கு
தாமரை
கனவு
மெய்யறிவு
இனிய நந்தவனம்
அம்ருதா
பெண்ணியம்
சௌந்தரசுகன்

தமிழம் வலை

தமிழம் வலை (www.thamizham.net)
சிற்றிதழ் ஆர்வலரும், தமிழறிஞரும், தாய்த் தமிழ் பள்ளியை நடத்தி வருபவருமான தோழர்.பொள்ளாச்சி நசன் அவர்களால் நடத்தப் பெறும் தளமாகும்.

இதில் தனக்கு வரும் சிற்றிதழ்களின் முகவரி உள்ளிட்ட தகவல்களையும், அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளையும் வழங்கி வருவதோடு வேறு பல அரிய தகவல்களும் இடம் பெற்றுள்ளது. படித்துப் பயன் பெறுக.

நன்றி

Saturday, July 26, 2008

கீற்று - சிற்றிதழ்களுக்காண இணையம்

கீற்று
www.keetru.com
தமிழ் சிற்றிதழ்கள் பலவற்றையும் தொகுத்து பெரும் சிரமங்களுக்குமிடையிலும் தொடர்ந்து வெளிவருகிறது. இவ்விணையத்தில்
விசை, தலித் முரசு, புதிய காற்று, கூட்டாஞ்சோறு, சமூக விழிப்புணர்வு, பெரியார் முழக்கம், அநிச்ச, செய்திமடல், தாகம், தீம்தரிகட, உங்கள் நூலகம், கவிதாசரண், அணங்கு, கதை சொல்லி, குதிரைவீரன் பயணம், அணி, புது எழுத்து, பெண்ணியம், இளைஞர் முழக்கம், Workers Unity என்ற வங்கி ஊழியர் திங்களிதழ், கருஞ்சட்டைத் தமிழர், புன்னகை, புதிய தென்றல், வனம், விழி, கனவு, இன்மை, சஞ்சாரம், தமிழர் கண்ணோட்டம், செய்தல் உள்ளிட்ட இதழ்கள்
தொடர்ந்து வெளிவருகின்றன.

சிற்றிதழகள் தவிர்த்து கட்டுரைகளும், கவிதைகளும், மருத்துவச்செய்திகள் நேர்காணல்களும் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

அனைவரும் படித்து ப்யனுறுவதோடு தங்களால் இயன்ற உதவியையும் நல்கிட வேண்டும்.

நன்றி, வணக்கம்.

Friday, July 25, 2008

முங்காரி, மகாகவி

வாசிக்க வாருங்கள்
தமிழ் வாசிப்பில் வெகுஜன இதழ்களின் உள்ளடக்கத்துக்கு மாற்றான புதிய சிந்தனைகளையும் கலகக் குரல்களையும் காண முடிகிற ஒரு களம் சிற்றிதழ்களின் உலகம். ஆனாலும் ஒரு அடையாளம் போல மூட்டு வரை நீண்ட ஜிப்பாவும் தோளில் தொங்கும் ஜோல்னாப்பையும் குறுந்தாடியுமாக இருந்தால் தான் கவிஞன், சிறு பத்திரிகையாளன், சிந்தனையாளன் என்று பொதுஜனங்கள் மத்தியில் இருந்த கேலிக் குரல்கள் குறித்து எந்தக் கவலையும் இன்றி கலகம் என்பதே இலக்கியம் என்பதாக ஒரு கட்டத்தில் இலக்கியச்சூழல் இருந்தது. அதன் காரணமும் தெளிவானது. வெகுஜன இதழ்களால் கட்டமைக்கப் பட்ட ஒழுங்கமைவுகளை மீறுதல் என்பதே இலக்கியச் சிறுபத்திரிகைகளின் நோக்கமாக இருந்தது. அதே சமயம் பல இலக்கியக்கூட்டங்கள் கேலிக்கூத்தாக முடிந்து போகவும் இவர்களில் சிலர் காரணமாக இருந்துள்ளனர். தன் வெளிப்பாடு மட்டுமே நோக்கமாகவும் பல இதழ்கள் வந்து போயின. எப்படி இருந்தாலும் நல்ல இலக்கியப் படைப்புகளின் உருவாக்கத்துக்கு சிற்றிதழ்களின் பங்களிப்பு என்பது மறுக்க இயலாதது. இன்றும் பலநூறு சிற்றிதழ்கள் தனிநபர்கள், நண்பர்கள் குழாம், சங்கங்கள், படைப்பாளர் இணைவுகளின் மூலம் வெளியிடப் படுகின்றன. இலக்கியவாதிகளும் காலப்போக்கில் வெளித்தோற்ற அடையாளங்களை துறந்து சமூகத்தின் பொது அடையாளங்களுக்குள் நுழைந்து விட்டபோதிலும் சிற்றிதழ் இலக்கியத்தின் தனி அடையாளங்களை இன்றளவும் சிறுபத்திரிகைகள் தொலைத்துவிடவில்லை.மணிக்கொடி காலம், சரஸ்வதி காலம், வானம்பாடி காலம் என தனித்த இயக்கங்களாக ஒரு சமயத்தில் சிற்றிதழ் இயக்கம் இருந்திருக்கிறது. இன்றைய வலைப்பதிவுலகம் போலவே பன்முகப் பார்வைகளை உள்ளடக்கியதாக எண்பதுகளுக்குப் பிந்திய சிற்றிதழ்ச்சூழல் இருந்துள்ளது. எண்பதுகளின் இறுதியில் தொடங்கி இன்றுவரை தொடரும் சில இதழ்கள் உட்பட தீர்மானமான இலக்குடன் வந்த இதழ்களும் அவற்றில் இருந்தன.சிற்றிதழ் பரவலாக்கத்தை இன்னொரு விதமாகவும் வலைப்பதிவோடு ஒப்பிட முடிகிறது. வலைப்பதிவுகளை இன்று திரட்டிகள் வழியாக வாசிப்பது போலவே சிற்றிதழ் திரட்டிகளும் அன்று இருந்தன.தமிழ்ச் சிற்றிதழ்களைச் சேகரித்து கண்காட்சி அமைத்துப் பாதுக்காத்த சில நண்பர்களுக்கு எல்லா சிற்றிதழாளர்களும் தங்கள் சிற்றிதழின் ஒரு பிரதியை அனுப்புவது வழக்கமாக இருந்தது. கல்வித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த நசன் அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர். அவர் தான் சேகரிக்கும் சிற்றிதழ்களின் விவரம் முகவரி மற்றும் சில குறிப்பிட்ட படைப்புகளின் அறிமுகம் அடங்கிய காலாண்டிதழ் ஒன்றை வெளியிட்டு வந்தார். அந்த இதழின் பெயர் சிற்றிதழ்ச் செய்தி. சிற்றிதழ்ச் செய்தி இதழ் தமிழில் வெளியாகும் அனைத்து இதழ்கள் பற்றிய விவரங்களை இதழாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பரிமாறி சிறந்த தகவல் திரட்டியாக செயல்பட்டு வந்தது. பொள்ளாச்சி நசன் இப்போது தமிழம்.நெட் தளத்தின் மூலம் தனது சேகரிப்புக்களை பதிவு செய்திருப்பதோடு தாய்த்தமிழ்ப் பள்ளியையும் இணையம் வழி தமிழ் கற்பிக்கும் சேவையையும் வழங்கி வருகிறார்.அடுத்து திருச்சியைச் சேர்ந்த நண்பர் தி .மா சரவணன் என்பவர் தனது கலைநிலா நூலகத்தின் மூலம் தமிழ் சிற்றிதழ்களை சேகரித்து தமிழகம் முழுவதும் அவற்றை கண்காட்சியாக வைத்து சிற்றிதழ்ப் பரவுதலுக்கு உறுதுணையாக இருந்தார். அவரும் சிற்றிதழ் விவரங்கள் அடங்கிய வெளியீடுகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.கோவையைச் சேர்ந்த குன்றம் இராமரத்நம் என்ற படைப்பாளர் தாராமதி என்ற சிற்றிதழை நடத்தி வந்தார். அவரும் பிற சிற்றிதழ் நண்பர்களுமாக தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்கத்தை தோற்றுவித்தனர். பின்னர் அவர் தொடங்கிய முங்காரி என்ற சிற்றிதழ் தமிழ்ச்சிற்றிதழ் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழாக நடத்தப் படுகிறது. சங்கத்தில் இணையும் உறுப்பிதழ்கள், சங்கத்துக்கு வரும் இதழ்கள் போன்றவை இந்த மாத இதழில் தொடர்ந்து அறிமுகம் செய்யப் படுகின்றன. அதில் தரப்பட்டுள்ள முகவரிகளில் தொடர்பு கொண்டு தேவையான சிற்றிதழை வாசகர்கள் நேரடியாகப் பெற இயலும்.முங்காரிஆசிரியர்: குன்றம் மு.இராமரத்நம்புலமைப் பண்ணை,சுகர்கேன் அஞ்சல்,கோவை-641 007.தமிழ்ச்சிற்றிதழ்ச் சங்கத்தில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்ற சில நண்பர்கள் உலகத்தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர். அதன்பொதுச் செயலாளர் வதிலை பிரபாவின் மகாகவி இதழே சங்கத்தின் குரலாக ஒலிக்கிறது. இதிலும் இந்தச் சங்கத்தின் உறுப்பிதழ்கள் தொடர்ந்து பட்டியலிடப்பட்டு அறிமுகம் செய்யப் படுகின்றன. பிற சிற்றிதழ்களும் அறிமுகம் செய்யப் படுகின்றன.மகாகவிஆசிரியர்: வதிலை பிரபா9-16-18/2, ஒற்றைத் தெரு,வத்தலக்குண்டு- 624 202திண்டுக்கல்மாவட்டம்வெகுஜன இதழ்களின் சமூக அரசியல் பரப்புரைகளின் கயமைகளை தோலுரித்துக் காட்டும் அற்புதமான கருத்துக் களஞ்சியங்களாக சிற்றிதழ் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அறிந்த விஷயங்களின் புரிந்த பலவற்றின் புரியாத, தெரியாத பக்கங்களை அறிந்து கொள்ள முடியும். ஆழமான வாசிப்பை விரும்புகிறவர்களுக்கு வாசித்தலின் பின்னான சிந்திப்பை தரும் படைப்புக்களை, மக்களின் மொழிகளில் உருவான படைப்புக்களை வாசிக்கலாம்.

நன்றி : சிந்தாநதி

சௌந்தர சுகன்

சௌந்தர சுகன் 250
1987 ஜூனில் ஆரம்பித்து இந்த மாதம் தனது 249 வது இதழை வெளியிடும் வரை தொய்வில்லாமல் ஒரு தனிநபர் சிற்றிதழ் நடத்த முடியுமா என்ற ஆச்சரியத்தையும் தந்து, அதற்கு மேலாக பத்தோடு பதினொன்று என்ற அளவில் இல்லாமல் இன்றுவரை தனித்துவம்மிக்க இதழாக வெளி வருகிறது சௌந்தர சுகன்.கையெழுத்து இதழாக ஆரம்பித்து அச்சிதழாக தொடர்ந்தபின் கணினி அச்சுக் கோர்ப்பில் ஆப்செட்டில் வந்த போதும் அதன் அடையாளமோ உள்ளடக்கத்தின் தீர்க்கமோ மாறவே இல்லை. விளம்பரங்களே வெளியிடாமல் எந்த சமரசங்களும் செய்து கொள்ளாமல் வெளி வருகிறது என்பதும் சுகனை பிற சிற்றிதழ்களில் இருந்து தனித்துவப் படுத்துகிறது.வண்ணப்படங்களும் பகட்டுகளும் இல்லை. கலைநயமிக்க ஓவியங்கள் அல்லது படைப்புக்கு தேவையான புகைப்படங்கள் இவை தவிர பெரிய அலங்காரங்கள் எதுவும் இல்லை. ஆனால் 120 பக்கங்களுக்கான உள்ளடக்கத்தை சுமார் 54 பக்கங்களில் நெருக்கமாக அச்சிடுவது அதன் சிக்கனம் எனலாம். பத்து ரூபாயில் தரமான உள்ளடக்கத்துடன் இருபது ஆண்டுகளாக மாதந்தோறும் வெளிவரும் சிற்றிதழ்...இளமை அரும்பிய பருவத்தில் தஞ்சை பூமியில் இருந்து க.சு.சரவணன் வெளியிடத் தொடங்கிய சுந்தரசுகன் பின்னர் பதிவுக் காரணங்களுக்காக சௌந்தரசுகனானது. கடித இலக்கியம் இதன் பயணத்தில் மிகப்பெரிய அடையாளம். இலக்கியவாதிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட இலக்கிய வாழ்வியல் சுவை கொண்ட கடிதங்களை அவர்களிடமிருந்து பெற்று கடித இலக்கியமாக அவ்வப்போது வெளியிட்டு வருகிறது சுகன்.ஆண்டு தோறும் தஞ்சை பிரகாஷ் என்ற படைப்பாளியின் நினைவுமலர் வெளியிடுகிறது. அரசியல் சமூகத்தளங்களில் எண்ணக்கண் திறப்போம் என்ற முழக்கத்துடன் தீர்க்கமான தலையங்கங்கள், கூர் என்ற பெயரில் வாசகர்களின் விரிவான விமர்சனப் பக்கங்கள், விளக்கமான புத்தக விமர்சனங்கள், சமூகவியல் படைப்பாக்க போராளிகளை அறிமுகம் செய்யும் நேர்முகங்கள், ஜனரஞ்சக இதழ்களில் காண முடியாத தரமுள்ள கதைகள், கவிதைகள் என சுகனின் படைப்புலகம் சிந்தனைத் தளத்தில் தாக்கத்தை தரவல்லதான சுற்றத்தைத் கொண்டது.இன்று பிரபலமடைந்துள்ள, பிரபலமடைந்து வரும் பல கவிஞர்கள், கவிதாயினிகள் ஆரம்ப களமாக சுகனில் கவிதை புனைந்தவர்கள். குறிப்பாக தஞ்சைப்பக்கமிருந்து வந்த எந்தக் கவிஞரும் சுகனில் எழுதியிராமல் இருந்திருக்க இயலாது. விளம்பரங்களை ஏற்காமல் தனிமனித உழைப்பில் பொருளில் தொடரும் இந்தச் சிற்றிதழ் மார்ச் இதழ் 250 வது இதழாக மலர்கிறது.249 வது இதழ் தலையங்கத்தில் கடந்து வந்த பாதை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு அந்த வெளியீட்டு விழாவை நண்பர்களோடு கொண்டாட முடிவு செய்து அதுபற்றி கூறுவது..."தலையங்கப் பக்கத்தில் இந்த விழா பற்றிய செய்திகள் தேவையா என்று சிலர் நினைக்கக் கூடும். இது சுகன் இதழ் விழா... ஒரு சிற்றிதழ் தமிழ்ச் சமூகத்தில் எப்படி புரண்டு வருகிறது என்பதை அவசியம் பதிவு செய்ய வேண்டும். இத்தகையப் பதிவுகள் தான் நாளைய நம்பிக்கைகளை முளைக்க வைக்கும் தட்பவெப்பமாய் அமையும். இந்த விழா நோக்கம் பெரும் கூட்டத்தை கூட்டுவது அல்ல. உணர்வாளர்கள் ஒன்று கூடி ஒருவருக்கொருவர் தம்தம் வெப்பத்தை பரிமாறிக் கொள்ளும் சந்திப்பு தான் இது. அடுத்தக் கட்ட பாய்ச்சலை எப்படி நிகழ்த்துவது என்பதை வேறு எங்கு போய் கற்க முடியும். நாம் கூடி, நாம் பேசி நாம் சிந்தித்து நாம் தானே செயலாற்ற வேண்டும்...என்ன சரிதானே?"சௌந்தர சுகன் - 250 - விழா16-3-2008 - ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில்...(ஜூபிடர் திரையரங்கம் அருகில்)
*சௌந்தரசுகன்அம்மாவீடுசி-46,
இரண்டாம் தெருமுனிசிபல் காலனி,
தஞ்சாவூர் - 613007
ஆண்டுச் சந்தா ரூ.120.

நன்றி : சிந்தாநதி

பனிக்குடம்

சிற்றிதழ் அறிமுகம்: பனிக்குடம்

பெண்ணின் அடையாளம் எது?
"பனிக்குடம்" கவிஞர் குட்டி ரேவதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ். பெயர் பறைசாற்றுவதைப் போல இது பிரத்யேகமான பெண்ணிய இதழ்.""பெண்ணிய மொழிக்கான உச்சரிப்புகளைக் கண்டுபிடித்தலும் பெண்ணியம் ஓர் இயக்கமாக வளர சமன்பாடுகளை ஆக்கும் பெண்ணியக் கவிதைகளைப் படைத்தளித்தலும் பெண்ணியக் கருத்தாக்கத்தை உரையாடலாக்கி, அதிர்ந்து பரவச் செய்தலும் இவ்விதழின் முக்கியமான பணிகள்"" என்கிறார் ரேவதி.பிரமிளின் பிரசுரிக்கப்படாத கவிதை, பாப்லோ நெருடாவின் கவிதை குறித்த பார்வை, ஃபமிதா ரியாஸின் ஐந்து கவிதைகள், சுகிர்தராணியின் கவிதைகள், இரா.கை. சங்கரின் கவிதை என்று உண்மையிலேயே பனிக்குடத்தை வியாபித்திருக்கின்றன கவிதைகள்.அமிர்த ஷெர்கில் மற்றும் புகைப்படக் கலைஞர் டோரதியாலாங் பற்றிய குறிப்புகளும் படங்களும் உள்ளன. குறிப்புகள் மேலோட்டமாக இல்லாமல் விரிவாக இருந்திருக்கலாம்.உமா மகேஸ்வரியின் "வெறும் பொழுது" பற்றிய மாலதியின் விமர்சனம் இலக்கிய விமர்சனம் என்பதைத் தாண்டிய ஒரு வித்தியாசமான தொனியில் இருக்கிறது.கவிதை, கவிதை சார்ந்த பரிமாற்றங்களுமே பத்திரிகையின் உயிர்ச் சரடாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாலும் அதில் பெண்மொழி என்பதைத் தாண்டிய ஒரு தனித்துவ அடையாளத்தை உருவாக்கிக்கொள்வதும் அவசியம். பெண் என்பவள் உடல் சார்ந்தவள் மட்டுமே இல்லை. ஆனால் காலம் காலமாக அவள் அதுதான் என்று அவளுக்கு போதிக்கப்பட்டு வந்துள்ளது. பெண்ணியம் அந்தச் சித்தரிப்புகளை உடைத்து வெளிவருவதை விட்டு அதையே அதன் அடையாளமாக, முகவரியாக மாற்றிக்கொள்ள முனைவது அவசியமா?இதழ் வடிவமைப்பிலும் இன்னும் சிறிது கவனம் செலுத்தலாம்.விலை: ரூ. 10, ஆண்டு சந்தா ரூ. 50,
23, அகத்திமுத்தன் தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.

நன்றி : சிஃபி.காம்

புது எழுத்து

சிற்றிதழ் அறிமுகம் : புது எழுத்து
எண்ணிக்கையில் குறைவான வாசகர்கள், குறைவான முதலீடு, குறுகிய வாழ்வு ஆகிய தன்மைகளை கொண்டிருப்பதாலேயே “சிறுபத்திரிகை” எனும் பெயர் நிலைபெற்றுவிடவில்லை. தீவிர இலக்கியத்தின் மறுபெயர் சிறுபத்திரிகை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஐரோப்பா, அமெரிக்கா அகிய நாடுகளின் தீவிர இலக்கிய வரலாற்றுக்கும் பொருந்தும். இலக்கியத்தின் மதிப்பும் அதில் மக்களின் ஆர்வமும் பொதுவாகத் தாழும்போது இயல்பான நிகழ்வாகவும் துணிகரமான எழுச்சியுடனும் அதை எதிர்த்து வினையாற்றி வந்திருப்பவை “சிறுபத்திரிகைகள்” தாம். அவை ஒருவிதமான எதிர் நீரோட்டத்தை தமது இயக்கத்தில் வைத்துள்ளன.அதன் இயக்கம் எப்போது நிற்கும் (பணமின்மை, தரமான படைப்புகள் இன்மை) என்ற அநிச்சய நிலையே அவற்றின் தரநிர்ணய அளவுகோல் எனச்சொல்லலாம்.
அவ்வாறான சிறுபத்திரிகை இயக்கத்தின் வழியில் “புது எழுத்து” இதழும் ஒன்று. கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ச்சியற்று வெளிவரும் இச்சிற்றிதழ் ஒவ்வொரு இதழிலும் இரண்டு புத்தகங்களை உள்ளடக்கியது. முதல் புத்தகத்தில் கடந்த மற்றும் சமகால இலக்கிய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் கதைகளும், இரண்டாவது புத்தகத்தில் மேற்கத்திய இலக்கிய அறிஞர்களை அறிமுகம் செய்யும் முயற்சியாக அவர்களின் இலக்கிய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் கதைகளும் இடம்பெறுகின்றன.
தவிர, தரமான இலக்கிய படைப்புகளை புது எழுத்து பதிப்பகம் நூல்வடிவில் வெளியிட்டும் வருகிறது.
புது எழுத்து வாசிக்க விரும்புவோர் பாலைக்குயில்கள் நூலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
புது எழுத்து குறித்த சந்தா மற்றும் இதர தொடர்புகளுக்கு,
மனோன்மணி,
39, ஜே.கே.சி. தெரு,காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்,தமிழ்நாடு-635113.
தொலைபேசி : 04343-252665,மின்னஞ்சல் : puduezuthu@gmail.com
- பாம்பாட்டிச் சித்தன்

நன்றி : வலம்புரி இதழ்

Sunday, July 20, 2008

மணல் வீடு

மணல் வீடு - சிற்றிதழ் அறிமுகம்
சிற்றித‌ழ்க‌ள் உருவாக்கும் விவாத‌ங்க‌ளும், அத‌ன் விளைவுக‌ளும் ப‌டைப்புக‌ளை அடுத்த‌ த‌ள‌த்துக்கு ந‌க‌ர்த்தும் முக்கிய‌மான‌ கார‌ணிக‌ளாக‌ இருக்கின்ற‌ன‌. தீவிர‌ இல‌க்கிய‌த்தில் சிற்றித‌ழ்க‌ள் த‌விர்க்க‌ இய‌லாத‌வை. படைப்பியக்கத்தில் வெகுச‌ன‌ இத‌ழ்க‌ளும், இடைநிலை இத‌ழ்க‌ளும் செய்ய‌த் த‌ய‌ங்கும் அல்ல‌து செய்ய‌விய‌லாத‌ எவ்வித‌மான‌ முய‌ற்சிக‌ளையும் சிற்றித‌ழால் செய்துவிட‌ முடியும். மணல்வீடு முதல் இதழ் வெளிவந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. இதழ் வந்தவுடன் சில கவிதைகளை வாசித்துவிட்டு பதினைந்து நாட்களுக்குப் பிறகாக ஹரிகிருஷ்ணின் "நாயி வாயிச்சீல" என்ற சிறுகதையை வாசித்தேன். அர‌வாணி த‌ன் வாழ்வில் ச‌ந்திக்கும் அவ‌ல‌ங்க‌ளை துல்லியமாக ப‌திவு செய்திருக்கும் முக்கிய‌மான‌ சிறுக‌தை.தொட‌ர்ந்து ம‌ற்ற ப‌குதிக‌ளையும் வாசிக்கும் போது ஒரு முழுமையான‌ சிற்றித‌ழாக‌ முத‌ல் இத‌ழில் த‌ன்னை ம‌ண‌ல் வீடு நிலை நிறுத்திக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.குறிப்பிட‌த்த‌க்க‌ பரிசோத‌னை முய‌ற்சிக‌ளாக‌ ராச‌மைந்த‌னின் "தெல்ல‌வாரியின் நாட்குறிப்பிலிருந்து", ஆதிர‌னின் "என்றார் க‌ட‌வுள்" ஆகிய‌ன‌ அமைந்திருக்கின்ற‌ன‌. இசை,இள‌ஞ்சேர‌ல்,சுப்ரபார‌தி ம‌ணிய‌ன், கூத்த‌லிங்க‌ம், த‌.ந‌.விசும்பு, பெருமாள் முருக‌ன், இன்பா சுப்பிர‌ம‌ணிய‌ன், ந‌ரன், இன்குலாப் மற்றும் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ஆகியோரின் க‌விதைக‌ள் இட‌ம் பெற்றிருக்கின்றன‌. ந‌ர‌னின் "எறும்புக‌ள் ப‌ற்றிய‌ சில குறிப்புகள்", இசை ம‌ற்றும் இள‌ஞ்சேர‌ல் ஆகியோரின் கவிதைகள் என‌க்குப் பிடித்திருந்த‌ன‌. பா.மீனாட்சிசுந்த‌ர‌த்தின் வ‌ச‌ன‌க‌விதைக‌ள் குறிப்பிடப் பட வேண்டியவை.பாமா, ம‌திக‌ண்ண‌ன், செல்வ‌புவியர‌ச‌ன் ஆகியோரின் சிறுக‌தைக‌ள், வே.மு.பொதிய‌வெற்ப‌ன்,ஆதிர‌ன்-வ‌சுமித்ர‌ ஆகியோரின் ப‌டைப்புக‌ள் இட‌ம் பெற்றிருக்கும் இவ்வித‌ழின் வாசிப்ப‌னுவ‌ம் சில‌ த‌ள‌ங்களை தொட்டு வ‌ருவ‌தாக‌ அமைகிற‌து.த‌லைய‌ங்க‌த்தில்,சிற்றித‌ழ் ம‌னித‌ மேம்பாட்டிற்கான‌ செய‌ல்த‌ள‌ங்க‌ளில் த‌னக்குரிய‌ ப‌ங்க‌ளிப்பைச் செய்ய‌ த‌யாராக‌ இருக்க‌ வேண்டும் என்று எழுதியிருப்ப‌து க‌வ‌னிக்க‌த் த‌க்கது. சிற்றித‌ழின் ப‌டைப்புக‌ள் அப்ப‌டி அமைந்திருக்க‌லாம், இப்ப‌டி அமைந்திருக்க‌லாம் என்று க‌ருத்து சொல்வ‌தைப் போன்ற‌ பைத்திய‌கார‌த்த‌ன‌ம் வேறொன்று இருக்க‌ முடியுமா என்று தெரிய‌வில்லை.சிற்றித‌ழ் த‌ன் பாதையை தானே அமைத்துக் கொள்ளும் ஓடை. அது ஏற்புக‌ளையும், நிராக‌ரிப்புக‌ளையும் பெரும்பாலும் பொருட்ப‌டுத்துவ‌தில்லை. அத‌ன் போக்கில் விட்டுவிடுவ‌து ந‌ல‌ம். ம‌ண‌ல் வீடு த‌ன‌க்கான‌ பாதையை அமைத்துக் கொள்வ‌தில் எந்த‌ச் சிர‌ம‌மும் இருப்ப‌தாக‌த் தோன்ற‌வில்லை.
தொட‌ர்புக்கு:மு.ஹ‌ரிகிருஷ்ண‌ன்,
தொலைபேசி: 098946 05371
மின்னஞ்சல்: manalveedu@gmail.com
நன்றி : பேசலாம், வா.மணிகண்டன்