"இவ்விதழ் பல்சுவை இதழாக வெளிவருகிறது. கலை, இலக்கியம், சமூகம், மொழி, தேசம், தெய்வீகம், போன்றப் பல சுவைகள் இவ்விதழில் காணப்படும். ஏதேனும் இÉம் சார்ந்தப் பார்வைக்கோ, இயக்கம் சார்ந்த சிந்தனைகளுக்கோ, வலுக்கொடுக்கும் முயற்சி இவ்விதழில் காணக் ¸¢டைக்காது. இப்பிரபஞ்ச இயக்கத்தில், இது இப்படித்தான் என்று எதையும் தீர்மானமாக முடிவு செய்துவிட முடியாது. எது எப்படியும் மாறும். அதற்கான சூழலை காலம் கொண்டு வந்து சேர்க்கும்.
முடிந்தவரை இவ்விதழ் சக மனிதனின் துயர்களையபாடுபடும். அவனின் மகிழ்ச்சி, துக்கம், இயலாமை, கோபம் இவற்றையே எதிரொலிக்கும். சக மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களை அவிழ்க்க அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொள்ளும்" என்கிற அறிவிப்புடன் செப்டம்பர் 2005இல் வெளிவந்த இதழ் குழலோசை. இதன் ஆசிரியர் வெ.கோகுலமுத்தரசன். கவிதை, சிறுகதை, நூல்விமர்சனம், மொழிபெயர்ப்பு, நேர்காணல், கட்டுரை என வெளியாகி வருகின்றன.
தற்போது இவ்விதழ் கணிப்பொறி ஒளியச்சு நகலில் வெளி வருகிறது. வண்ணைசிவா, தங்கம் சரவணன், சூரியராஜன், செந்தூரம் ஜெகதீ‰, பாக்யம் சங்கர், இர.முனுசாமி, கோ.மகேசன், வெ.கோகுலமுத்தரசன், ச.அறிவழகன் போன்றோர்கள் இவ்விதழில் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.
சிறிய அளவில் இவ்விதழ் வெளிவந்தாலும் தரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
முகவரி :
குழலோசை,
146, இரண்டாவது தெரு,
நேதாஜி நகர்,
தண்டையார்பேட்டை,
சென்னை - 81.
சந்தா விவரம் :
இதழ் நன்கொடை - ரூ. 5.00
ஆண்டு சந்தா - ரூ. 50.00
நன்றி : அந்திமழை
Wednesday, January 14, 2009
அதிர்வு
" 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றுரைத்த வள்ளலாரின் காலடித் தடங்கள் பதித்த கடலூர் மண்ணிலிருந்து தமிழின உறவுகள் கைகோர்க்கும் முற்போக்கு முயற்சிகளோடு இதோ உங்களின் கைகளில் கொடுத்திருக்கின்றோம் முதல் அதிர்வினை" என்கிற அறிவிப்புடன் Êசம்பர் 2005இல் இருந்து வெளிவந்துகொண்டிருக்கிறது 'அதிர்வு' - இலக்கியப் பண்பாட்டு மாத இதழ். இதன் ஆசிரியர், தடா.நல்லரசன், ஆசிரியர் குழு : புகழ் மங்கான், கு.பரிதிவாணன், வி.சு.அன்புச்செல்வன், சிவா.கார்த்திகேயன், ஏழுமலை, கா.வெற்றியழகன்.
கவிதை, கட்டுரை, சிறுகதை, நூல்விமர்சனம், நேர்காணல், மொழிபெயர்ப்பு என வெளியாகி வருகின்றன. பிடல்காஸ்ட்ரோ, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களது சிந்தனைகள் ஆங்காங்கே வெளியிடப் படுகின்றன. 'தெரிந்து கொள்ளுங்கள்' என்ற பகுதியில் வழக்கிலுள்ள பிறமொழிச் சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொற்கள் வழங்கப்படுகின்றன. படைப்புகள் பெரும்பாலும் அரசியல் விழிப்புணர்வூட்டும் தன்மையுடன் வெளிவருகின்றன. தலித்தியம், தமிழ் தேசியம், மார்க்சியம் சார்ந்த கோட்பாடுகளை வெளிப்படுத்துவனவாக படைப்புகள் வெளிவருவது அதிர்வின் தனித்தன்மை எனலாம். மிகவும் முற்போக்கான கருத்துகளை தமிழின் தொன்மை வடிவங்களான ஒப்பாரி, தாலாட்டு வடிவில் கவிதைகள் வெளிவருவதும் அதிர்வின் சிறப்பாகும். அவ்வகையில் முதல் இதழில் வெளியான 'எத்தனை முறைதான் அழுவது' எனும் தலித்தியப் பாடலும், இரண்டாம் இதழில் வெளியான 'ஈழத்தாலாட்டு' பாடலும் குறிப்பிடத்தக்கன.
'கெடல் எங்கே தமிழர் நலம்
அங்கெல்லாம் சென்றுகிளர்îசி செய்க' என்கிற
பாவேந்தர் பாரதிதாசனின் எழுச்சிப் பாடலோடு அவரது படமும் முதல் இதழின் அட்டையில் வெளியானது. "நாணல்கள் தலையாட்டும் ஆற்றங்கரைகளோடு, மூலிகைச் செடிகள் படர்ந்திருக்கும், வாய்க்கால், வரப்புகள் என பசுமைபூத்த இலைகள் வருடும் இயற்கையோடு இயற்கையாய் தமிழ் கிராமங்கள்தோறும் இலக்கிய படைப்புகளைப் பதிவு செய்யமுடியாமல் அடைகாத்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் படைப்புகளையும், நகரங்கள் தோறும் நச்சுப் புகை நுகர்ந்து நான்கு சுவற்றுகள் சுயநலத்தோடு தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தூங்கி வழிகின்ற இலக்கிய ஆர்வத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் படைப்புகளையும் பதிவு செய்து அவர்களை மெருகேற்றுவதே இதழின் நோக்கமும் தாகமும் ஆகும்" என இதழின் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது முதல் இதழின் தலையங்கம். முதல் இதழில் வெளியாகியுள்ள இள.புகழேந்தியின் 'கடவுளைப் படைத்தவன் மனிதன்', கா.தமிழ்வேங்கையின் 'திரைப்படத்தில் வன்முறை', பழநெடுமாறனின் 'சுவடுகள்' இரண்டாம் இதழில் வெளியாகியுள்ள வேல்தொண்டைமானின் 'தீர்வினைத்தேடி' ஆகியவை முக்கியமான கட்டுரைகளாகும்.
கா.தமிழ்வேங்கை, பைந்தமிழ்பாவை, அ.மோகன்ராசு, க.பூபாலன், பித்தன்கல்கி, ஏ.தனு‰கோடி, கு.பரிதிவாணன், ஆல்பேட்டைபாபு, ந.பர்னாட் பாத்திமா, அமுதராஜ், இரா.மோகன்தாசு, ந.சுரே‰ நாராயணன், வெண்ணிலவன், புவனாதனு‰கோடி, இரா.அப்பாஜி, தொ.எழில்நிலவன், கி.பாலு போன்றோரது கவிதைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. தெலுங்கானாவை சேர்ந்த அல்லம் ராசைய்யாவின் 'புயல்' மொழிபெயர்ப்புச்சிறுகதை இரண்டாவது இதழில் வெளியாகியுள்ளது.
சில நேரங்களில், நடையைக் குறித்து அக்கறை கொள்ளாமல் கருத்தை மட்டும் வெளிப்படுத்தும் கவிதைகள் வெளியிடப்படுகின்றன. அரசியலுடன், வெளிப்படுத்தும் முறையும் முக்கியம் என்பதைக் கவனத்தில் கொண்டு கவிதைகளை கறாராகத் தேர்வு செய்து வெளியிட்டால் அதிர்வுக்கு இன்னும் 'அதிர்வு' கூடும்.
ஆசிரியர் பற்றி....
விதைநெல், வாக்குமூலம், முகங்கள் கவிதைத் தொகுப்பும், 'தழும்புகள்' ஹைக்கூ அந்தாதி தொகுப்பு, 'திசைகள்' எனும் நவீன ஆத்திச்சூடி தொகுப்பும் எழுதியிருக்கும் தடாநல்லரசன், தமிழ் தேசிய அரசியலில் ஈடுபாடுள்ளவர்.
சந்தா மற்றும் முகவரி :
தனி இதழ் - ரூ. 5.00
ஆண்டு சந்தா - ரூ. 100.00
முகவரி :
4/7, சபாபதி தெரு,
மஞ்சகுப்பம்,
கடலூர் - 607 001.
பேச - 04142 284184, ௨௩0௪௭௭

'சம உரிமை' மாத இதழ்
கவிக்கோ அப்துல் ரஹ்மானைக் கொண்டு 'சம உரிமை' மாத இதழ் பிப்ரவரி மாதம் முதல் வெளியிடப்பட இருப்பதாக இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லாஹ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.'சம உரிமை' மாத இதழில் சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய தகவல்கள், சிறுபான்மையினரின் செய்திகள், சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிகழ்வுகள் குறித்த செய்திகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெறும்.'சம உரிமை' மாத இதழை அனுப்ப தமிழகமெங்குமுள்ள ஜமாஅத்துகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் குறித்த முகவரி மற்றும் தொலைபேசி எண்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இஸ்லாமிய இலக்கியக் கழகம்,எண் 27 உட்ஸ் சாலை,அண்ணா சாலை,சென்னை 600 002,தொலைபேசி : 044 28460127 / 9840040067,மின்னஞ்சல் முகவரி: ithayathulla@gmail.காம்
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
பிரம்மராஜன், கோணங்கி, பிரமிள்... மற்றும் ஒரு வேண்டுகோள்.

ஆர்வமுள்ளவர்களுக்கு ஒருவேளை இந்த பதிவு உதவலாம்... உதவாமலும் போகலாம்... என்றாலும்... சிறு பத்திரிகைகளின் காலம் முடிந்துவிட்டது என மூத்த எழுத்தாளரான அசோகமித்திரன் அறிவித்துள்ள நிலையில் சில சிற்றேடுகள் இப்போது வீரியத்துடன் தமிழில் வர ஆரம்பித்திருக்கின்றன. ஆங்கிலத்தில் அவான் கார்ட் (Avant - garde) என்றொரு சொல் உண்டு. இது இலக்கிய சொல் என்றாலும் ராணுவ உருவகம் கொண்டது. இதன் அர்த்தம் 'இலக்கிய முன்னணிப்படை'.புதிய மற்றும் சோதனை ரீதியான படைப்பாக்கங்களை ஒருபோதும் வணிக எழுத்தாளர்களாலோ, நடு இதழ் எழுத்தாளர்களாலோ படைக்க முடியாது. அந்த இதழ்களை நிரப்பும் பக்கங்கள் அந்தவகை எழுத்துக்களை என்றுமே கோர்க்காது. இலக்கிய முன்னணி படையை சார்ந்த எழுத்தாளர்களாலேயே அந்தவகை படைப்பை படைக்க முடியும். அதற்கு சிறு பத்திரிகைகள் மட்டுமே இடம் கொடுக்கும். இது உலக இலக்கிய சரித்திரத்தின் அனைத்து கலைகளிலும் பதிவாகியிருக்கும் விஷயம். கண்டிப்பாக ஜாய்ஸின் 'யூலிஸிஸ்' நாவலோ அல்லது ராபர்ட் மியூஸிலின் 'நிர்க்குண மனிதன்' போன்ற நாவலோ அல்லது 'டிக் ஷ்னரி ஆஃப் கசார்ஸ்' பிரதியோ நடுப்பத்திரிகைகளில் வர வாய்ப்பேயில்லை.இப்படியான பின்நவீனத்துவ சூழலில் மீண்டும் தமிழில் சில சிறு பத்திரிகைகள்...ஆத்மாநாமின் 'ழ' பத்திரிகை வழியே வெளிச்சத்துக்கு வந்த கவிஞர் பிரம்மராஜனின் 'மீட்சி' சிற்றிதழை அவ்வளவு சுலபத்தில் யாரும் மறந்துவிட முடியாது. பிரம்மராஜனின் கவிதைகள் புரியவில்லை... என விமர்சனம் எழுந்தபோது நாகார்ஜுனன், அவரது கவிதைகளில் உள்ள முன் - பின் வார்த்தை விளையாட்டை கட்டுடைத்து, கலைத்து எழுதிய கட்டுரை இன்றளவும் தமிழின் சிறந்த கட்டுரைகளில் ஒன்றாக இருக்கிறது. அதேபோல் மீட்சியின் உலக கவிதைகள் தொகுப்பு பல கவிஞர்களுக்குள் வேகத்தை கிளப்பிய தொகுப்பு.அதே பிரம்மராஜன் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் 'நான்காம் பாதை' சிற்றிதழை ஆரம்பித்திருக்கிறார். முதல் இதழ் இப்போது வெளியாகியிருக்கிறது. தனியிதழ் ரூ. 50. ஆண்டுச் சந்தா ரூ. 200. கூரியில் செலவு தனி.தொடர்புக்கு A30, ASTC நகர், பென்னாகரம் சாலை, தருமபுரி - 636 703. தொலைபேசி எண்: 04342 - 281239. கைபேசி: 98941 41752 e - mail: bramoraj@yahoo.comஅடுத்து 'லயம்'. பிரமிளை முன்வைத்து இயங்கிய அதே 'லயம்' சிற்றிதழ்தான். பத்தாண்டுகளுக்கு பின் மீண்டும் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. ஆசிரியர் மாறவில்லை. அதே கால சுப்ரமணியம்தான். பிரமிளின் பிரசுரமாகாத படைப்புகளையும் அவரை குறித்த விமர்சனங்களையும் 'லயம்' வெளியிட்டு வரும் என ஆசிரியர் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் பிரமிளின் பிரசுரமாகாத கவிதையொன்று இந்த இதழில் வெளியாகியுள்ளது. அந்தக் கவிதை...பிலம்ஒப்புமைப் பின்னலின்நரம்பு முடிச்சுகளாய்நக்ஷத்ரங்கள் -அண்டத்தின் அநந்தங்கள்.அவற்றின்ஈர்ப்பு வெளிக் கோளங்கள்ஒன்றை ஒன்றுஊடுருவுகின்றன.ஜடத்தினுள் ஜடம் சிக்கிஎங்கோ ஒரு முடிச்சில்அதீத ஜடத் திணிப்பு.அதையே நோக்கிவளைகிறது புவனவெளி.பிரபஞ்ச நியதியில்பிறக்கிறது புரட்சி.ஒப்புமைப் பின்னல்கலைகிறது.ஒரு புள்ளி நோக்கிஅண்டத்தின்பரிமாணங்கள் சரிந்துஒரே ஒருநக்ஷத்திரத்தின் முடிச்சினுள்ளேவீழ்கிறது காலவெளி.ஒளிரும் ஒரு நக்ஷத்திரத்தின்ஜடம் ஒரு பொந்தாகிதன் ஒளியை அதுதானே கபளீகரிக்கிறது.வெளி வளைந்து குவிந்துவெளியில் பிறக்கிறதுஒரு பிலம்.(??? 1955)தனியிதழ் ரூ. 15. ஆண்டுச் சந்தா ரூ. 100.தொடர்புக்கு எஸ். விமலா, 155, கிழக்கு வீதி, நேரு நகர், சத்தியமங்கலம் - 638 402. தொலைபேசி எண்: 04295 - 220097. கைபேசி: 9442680619எந்த சிமிழுக்குள்ளும் அடங்காமல் இருக்கும் கோணங்கியின் 'கல்குதிரை', தமிழ் சிறுபத்திரிகை வரலாற்றில் தனியிடம் கொண்டது. அந்த இதழ் வெளியிட்ட மார்க்யூஸ் சிறப்பிதழும், உலக சிறுகதை தொகுப்பும் ஏற்படுத்திய அதிர்வு இன்றுவரை தொடர்கிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த இதழ் வரலாம்... வராமலும் போகலாம்... அப்படி வந்தால் எப்போது வரும் என்பது கோணங்கிக்கே தெரியாது...இந்த நிலையில் கோணங்கியின் ஒரு புத்தகம் வாசகனுக்காக காத்திருக்கிறது...வணிக இதழ்களிலோ, நடு இதழ்களிலோ எழுதாமல், விலைபோகாமல் சிறு பத்திரிகைகளில் மட்டுமே இயங்குவதை பிடிவாதமாக பின்பற்றி வரும் ஐகான், கோணங்கி. புரியாமல் எழுதுகிறார்... என்ற குற்றச்சாட்டு அவர் மீது காலம் காலமாக வீசப்பட்டு வருகிறது... இதற்கு கோணங்கி என்ன செய்வார்?அவரது சில சிறுகதைகளும், சில குறுநாவல்களும் இணைந்து 'இருள்ள மெளத்திகம்' என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. பின்னிணைப்பாக 'தன்னுடன் தன் நேர்காணல்' இணைக்கப்பட்டுள்ளது. தேவதச்சன், ந. நடராஜன், பூபதி, அறிவழகன் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு கோணங்கி பதில் சொல்லியிருக்கிறார்.விலை: ரூ. 212. 'தென் திசை' பதிப்பகத்தின் ஒர் அங்கமான 'காதை' வெளியீடு.தொடர்புக்கு A19, Srinivasa reddy street, T. Nagar, Chennai - 600017. தொலைபேசி எண்: 044- 2433 8169. e - mail: kkbooks07@rediffmail.comஇறுதியாக... பதிவுலகை சேர்ந்த இருவருக்கு இந்தப் பதிவின் வழியே ஒரு கோரிக்கை. ஒருவர் ஜமாலன். 'காலக்குறி' சிற்றிதழை மீண்டும் அவர் ஆரம்பிக்க வேண்டும். அடுத்தவர் நாகார்ஜுனன். 'வித்தியாசம்' இதழை திரும்பவும் தமிழ் சூழலுக்கு அவர் கொண்டு வரவேண்டும். வருவார்கள். பின்நவீனத்துவசூழல் அவர்கள் இருவரையும் மீண்டும் சிற்றிதழை தொடங்க வைத்துவிடும்...
நன்றி: பைத்தியக்காரன்,
naayakan.blogspot.com/2008/03/blog-post_17.html

தமிழ்நெறி - தமிழ்த்தேசிய இதழ் - மலேசியா
தமிழ்நெறி - தமிழ்த்தேசிய இதழ்
மலேசியத் தமிழ் இதழியல் துறையில், மறுவரவு மேற்கொண்டு மீண்டும் வந்துள்ளது 'தமிழ்நெறி' என்னும் தமிழ்த் தேசிய மாதிகை (மாத இதழ்). "தமிழைக் காப்போம் தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்" என்ற முழக்கத்தோடு இந்தச் செப்தெம்பர் திங்களில் தமிழ்நெறி இதழ் வெளிவந்துள்ளது. தமிழ்நெறிச் சிந்தனைகளைத் தாங்கி தமிழ் மீட்புக்காகவும் காப்புக்காகவும் குரல்கொடுக்கும் ஏடாக வெளிவந்துள்ள 'தமிழ்நெறி' இதழை ஒவ்வொரு மலேசியத் தமிழனும் மனதார வாழ்த்தி வரவேற்க வேண்டும்.
தமிழ் மொழியின நலன் தொடர்பிலான பல அரிய செய்திகளையும் கட்டுரைகளையும் இந்த இதழ் தாங்கிவந்துள்ளது. அறிஞர் அண்ணா, பெரியார், மாவீரன் திலிபன் ஆகியோர் பற்றிய சிறப்புக் கட்டுரைகள், மாணவர்களுக்கான தமிழ்நெறிக் கல்வி, தமிழ்நெறித் தெளிவு வினாவிடை பகுதி, உளவியல் கட்டுரை, ஈழத்துக் கட்டுரை என பல்வேறு அரிய செய்திகளை உள்ளடக்கி மிகவும் தரமான தாள்களில் கவரும்படியாக இவ்விதழ் வெளிவந்துள்ளது. "தமிழ்நெறியின் வேலை விழிப்புணர்வு ஏற்படுத்துவதே. இது கருத்துப்பரப்பும் அறிவுசான்ற இதழ். எனவே, தமிழ், தமிழர் தொடர்பான அரிய செய்திகளைத் தேவையான கருத்துகளைத் தமிழ் மக்களுக்குச் கொண்டுபோய்ச் சேர்த்து, அவர்களை விழிப்படையச் செய்யும் பணியே தமிழ்நெறிப்பணி" என்று இதழின் பொறுப்பாசிரியரும் மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தலைவருமாகிய இரா.திருமாவளவன் அவர்கள் தலையங்கத்தில் எழுதியிருப்பது பலித்திட வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் அவா.மலேசியத் தமிழர்க்குத் 'தமிழ்நெறி' புதிய இதழல்ல. கிட்டதட்ட 14ஆண்டுகளுக்கு முன்பே 1994 ஏப்பிரல் திங்கள் மலேசியாவில் தமிழ்த் தேசியத்தை உயர்த்திப்பிடிக்கும் நோக்கில் புயலென புரப்பட்ட எழுச்சிமிக்க ஏடுதான் 'தமிழ்நெறி'. மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனாரின் அறிய சிந்தனையில் கருவாகி கழகத்தின் உயிர்த்தொண்டர்களின் அயராத உழைப்பில் உருவாகி மலேசிய மண்ணில் தமிழ் முரசு கொட்டிய வரலாற்றுச் சிறப்பு இந்தத் 'தமிழ்நெறி' இதழுக்கு உண்டு.ஆனால், வெளிவந்த சில மாதங்களில் பல்வேறு இடர்களின் காரணமாக தமிழ்நெறி நின்று போனது. பின்னர், பத்தாண்டுகள் கழித்து 2004 மே திங்களில் 'தமிழ்நெறி' மீண்டும் புத்துயிர் பெற்று புதிய வடிவில் புதிய தோற்றத்தில் வெளிவந்தது. தமிழ் உணர்வையும் தமிழர் உணர்ச்சியையும் முன்னெடுக்கும் ஒரு இதழை வாங்கி அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவும் உணர்வும் கெட்டுப்போன தமிழர்களிடையே, பெயர்போட முடியாமல் மீண்டும் தடைபட்டது 'தமிழ்நெறி'.ஆயினும், உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்குக் காலந்தோறும் பல்வேறு தடைகளையும், இடர்களையும், இருட்டடிப்புகளையும், மறைப்புகளையும் தாண்டி இன்றளவும் நிலைபெற்று தனித்தன்மையோடு வாழ்ந்து வரும் தமிழ்மொழி போல, 'தமிழ்நெறி' இதழும் பல்வேறு சிக்கல்களை கடந்து இப்போது மறுபடியும் புதுவடிவம் பெற்றுள்ளது. எந்தத் தடைக்கும் அஞ்சாமல், வந்த தடங்கல்கள் அனைத்தையும் வென்று மீண்டும் வெளிவந்துள்ள 'தமிழ்நெறியின்' நெஞ்சுரத்திற்குத் தமிழர்கள் தலைதாழ்த்தி வணக்கம் செய்யவேண்டும்.இவ்விதழ் இந்நாட்டில் பலமிக்க ஓர் இதழாக உருவெடுக்க வேண்டும். அதற்குண்டான அனைத்து வினைப்பாடுகளையும் ஆழ ஆராய்ந்து ஆசிரியர் குழுவினர் செயல்பட வேண்டும். தமிழின்; தமிழர்களின் நலன்பேணும் செய்திகளைத் தாங்கிவருவதோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கி சரியான இலக்கை நோக்கி தமிழரை வழிநடத்த வேண்டும். தமிழ்ப்பற்றாளர்கள் ஊணர்வாளர்கள் அனைவரையும் தமிழ்நெறி எட்டிப்பிடிக்க ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும். நாடு முழுவதும், 'தமிழ்நெறி' அறிமுக விழா, வாசகர் விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தித் தமிழ்நெறியைப் பரவச் செய்ய வேண்டும். ஆண்டுக் கட்டண உறுப்பினர்களைப் பெருக்குவதற்கான வழிவகைகளை காணவேண்டும். நாடு முழுவதும் உள்ள தமிழ் சார்ந்த இயக்கங்களின் ஆதரவை நாடி ஒவ்வொரு ஊரிலும் வட்டாரத்திலும் தமிழ்நெறி உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகள், தமிழ் ஆசிரியர்கள், மாணவர்களை இலக்காகக் கொண்டு தக்க திட்டங்களைத் தீட்டி முன்னேற வேண்டும். இடைநிலைப்பள்ளிகள், உயர்க்கல்விக் கூடங்கள் ஆகியவற்றுக்குள் தமிழ்நெறி ஊடுறுவும் வழிகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.இத்தனைக் கருத்துகளும் 'தமிழ்நெறி' ஆசிரியர் குழுவினருக்குத் தெரியாதவை அல்ல. இருந்தாலும், தமிழ்நெறி தமிழரின் உயிர்நெறியாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தால்தான் இத்தனைக் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.இவ்விதழின் வெற்றியில் மலேசியத் தமிழரின் பங்கு, குறிப்பாகத் தமிழ்ப்பற்றாளர், உணர்வாளர் என்று முழங்கிக்கொள்வோரின் பங்கு மிக அளப்பரியதாகும். அதோடு, தமிழால் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்கள், அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இவ்விதழை பலமிக்க இதழாக வளர்த்தெடுக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.காரணம், தமிழை முன்னெடுப்பது ஒன்றே இந்த நாட்டில் தமிழர்களின் நூற்றாண்டு வரலாற்றைக் காப்பதற்கான வழியும்; தமிழர்களின் அடுத்த நூற்றாண்டின் வாழ்வை, வளர்ச்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பும் ஆகும். தமிழ் இல்லையேல் தமிழர்க்கு எதுவே நிலைக்காது என்பதை மேற்குறிப்பிட்டவர்கள் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே, ஒவ்வொருவரும் தமிழ்நெறியை வாங்கி ஆதரவு செய்ய வேண்டியதும் இன்னும் பலரை வாங்க ஊக்குவிப்பதும் பிறந்த இனத்துக்குச் செய்யும் கடமையாகும்.தமிழ்நெறி இதழ் பற்றிய முக்கிய விவரங்கள்:-1.இதழின் விலை ம.ரி.3.00 மட்டுமே2.தமிழ்நெறி உறுப்பினர் கட்டணம் ம.ரி20.00 (6 மாதங்களுக்கு)3.தமிழ்நெறி முகவரி: Lot, 274, Kampong Bendahara Baru, jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor.4.தொலைபேசி: 03-61874103 தொலைப்படி: 03-61874099
தமிழ்நெறி இதழை வாங்குவோம்!
தமிழைக் காப்போம்!
தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்!
நன்றி: சுப.நற்குணன் - மலேசியா
http://www.thirutamil.blogspot.com/

Sunday, December 28, 2008
தமிழ்ச் சிற்றிதழ்களுக்குக் கை கொடுங்கள்!

இருபது - முப்பது ஆண்டுகளுக்கு முன் மக்களுக்கு இருந்த படிக்கும் ஆர்வம் படிப்படியாகக் குறைந்திருக்கிறது. இருப்பினும் நாளேடுகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. வணிக நோக்கோடு! சிற்றேடுகளும் நூற்றுக் கணக்கில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.வணிக ஏடுகள் விளம்பரங்களால் கொழுத்து வருகின்றன. அவற்றுக்கு அரசு விளம்பரங்களும் போய்ச் சேருகின்றன. காகை - மாலை நாளேடுகள் வணிக நோக்கோடு வெளிவருபவையே: அவற்றுக்குப் பணம் சம்பாதிப்பதே குறிக்கோள்! கொள்கைக்காக வரும் ஏடுகள் சிலவே! சிற்றேடுகள் என்பவை பெரும்பாலும் ஏதோ ஒரு கொள்கைக்காக வருபவையே! இவை மெழுகுவத்திபோல் தங்களையே உருக்கிக்கொண்டு சிந்தனை வெளிச்சத்தை வழங்குபவையே! இவைகள்தாம் மக்களைச் சிந்திக்கத் தூண்டுபவை!தந்தை பெரியாரின் குடிஅரசு, பேரிறிஞர் அண்ணாவின் திராவிடநாடு, கலைஞரின் முரசொலி போன்றவைதாம் அரசியல் மாற்றத்தையே ஏற்படுத்தியவை. இந்த இதழ்கள் இன்றும் பலரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை தமிழின எழுச்சியின் வரலாற்றுக் களஞ்சியங்களாகும். தமிழின முன்னேற்றத்துக்காக இன்றும் பல சிற்றிதழ்கள் குரல் கொடுத்து வருகின்றன. இவை வணிக இதழ்கள் அல்ல. இவை மாதந்தோறும் பொருளாதார நெருக்கடியில் மூச்சுத் திணறிவருகின்றன. இவற்றிற்குத்தான் தமிழக அரசு ஆதரவுக் கரத்தைக் கொடுக்கவேண்டும்.இன்று தமிழகத்தில் 3000க்கு மேற்பட்ட அரசு நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களுக்குச் சிற்றிதழ்களை வாங்கி ஆதரிக்கலாம். மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது அரசு விளம்பரங்களை வழங்கியும் உதவலாம்.பின்வரும் வகையில் உதவலாம்:1. இருபது ஆண்டுகளுக்குமேல் வரும் இதழ்கள்; ஆர்.என்.அய். பதிவும், அஞ்சலகச் சலுகையும் பெற்ற இதழ்கள்.2. பத்து ஆண்டுகளுக்குமேல் வெளிவரும் இதழ்கள்.3. அய்ந்து ஆண்டுகளுக்குமேல் வெளிவரும் இதழ்கள் எனப் பகுத்துக்கொண்டு இந்த ஆண்டு இருபது ஆண்டுகளுக்கு மேல் வெளிவரும் இதழ்களுக்கும், 2009ஆம் ஆண்டு அய்ந்து ஆண்டுகளுக்குமேல் வெளிவரும் இதழ்களுக்கும் அரசு உதவலாம்.ஒவ்வொரு மாவட்ட நூலகமும் 100 இதழ்களை பெற்று உதவலாம்.- முகம் மாமணி.-குறிப்பு: சிற்றிதழ் அன்பர்களே! மேற்கண்ட கோரிக்கைகள் தங்களுக்கானது; தங்களது சிற்றிதழ்களிலும் வெளியிட்டு உதவுக. கூட்டுக்குரல் கொடுத்தால் கலைஞர் அவர்கள் உடனே ஆவன செய்யக்கூடும்.(முகம், இதழ் - செப்டம்பர் - 2008)
நன்றி:கீற்று / சிந்தனையாளன் - அக்டோபர், 2008

Thursday, November 27, 2008
சிற்றிதழ் இயக்கம்:
சிற்றிதழ் இயக்கம்: நிகழ் என் அனுபவம், ஞானி
நான் தமிழ் இலக்கிய மாணவன் என்றாலும் எழுத்து காலத்திலிருந்தே தொடர்ந்து சிற்றிதழ்களோடு உறவுகொண்டிருந்தேன். செல்லப்பாவோடு நடத்திய உரையாடல்கள் மூலம் புதுக்கவிதை, இலக்கியம், திறனாய்வு குறித்த புதுப் பார்வைகளும் எனக்குள் இடம்பெறத் தொடங்கின. கசடதபற தொடங்கிப் படிகள், பிரக்ஞைவரையில் எல்லா இதழ்களையும் தொடர்ந்து வாசித்ததோடு கோவையில் இவை குறித்து இலக்கிய அரங்குகளில் நண்பர்கள்கூடி விவாதித்தோம். கசடதபற மூலம் நவீன ஓவியம், நவீன நாடகம் பற்றிய பார்வைகளையும் செரித்துக்கொண்டோம். இலக்கியம் என்ற தளம் கலாச்சாரம் முதலிய தளங்களோடும் நெருக்கமான உறவு கொண்டது. நவீன இலக்கியம் குறித்த விவாதங்கள் எங்கள் பார்வையை விரிவுபடுத்தின. க.நா.சு., கு.ப.ரா., மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, நகுலன், அசோகமித்திரன், பிரமிள், ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி போன்றோரது எழுத்துக்களை மிகுந்த கவனத்தோடு படித்து விவாதித்தோம்.
புதிய தலைமுறை (1968-70) காலம் முதற்கொண்டே கட்சி மார்க்சியரோடு நாங்கள் முரண்பட்டதோடு மாவோவின் நெறியில் மார்க்சியத்தை வளமாகப் பயின்றோம். தோழர் எஸ். என். நாகராஜன் முன்வைத்த மார்க்சியம் எங்களுக்குள் ஆழமாகப் பதிந்தது. எழுத்து, கசடதபற போன்ற சிற்றிதழ்கள் மார்க்சியம், திராவிட இயக்கம் ஆகியவற்றுக்கு எதிரான பார்வைகளையே கொண்டிருந்தன. கட்சி மார்க்சியரோடு கூர்மையாக முரண்பட்டபடியே தமிழ் இலக்கியம் மற்றும் நவீனத்துவப் பார்வைகளை நாங்கள் கற்றுக்கொண்டிருந்தோம். கசடதபற போன்ற இதழ்களில் இடம்பெற்ற மேற்கத்தியச் சார்பையும் நாங்கள் மறுத்தோம். ஞானக்கூத்தனின் எட்டு கவிதைகளில் உள்ளோட்டமாக இருக்கும் அந்நியமாதலை மார்க்சிய நண்பர்களும் கண்டுகொள்ளவில்லை. மார்க்சின் கையெழுத்துப் படிகளில் இடம்பெற்றிருந்த அந்நியமாதல் குறித்து எஸ். என். நாகராஜன் எங்களுக்கு ஏற்கெனவே கற்பித்திருந்தார்.
1970களின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் இலக்கிய வெளிவட்டம், படிகள் ஆகிய இதழ்களின் நண்பர்கள் எங்களுக்கு நெருக்கமாயினர். நடராசன், ராஜ்கௌதமன், ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன், தமிழவன், ஜி. கே. இராமசாமி ஆகியவர்களோடும் நிஜ நாடக இயக்கம் மு. இராமசாமி, திருச்சியில் திரைப்படச் சங்க நண்பர்கள் மற்றும் மதுரை, சென்னை முதலிய நகரங்களில் இருந்த நண்பர்கள் பலரும் கூடி இலக்கு என்னும் கலாச்சார இயக்கத்தைத் தோற்றுவித்தோம். குறைந்தது ஐந்தாண்டுகள் மிகச் சிறப்பாக நடைபெற்ற இலக்கு சந்திப்புகள் எங்கள் புரிதலை விரிவுபடுத்தின. சிற்றிதழ் இயக்கம் என்பது அடிப்படையில் வணிகக் கலாச்சாரத்திற்கு எதிராக, மக்கள் மத்தியில் ஆரோக்கியமான கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கிற இயக்கமாகத்தான் இருக்க முடியும். இந்த இயக்கம் இலக்கியத்தோடு மட்டும் உறவுகொண்டதாக இல்லாமல் நவீன ஓவியம், நவீன நாடகம், புதிய வகைத் திறனாய்வு முறை முதலியவை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். முதலாளியத் திற்குச் சேவைசெய்வதாக இந்த இயக்கம் இருக்க முடியாது என்பன போன்ற உணர்வுகள் எங்களுக்குள் உருவாகத் தொடங்கின.
புதிய தலைமுறை , வானம்படிகள் அடுத்து பரிமாணம் ஆகிய இதழ்கள், இயக்கங்களோடு உறவு கொண்டிருந்ததன் பின்னர் கோவையிலிருந்த நண்பர்கள் சிலரோடு இணைந்து 1983இல் நிகழ் இதழைத் தொடங்கினோம். ஏழுவரையிலான இதழ்களில் கூடுதலாக இலக்கியத்திற்கே இடமளித்தோம். தொடக்கத்தில் சுகுமாரன் ஆசிரியராக இருந்தார். அடுத்து நண்பர் க. ரத்தினம். கவிதைகள், சிறுகதைகள் ஆகியவற்றோடு திறனாய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றன. சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில கவிதைகள் நாவல் குறித்துப் பல்வேறு இதழ் களில் வெளிவந்த மதிப்பீடுகளைத் தொகுத்து, இவற்றிற்கு எதிர்வினை என்ற முறையில் நிகழ் நண்பர்கள் விரிவான உரையாடலை நடத்தி, எங்கள் கருத்துரைகளைத் தொகுத்து வெளியிட்டதைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். வானம்பாடி இயக்கம் நின்றுவிட்ட நிலையில், அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமானவர்களில் ஒருவரான நண்பர் அக்னிபுத்திரனின் உரையாடலை வெளியிட்டோம். தெரிகள் இதழுக்காக சுந்தர ராமசாமி, என்னிடம் கேட்டுப் பெற்றிருந்த டி. எஸ். எலியட்டின் இலக்கியக் கொள்கை என்ற எனது விரிவான கட்டுரை நிகழில் இடம் பெற்றது. சு.ரா. இக்கட்டுரையைத் திருப்பி அனுப்பியிருந்ததையும் இக்கட்டுரையின் தகுதி பற்றி நம்பிக்கையோடு சுகுமாரன் இந்தக் கட்டுரையை வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தி வெளியிட்டதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
கன்னட மொழியிலிருந்து நண்பர் அரசு மொழிபெயர்த்த சிறந்த கவிதைகள் பலவற்றைத் தொடர்ந்து வெளியிட்டோம். விமலாதித்த மாமல்லன், கோணங்கி ஆகியவர்களின் சிறுகதைகளும் நிகழில் வெளிவந்தன. 7ஆம் இதழோடு நிகழை நிறுத்தினோம். 16, 24 பக்கங்கள் என்ற அளவில் மட்டும் இதுவரையிலான நிகழ் இதழ்கள் அமைந்தன.
1988இல் கண்பார்வை பழுதுபட்டதும் பள்ளிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற நிலையில், இலக்கியத்தோடும் மார்க்சியத்தோடும் விரிந்த அளவில் நண்பர்கள், இலக்கியவாதிகளோடும் நான் அதுவரை கொண்டிருந்த உறவுகளிலிருந்து விடுவித்துக்கொள்ள இயலாத நிலையில் சில நண்பர்களின் ஒத்துழைப்போடு நிகழை மீண்டும் தொடங்கினேன். எண்பதுகளின் இறுதியில் உலக அளவில் அரசியல், பொருளியல் முதலிய எல்லாக் களங்களிலும் மாபெரும் அதிர்வுகள், மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. குறிப்பாகக் கிழக்கு ஐரோப்பாவில் சோசலிசத் தகர்வு. 1975இல் நெருக்கடி நிலையால் இந்திய அரசின் அணுகுமுறையிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இலக்கியவாதிகள் முதற்கொண்டு இனி எவரும் பழைய உலகத்தோடு வாழ முடியாது என்றானது. உலக அளவிலான அதிர்வுகளை உள்வாங்கிக்கொண்டு அவற்றிற்கு எதிர் வினையாற்றுவது அவசியமானதாக மாறியது. தமிழகத்தில் நிறப்பிரிகை முதலிய இதழ்கள் முற்றிலும் நவீனமான பார்வையை முன்வைத்துச் செயல்பட்டன. அமைப்பியல் போன்ற புதிய அணுகுமுறைகள் தமிழ் இலக்கிய உலகில் எதிரும் புதிருமான ஆய்வுகள் மற்றும் விமர்சனங்களைத் தோற்றுவித்தன. எம். டி. முத்துக்குமாரசுவாமி, நாகார்ஜுனன் தொடங்கி, வேறு சிலரும் அமைப்பியல், மொழியியல், நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், பின்நவீனத்துவம் என்றெல்லாம் பெருமளவில் பேசத் தொடங்கினர். இத்தகைய சிக்கலான சூழலை எதிர்கொள்ளும் முறையில் நிகழ் செயல்பட்டது. 88இல் தொடங்கி 96வரை 25 இதழ்களை நண்பர்கள் ஒத்துழைப்போடு நான் வெளியிட்டேன். 48, 52, 64, 80,1 00 எனப் பக்கங்கள் கூடிக்கொண்டிருந்தன. நூல் மதிப்புரைகளை நிறைய வெளியிட்டோம். அவ்வப்போது சிறுகதைகளும் நிகழில் இடம்பெற்றன. புதிய நண்பர்கள் பலர் நிகழில் எழுதினர்.
நிகழின் முக்கியப் பணிகள் சிலவற்றை இங்கே சுருக்கமாகவேனும் நான் பதிவுசெய்ய வேண்டும். முதன்மையாக சோவியத் ஒன்றியத்தில் தொடங்கிய சோசலிசத் தகர்வுக்கு எங்கள் எதிர்வினைகள் என்னவாக இருந்தன என்பதைச் சொல்ல வேண்டும். உலகில் இனி மார்க்சியத்திற்கு வாழ்வில்லை. சோசலிசம் பொய்யாய், பழங்கனவாய்ப் போய்விட்டது. இனி சோசலிசத்தைப் புதுப்பிக்க முடியாது. இத்தகைய கருத்துகளை முதலாளியர் மட்டும்தான் தீவிரமாகப் பரப்பினர் என்பதில்லை. மார்க்சியர் என்று தம்மை நம்பிக்கொண்டிருந்த கட்சி சார்ந்தவர்க்குள்ளும் இத்தகைய அவநம்பிக்கைகள் எழுந்தன. 1965 முதல் எங்களை நெறிப்படுத்திய தோழர் எஸ். என். நாகராஜன் அவர்களைப் பொறுத்தவரை நாம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து இருந்ததுதான் இப்பொழுது நடந்திருக்கிறது. மார்க்சியம் மீண்டும் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் இப்பொழுது கிடைத்திருக்கின்றன என்று உறுதியாகப் பேசினார். இம்முறையில் எஸ். என். நாகராஜன் முன்வைத்த ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை நிகழ் தொடர்ந்து வெளியிட்டது. இப்பார்வையை ஒத்த நண்பர்கள் சிலரும் தொடர்ந்து எழுதினர்.
உற்பத்திச் சக்திகளுக்கு முதன்மை தருகிற மேற்கத்திய மார்க்சியத்தை ஆணியம் என்றும் உற்பத்தி உறவுகளுக்கு முதன்மை தருகிற கீழை மார்க்சியத்தைப் பெண்ணியம் என்றும் நாகராஜன் பெயரிடுகிறார். இதிலிருந்து மார்க்சியத்தின் உட்கூறுகளான சூழலியம், பெண்ணியம், தலித்தியம் முதலான விளக்கங்களை நாம் பெற முடியும். சூழலியம், பெண்ணியம், தலித்தியம் போன்ற கருத்தியல்களில் நிகழ் ஆர்வத்தோடு பலரிடமிருந்தும் கட்டுரைகளைப் பெற்று வெளியிட்டது. உலகளவில் மேற்கத்தியரின் ஆதிக்கம் தொடக்கத்தில் டங்கல் திட்டம் பிறகு பொது வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக உலக வணிக நிறுவனம் என்ற பெயர்களில் முன் வைக்கப்படுகிற மேற்குலகின் அரசியல், மற்றும் பொருளியல் ஆதிக்கம் குறித்த கட்டுரைகளை நிகழ் பெருமளவில் வெளியிட்டது. இரவி சீனிவாஸ் எழுதிய கட்டுரைகள் இம்முறையில் குறிப்பிடத்தக்கவை. பசுமைப் புரட்சி என்ற பெயரில் உழவர்களின் வாழ்வையும் நிலங்கள், நீர்நிலைகள் முதலியவற்றையும் நாசமாக்கும் போக்குக்கெதிராக இயற்கை வேளாண்மை குறித்த கட்டுரைகள் நிகழில் வெளியிடப்பட்டுள்ளன. இன்று இந்திய அளவில் பேசப்படுகிற அறிஞர் நம்மாழ்வாரின் கட்டுரைகளை நிகழ்தான் முதலில் வெளியிட்டது. சோவியத் ஒன்றியம் தகர்ந்த நிலையில் கியூபா தனக்கான வேளாண்மை முறை இயற்கை வேளாண்மையாகத்தான் இருக்கும் என்பதைக் கண்டுகொண்டதைக் குறித்தும் நிகழில் கட்டுரைகள் வெளியாகின.
நிகழின் கருத்தியல் வளமான மார்க்சியம் என்பதை உறுதிபடுத்தும் வகையில் பல துறை சார்ந்த கட்டுரைகள் நிகழில் தொடர்ந்து வெளியாயின. கட்சி மார்க்சியரைப் பொறுத்தவரை உளவியல் அறிஞர் பிராய்டைத் தொடர்ந்து சாடிக்கொண்டிருக்கும் நிலையில் எரிக் ப்ராம், மாஸ்லோ, விக்டர் ப்ராங்கள் முதலியவர்களைப் பற்றிய கட்டுரைகளையும் நிகழ் வெளியிட்டது. பிராய்டையும் மார்க்ஸையும் இணைத்துப் பார்க்கும் மனிதநேய உளவியலாளர் எரிக் ப்ராமைப் பின்பற்றி நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களுக்குள் ஆதிக்கம் எவ்வாறு உள்ளிருந்து செயல்படுகிறது என்பது குறித்து இரவி சீனிவாஸ§ம் பூரணச் சந்திரனும் விரிவாக எழுதினார்கள். நவீன கால இயற்பியலும் இந்திய ஆன்மிகமும் இணைய முடியும் என்ற முறையில் ப்ரிட்ஜ் ஆப் காப்ரா எழுதியதை மேற்கோள்காட்டி சுஜாதா எழுதினார். விஞ்ஞானமும் விபூதிப் பட்டையும் என்று பெயரிட்டு சுஜாதாவைச் சாடி பிரமிள் எழுதினார். ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் குறித்து ஆழமான முறையில் விமர்சித்து ஜீவ ஒளி எழுதினார். ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி முதலிய துறைகளில் நிகழ்ந்த மாபெரும் சாதனைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிஞர் தரம்பாலும் வேறு சிலரும் நூல்கள் வெளியிட்டுள்ளனர். தரம்பாலின் ஆய்வுகளைத் தொகுத்து ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் கட்டுரை எழுதினார். இந்தியாவின் அரசியல், பொருளியல், வரலாறு, முதலிய அனைத்தினுள்ளும் இந்துத்துவம் எவ்வாறு செயல்பட்டது, செயல்படுகிறது என்று இந்து, இந்தி, இந்தியா என்று எஸ். வி. ராஜதுரை எழுதிய நூலை விமர்சித்து ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் எழுதினார். நிகழ் அவருக்கு அரியணையிட்டு ராஜ மரியாதைசெய்தது என்று தலைப்பிட்டு எஸ். வி. ஆர் மறுப்புரை தந்தார்.
காந்தியாரின் சத்தியாகிரகம் என்ற போர்முறையை கிராம்சி மறுத்தார் என்றும் ஏற்றுக்கொண்டார் என்றும் விவாதக் கட்டுரைகள் நிகழில் வந்தன. மேற்கத்திய மார்க்சியம் குறித்து இதைப் போலவே மாறுபட்ட மதிப்பீடுகளைத் தரும் கட்டுரைகளும் இடம்பெற்றன. ஜெரோமி ரிப்சின்சி என்பவரின் அர்ஜென் என்ற உலகளவில் புகழ் பெற்ற நூல் குறித்து, சிங்கராயர் விரிவாக எழுதினார். டார்வினின் வாழ்க்கை ஒருவகையில் அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கை. இர்விங் ஸ்டோன் எழுதிய நூலை அழகிய நடையில் சிங்கராயர் தமிழில் தந்தார். இவ்வகையான கட்டுரைகளை மரபான, வைதீக மார்க்சியர் கண்டுகொள்ளவேமாட்டார்கள். மார்க்சியம் தன்னளவில் முற்ற முடிந்த ஒரே மெய்யியல் என்றுதான் இவர்கள் உரத்துப் பேசுவார்கள். மார்க்சியம் தன்னளவில் விரிந்துகொடுத்து உலகளவில் வளர்ந்துவரும் அறிவுத் துறை முதலியவற்றின் ஆக்கங்களைத் தனக்குள் செரித்துக்கொள்ள முடியும் என்னும் நோக்கத் தோடுதான், பூகோ, ஐவான் எலிச் முதலியவர்கள் பற்றிய கட்டுரைகளையும் நிகழ் வெளியிட்டது. உலகளவிலான தலைசிறந்த இலக்கியப் படைப்புகள் குறித்த விரிவான கட்டுரைகளும் இந்நோக்கில்தான் வெளியிடப்பட்டன. டால்ஸ்டாய், தாஸ்தாவெஸ்கி, டி. எஸ். எலியட், கிரகாம்கிரின், சால்பெல்லோ முதலியவர்கள் குறித்த கட்டுரைகளும் இடம்பெற்றன.
ஏசுநாதரைப் புரட்சியாளர் எனச் சில விடுதலை இறையியலாளர்கள் காண்கின்றனர். இந்தியாவிலும் இக்குரல் எழுகிறது என்ற முறையில் நிகழ் சில கட்டுரைகளை வெளியிட்டது. கிறிஸ்துவத்திற்குள் இந்தியாவில் இவ்வகையில் முதல் குரலை எழுப்பியவர் காப்பன் பாதிரியார். இவரது கருத்துகளைச் சா. தா. செல்வராசு தொகுத்து எழுதினார். விடுதலை இறையியல் குறித்து இன்னொரு கட்டுரை தந்தவர் அருள்திரு அல் போன்சு. விடுதலை இறையியலுக்குள் மக்களுக்கான இறையியல் குரல் இல்லை என்று மறுத்து டேவிட் சித்தையா எழுதினார். இவருக்கு அல்போன்சு பதில் தந்தார்.
இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படுகின்ற மார்க்சிய அறிஞர் தேவி பிரசாத். இவரது உலகாயுதம் என்ற புகழ்பெற்ற நூலின் ஒரு முக்கியமான ஒரு கட்டுரையைச் சிங்கராயர் தொகுத்துத் தந்தார். ஜெயமோகன், தேவி பிரசாத்தின் பொருள் முதல்வாத எல்லைகள் குறித்து எழுதினார். இந்திய மெய்யியல் குறித்துக் கலாநிதி நா. சுப்பிரமணியன் எழுதிய விரிவான கட்டுரையும் நிகழில் இடம்பெற்றது.
போலந்தில், சீனாவில், 90களிலும் மார்க்சியம் மக்கள் மத்தியில் எத்தகைய எதிர்வினையைச் சந்திக்கிறது என்பது குறித்த கட்டுரைகள் வெளியாயின. ஹங்கேரி பற்றி யமுனா ராஜேந்திரன், போலந்தில் தன் அனுபவம் குறித்து இந்திரா பார்த்தசாரதி, சீனாவில் மார்க்சியம் இனி என்னவாக இருக்கும் என்பது பற்றி சச்சிதானந்தம், ரஷ்யாவில் தான் கண்டது என்ன என்பது பற்றி ஜீவானந்தம் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் வெளிவந்தன.
1968இல் வசந்தத்தின் இடி முழக்கம் என இந்தியாவில் வெடித்த நக்சல் பாரி இயக்கம் கேரளாவில் ஏன் தோற்றது என்பது பற்றிய தீவிரமான அக்கறையோடு பாஷா போஷினி என்ற மலையாள இதழில் மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 5 முக்கியமான கட்டுரைகளைத் தமிழில் தந்தார் இளைஞர் மனோகரன். தமிழகத்திலும் நக்சல்பாரி இயக்கம் அரசின் கடுமையான தாக்குதல்களுக்குள்ளாகிச் சிதைந்தது. இது பற்றிய கட்டுரைகளை எவ்வளவு முயன்றாலும் பெற முடியவில்லை.
இனி, நிகழின் இலக்கியப் பார்வை குறித்து: தலித்தியம் பற்றிய விவாதங்களை நிகழ் ஊக்குவித்தது. தலித்தியம், பெண்ணியம் நோக்கிலான கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் முதலியவற்றை நிகழ் வெளியிட்டது. திராவிட இயக்கத்தின் பார்வை, எல்லைகள் குறித்துக் கட்டுரைகள் வெளிவந்தன. அரசு, அதிகாரம், முதலாளியம் ஆகியவற்றுக்கு இடம் தரும்போது எவ்வகை இயக்கமும் தத்துவமும் தமக்குள் சிதைவடையும். கட்சி மார்க்சியத்திற்கு மட்டுமல்லாமல் திராவிட இயக்கத்திற்கும் நேர்ந்திருப்பது இதுதான் என்பதை இக்கட்டுரைகள் சுட்டிக்காட்டின. பின்நவீனத்துவம் குறித்த கட்டுரைகளும் நிகழில் இடம்பெற்றன. முத்துக் குமாரசுவாமி, நாகார்ஜுனன், நோயல் இருதயராஜ் முதலியோர் எழுதினர்.
நிகழில் வெளிவந்த கவிதை, சிறுகதைகள் முதலிய படைப்புகள் குறித்து இங்கே தொகுத்துச் சொல்லலாம். காலச்சுவடு இதழால் மறுக்கப்பட்ட ஜெயமோகனின் 'படுகை' சிறுகதை நிகழில்தான் வெளிவந்தது (கேரளாவில் பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டபொழுது ஆதிவாசிகளின் அவலம் குறித்து ஜெயமோகன் எழுதிய அருமையான கதை இது. அணைக்கட்டு முதலிய அறிவியல் ஆக்கங்களை மறுக்கக் கூடாது என்பது சு. ராவின் பார்வையாக இருந்தி ருக்கலாம். அணைக்கட்டு முதலிய நவீன ஆக்கங்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் அவலம் குறித்தது ஜெய மோகனின் பார்வை. இதில் எனக்கும் உடன்பாடு. நிகழில் இக்கதை வெளியானதை ஜெயமோகன் குறிப்பிட்டபொழுது ஞானிக்கு இலக்கியம் தெரியாது என்று சு. ரா கூறினாராம். ஞானிக்கு இலக்கியம் தெரியாது, ஜெயமோகனுக்கும் தெரியாது. சு. ராவுக்கு மட்டுமே தெரியும்.) ஜெயமோகனின் போதி என்ற சிறுகதையும் நிகழில் வெளியாயிற்று. ஒரிசாவில் ஏவுகணை ஆய்வுக்கான தளங்களுக்காக மக்களிடமிருந்து நிலம் அபகரிக்கப்பட்டபோது மக்கள் போராடினர். இந்தப் போராட்டம் குறித்து, கே. சி. லட்சுமி நாராயணன் மலையாளத்தில் எழுதிய கட்டுரையைத் தமிழில் ஜெயமோகன் நிகழுக்குத் தந்தார். இந்தியாவின் நீதி சாஸ்திரம் பற்றிய ஆனந்தின் ஆய்வையும் இதழுக்குத் தந்தார். இம்முறையில் ஜெயமோகன் நிகழுக்குப் பெரிதும் ஒத்துழைத்தார்.
நிகழில் ஜெயமோகன் தவிர காவேரி, தேவிபாரதி, நாஞ்சில் நாடன், சுப்ரபாரதிமணியன் முதலியவர்களின் சிறுகதைகளும் வெளியிடப்பட்டன. தருமராஜ் மிகச் சிறந்த தலித் சிறுகதை ஒன்றை எழுதினார். ஜெயமோகன் தவிர தேவதேவன், மனுஷ்ய புத்திரன், பாப்லோ அறிவுக்குயில், அண்ணாத்துரை கரிகாலன், அறிவன், எஸ்தர், எட்வர்டு என்று தொடங்கி ஒரு நூறு கவிஞர்களின் 300 கவிதைகளையாவது நிகழ் வெளியிட்டிருக்கும். நூல் மதிப்புரைக்கெனப் புதிய நூல்களை அனுப்பிய பெரும் பாலானவர்களின் நூல்களுக்குச் சிறப்பான மதிப்புரைகள் எழுதப்பட்டன. 250 நூல்களுக்கு இவ்வாறு மதிப்புரைகள் எழுதப்பட்டன. சிட்டி, அசோகமித்திரன், இந்திரா பார்த்த சாரதி, பிரமிள் முதலிய மூத்த தமிழறிஞர்களும் நிகழில் எழுதினர். எஸ்.என். நாகராஜனின் மார்க்சியம் கிழக்கும் மேற்கும் என்னும் நூல் குறித்து விரிவான விவாதங்கள் வெளியிடப்பட்டன. நாகராஜனின் நெறிப்படுத்தலோடு மக்கள் அறிவியக்கம் என்ற அமைப்பினைக் கோவை மற்றும் மதுரைத் தோழர்கள் இணைந்து உருவாக்கினோம். மக்கள் அறிவியல் என்ற புதிய பார்வையோடு கூடிய கட்டுரையை துரை மடங்கன் எழுதினார்.
நிகழோடு ஒத்துழைத்த நண்பர்கள் குறித்துச் சுருக்கமாகவேனும் சொல்ல வேண்டும். அறிவன், தாமரை ஆறுமுகம், அன்பு வசந்த குமார், கணகுறிஞ்சி ரத்தினம், பொன். சந்திரன், க. பூரணச்சந்திரன், சிங்கராயர், இரவி சீனிவாஸ், ஜீவ ஒளி, ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் இப்படி இன்னும் சிலரையேனும் குறிப்பிட வேண்டும். 96இல் நிகழை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பொருள் வசதிக் குறைவு என்பது ஒரு முக்கியமான காரணம். எனினும், நினைத்துப் பார்க்கிறபோது, நிகழின் சாதனை தமிழகச் சூழலில் மிக முக்கியமானது எனத் தோன்றுகிறது. எந்த ஒரு சூழலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்கள் கருத்தியல்கள் இல்லாமல், தனி இயக்கமென எதையும் செய்ய முடியாது. வெங்கட் சாமிநாதன், பிரமிள், சுந்தர ராமசாமி, எஸ்.வி. ராஜதுரை, தமிழவன், அ. மார்க்ஸ், எம். டி. முத்துக்குமார சுவாமி இவர்கள் ஒவ்வொருவரும் தமிழகச் சூழல்களில் தமக்கான கருத்தியலோடு, இயக்கத்தோடு தீவிரமாகச் செயல்பட்டவர்கள். இவர்களோடுதான் எஸ்.என். நாகராஜனையும் என்னையும் சேர்த்துக்கொள்கிறேன். இவர்களும் தமிழகச் சூழலை நிறைத்தவர்கள் அல்ல. இவர்களோடு க. நா. சு., முத்துசாமி, செல்லப்பா, அசோகமித்திரன், மு. இராமசாமி என எத்தனையோ பேரைச் சொல்ல முடியும். இவர்களுக்குள்ளும் பின்நிலையிலும் பல்வேறு இயக்கங்கள், கட்சிகளும் பல கலை, இலக்கியம் நாடகம், ஓவியம், வேளாண்மை என்றும் பல இயக்கங்கள், அரசியல் சூழல், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய இந்தியா மற்றும் உலகச் சூழல்.
நிகழில் வெளிவந்த கட்டுரைகளை வகைப்படுத்தி, தொகுத்து இதுவரை கீழ்வரும் 5 நூல்கள் வெளியிட்டேன். 1. இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம், 2. அறிவியல், அதிகாரம், ஆன்மீகம், 3. மார்க்சியம்:தேடலும் திறனாய்வும், 4. படைப்பியல்: சில சிகரங்களும் வழித் தடங்களும், 5. நிகழ் மதிப்புரைகள் 100. நிகழ் உண்மையில் தமிழகத்தில் ஒரு மாபெரும் கலாச்சார இயக்கத்தில் ஒரு பகுதியாக இருந்து தீவிரமாகவும் உண்மையாகவும் செயல்பட்டது. வளமான மார்க்சியத்தைக் காப்பாற் றியது நிகழின் ஒரு சாதனை. எஸ். என். நாகராஜன் தமிழகச் சூழலில் தீவிரமாகச் செயல்பட நிகழ் ஒரு கருவியாக இருந்தது. நாகராஜனோடு ஒத்துழைத்த நண்பர்கள் மரியாதைக்குரியவர்கள். இவர்கள் மத்தியில் என் வாழ்வுக்கும் நிறைவு ஏற்பட்டது.
இக்கட்டுரை பக்க அளவைக் கருதி சுருக்கப்பட்டுள்ளது.
நன்றி : காலச்சுவடு

Subscribe to:
Comments (Atom)