Friday, May 30, 2008

தென் ஆசியச் செய்தி

அய்யா திரு.பழ.நெடுமாறன் அவர்களை அறியாத தமிழர்கள் இருக்க முடியாது. அய்யாவின் சீரிய முயற்சியால் உலக தமிழர்களின் நலன் தாங்கிவரும் இதழ் தென் ஆசியச் செய்தி.

உலக தமிழர்களின் நலனை ஓங்கி ஒலிக்கும் தென் ஆசியச் செய்தியினை அனைவரும் வாங்கிப் பயனுற வேண்டும்.

இதழ் : தென் ஆசியச் செய்தி (திங்களிருமுறை)
ஆசிரியர் : திரு.பழ.நெடுமாறன்,நோக்கம் : தமிழர் நலம், தமிழீழம்......

விலை: தனி இதழ் :ரூ. 4.00,
ஆண்டுக்கட்டணம் : ரூ.100.00,
புரவலர் : ரூ.1000.00

முகவரி : 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை-04,
தொ.பேசி: +91-44-24640575 இணையதளம்: http://thenseide.com

Saturday, May 24, 2008

சிந்தனையாளன்


மார்க்சிய பெரியாரிய அம்பேத்காரிய சிந்தனைகளைத்தாங்கி, உலகத் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தீவிர அரசியல் விமரிசனங்களோடு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாரியல் அறிஞர் தோழர்.வே.ஆனைமுத்து அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருவது "சிந்தனையாளன்" திங்கள் ஏடு ஆகும்.


"இந்தியாவில் பொதுவுடைமை மலர, மார்க்சிய-பெரியாரிய நெறியில் தேசிய இனவழிப்பட்ட சம உரிமை உடைய சமதர்மக் குடிஅரசுகள் ஒருங்கிணைந்த உண்மையான கூட்டாச்சி அமைய ஆவன செய்தல்" என்ற முழக்கத்தோடு,


சம உரிமைக்காவலர்கள் என "மார்க்சு, லெனின், சிங்காரவேலர், பெரியார்" படங்களையும், சமூக நீதி காவலர்களாக "புலே, பெரியார், அம்பேத்கர், லோகியா" ஆகியோரின் படங்களையும் தாங்கி வருகிறது.


இதன் கொள்கை முழக்கங்களாக,


உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்! - மார்க்சு, எங்கல்சு


ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களே ஒன்று சேருங்கள்! -இலெனின்


ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே ஒன்று சேருங்கள்! -பெரியார் ஈ.வெ.இரா

ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
சிந்தனையாளன்,
19, முருகப்பா தெரு (மாடி),
சேப்பாக்கம்,
சென்னை - 600 005.
பேசி: 044-2852 2862.
விலை:
தனி இதழ் : உரூவா.10,
ஆண்டுக் கட்டணம் : உரூவா.120,
வாழ்நாள் கட்டணம் : உரூவா.1000.


தமிழர்கள் அனைவரும் வாங்கிப் பயன் பெற வேண்டும்.

நன்றி.

Friday, May 23, 2008

சிற்றிதழ்கள்

அன்புத் தமிழ் உறவுகளே!

சமூக, கலை, இலக்கிய ஆர்வலர்களாலும் சிந்தனையாளர்களாலும் பெரும் போராட்டங்களுக்கிடையில் நடத்தப்பெற்று வரும் சிற்றிதழ்கள் என்று அறியப்பெறும் தமிழ் இதழ்களை அறிமுகப்படுத்துவதே இத்தளத்தின் நோக்கமாகும். இவ்விதழ்கள் ஏனைய வெகுமக்கள் ஊடகங்களிலிருந்து மாறுபட்டு நல்ல மொழி மொழிநடையும், தீவிர சிந்தனைகளோடும் தத்தமது தளம் சார்ந்து ஆழ்ந்த கருத்துக்களோடும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலம் நமது பண்பாடும், மொழியும் காக்கப்படுவதோடு, வாசகர்கள் மத்தியில் நல்ல சிந்தனைகளையும் ஏற்படுத்திவருகின்றன.

இத்தகைய இதழ்களை தொடர்ந்து படிப்பதோடு இவற்றின் வளர்ச்சிக்கும் உறுதுணையாய் நாம் இருக்க வேண்டும் என்ற நோக்கில், இவ்விதழ்கள் பற்றிய சிறு அறிமுகமும், தொடர்பு முகவரிகளையும் இங்கே அறியத்தருகிறோம்.

நன்றி!