சிற்றிதழ் அறிமுகம் - கொம்பு

என ஆரம்பிக்கும் ஆசிரியரின் கோபத்திற்கு ஏற்ற கட்டுரைகளும், கவிதைகளும் நூல் முழுக்க விரவி கிடக்கின்றன. குறிப்பாக கணேசகுமாரனின், 'கொம்பன்' சிறுகதைகளை கூறலாம். மன்னர் காலத்தில் தொடங்கி நவீன காலம் வரை யானைகள் மனிதர்களிடம் சிக்கி படும் துன்பங்களை விவரித்துள்ளார். நமது காடுகளில் பல்லாயிரக்கணக்கில் சுற்றித் திரிந்த யானைகள், இன்று சில ஆயிரங்களாக குறைந்திருப்பதற்கு மனிதனே முக்கிய காரணம் என்பதை தனது கதைகள் மூலம் நிருபிக்கிறார். பசுமை இலக்கியத்திற்கு தனது பங்களிப்பாக 'கொம்பன்' சிறுகதைகளை தந்திருக்கிறார்.
நக்கீரன், ந.பெரியசாமி, சபரிநாதன், உள்ளிட்ட பலரின் கவிதைகள் நூலுக்கு பலம் சேர்க்கிறது. ச.முருகபூபதியின் தாம்போய் கதைகளும் சிறப்பாக அமைந்துள்ளன. பழங்குடி வாழ்வை தேடி அலையும் காந்திராஜனின் நேர்காணல் பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. நிறுவனமயமான இறை உருவங்கள் நமது தமிழ்நாட்டு குகை ஒவியங்களில் இல்லை என்றும், தமிழ் கடவுள் என்று கூறப்படும் முருகன் உருவம் கூட குகை ஒவியங்களில் இல்லை என்பதும் ஆய்விற்குரியது.
நக்கீரனின், 'மழைக்காடுகளில் திரியும் மருந்து கொள்ளையர்கள்' கட்டுரை நமது வளமிக்க மழைக் காடுகளில் பன்னாட்டு பெருங் குழுமங்களும், உள் நாட்டு பெரு முதலாளிகளும் நடத்தும் கொள்ளைகளை விரிவாக எடுத்துரைக்கிறது. காடுகளையும், காட்டுயிர்களையும் கணக்கின்றி அழிப்பது தொடர்ந்தால், காட்டுயிர்களையும், எழிலார்ந்த மலைகள், காடுகள், ஆறு, ஏரி, போன்றவற்றை அனுபவிக்கும் கடைசி தலைமுறையாக நாம் தான் இருப்போம் என்பது உறுதி.
அந்த வகையில், சமூக அவலங்களை பேச,எதிர்க்க வந்துள்ள தரமான சிற்றிதழ் எனலாம். அடுத்தடுத்த இதழ்களில் தொடர்ந்து எதிர்பார்க்கலாம்.
'கொம்பின் கூர்மை இசைப்பதற்கு மட்டுல்ல'- என்ற வரிகள் உண்மை என்று நூல் வாசிப்பு உறுதிபடுத்துகிறது.
ஆசிரியர்;
வெய்யில்
தொடர்புக்கு;
எண்.11, பப்ளிக் ஆபிஸ் ரோடு,
தேவி தியேட்டர் எதிரில்,
நாகப்பட்டினம் - 611 001.
அலைபேசி; 9952326742.
நன்றி: http://www.thadagam.com/index.php/books/bookscategories/shortmagazines/731-introductiontokombu
1 comment:
நன்று.
Post a Comment