Friday, July 25, 2008

புது எழுத்து

சிற்றிதழ் அறிமுகம் : புது எழுத்து
எண்ணிக்கையில் குறைவான வாசகர்கள், குறைவான முதலீடு, குறுகிய வாழ்வு ஆகிய தன்மைகளை கொண்டிருப்பதாலேயே “சிறுபத்திரிகை” எனும் பெயர் நிலைபெற்றுவிடவில்லை. தீவிர இலக்கியத்தின் மறுபெயர் சிறுபத்திரிகை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஐரோப்பா, அமெரிக்கா அகிய நாடுகளின் தீவிர இலக்கிய வரலாற்றுக்கும் பொருந்தும். இலக்கியத்தின் மதிப்பும் அதில் மக்களின் ஆர்வமும் பொதுவாகத் தாழும்போது இயல்பான நிகழ்வாகவும் துணிகரமான எழுச்சியுடனும் அதை எதிர்த்து வினையாற்றி வந்திருப்பவை “சிறுபத்திரிகைகள்” தாம். அவை ஒருவிதமான எதிர் நீரோட்டத்தை தமது இயக்கத்தில் வைத்துள்ளன.அதன் இயக்கம் எப்போது நிற்கும் (பணமின்மை, தரமான படைப்புகள் இன்மை) என்ற அநிச்சய நிலையே அவற்றின் தரநிர்ணய அளவுகோல் எனச்சொல்லலாம்.
அவ்வாறான சிறுபத்திரிகை இயக்கத்தின் வழியில் “புது எழுத்து” இதழும் ஒன்று. கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ச்சியற்று வெளிவரும் இச்சிற்றிதழ் ஒவ்வொரு இதழிலும் இரண்டு புத்தகங்களை உள்ளடக்கியது. முதல் புத்தகத்தில் கடந்த மற்றும் சமகால இலக்கிய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் கதைகளும், இரண்டாவது புத்தகத்தில் மேற்கத்திய இலக்கிய அறிஞர்களை அறிமுகம் செய்யும் முயற்சியாக அவர்களின் இலக்கிய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் கதைகளும் இடம்பெறுகின்றன.
தவிர, தரமான இலக்கிய படைப்புகளை புது எழுத்து பதிப்பகம் நூல்வடிவில் வெளியிட்டும் வருகிறது.
புது எழுத்து வாசிக்க விரும்புவோர் பாலைக்குயில்கள் நூலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
புது எழுத்து குறித்த சந்தா மற்றும் இதர தொடர்புகளுக்கு,
மனோன்மணி,
39, ஜே.கே.சி. தெரு,காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்,தமிழ்நாடு-635113.
தொலைபேசி : 04343-252665,மின்னஞ்சல் : puduezuthu@gmail.com
- பாம்பாட்டிச் சித்தன்

நன்றி : வலம்புரி இதழ்

1 comment:

pudhuezuthu said...

புது எழுத்து 11வது ஆண்டாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
மனோன்மணி,
ஆசிரிய்ர்-புது எழுத்து
9042158667