Thursday, November 27, 2008

அநங்கம்

அநங்கம்” மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ்
“அநங்கம்” மலேசிய தீவிர எழுத்தாளர்களையும் வாசகர்களையும் விமர்சகர்களையும் இணைப்பது
ஆசிரியர் : கே.பாலமுருகன் Balamurugan102@gmail.com , bala_barathi@hotmail.com
துணை ஆசிரியர் : ஏ.தேவராஜன்
ஆசிரியர் குழு
ப.மணிஜெகதீஸ்
கோ.புண்ணியவான்
செ.நவீன்
மோ.கவிதா
அநங்கம் இரண்டாவது இதழ் மீண்டும் மலர்ந்துள்ளது. அச்சு வடிவமைப்புலும் பக்க மேம்பாட்டிலும் மேலும் நிறையவே வலுவடைய வேண்டிய சூழலில் அநங்கம் இருந்தாலும், சிறு பத்திரிக்கை நடத்துவதில் அதிகமான இலாப நோக்கங்களைப் பெற இயலாத நிலையைச் சரிகட்ட அநங்கம் வழக்கம் போலவே சாதாரண அச்சு அமைப்பில் மலர்ந்துள்ளது. இருந்தபோதும் மலேசிய எழுத்தாளர்களும் சிங்கப்பூர் எழுத்தாளர்களும் தங்கள் படைப்புகளைக் கொடுத்து ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். அவர்களின் படைப்புகள் நமது அநங்கம் சிற்றிதழின் நோக்கத்தை நிறைவாக்கும் என்கிற நம்பிக்கையும் எங்களுக்குண்டு.
அநங்கம் இதழின் நோக்கங்கள் குறித்து கொஞ்சம் விளக்கமாக வாசகர்களுக்குத் தெரிவிப்பதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அநங்கம் இதழ் மலேசிய தீவிர எழுத்தாளர்களையும், விமர்சகர்களையும், வாசகர்களையும் இணைப்பதோடு, மேலும் வெளிநாட்டுப் படைப்பாளர்களையும் நம்மோடு இணைத்துக் கொண்டு நல்ல இலக்கியப் படைப்புகளை வாசகர்களிடம் கொண்டு செல்வதே ஆகும். தொடர்ந்து வளரும் இளம் படைப்பாளர்களையும் நாட்டின் மூத்த எழுத்தாளர்களையும் படைப்புலகத்தில் இணைக்க வேண்டும் என்பதே இதழின் பிரதான நோக்கமும்கூட.
அந்த வகையில் அநங்கம் இதழ் தொடர்ந்து குறிபிட்ட கால வரையறை இல்லாமல் வெளிவந்து கொண்டே இருக்கும். வாசகர்கள்-எழுத்தாளர்களின் ஆதரவில் அநங்கம் இதழ் தனிச் சுற்றுக்கும் மட்டுமே. எந்த வியாபார நோக்கத்திற்காகவும் இலாபத்திற்காகவும் வெளியீடப்படவில்லை என்பதை அன்பான வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் அநங்கம் இதழ் எந்தக் கடைகளிலும் விற்பனைக்குத் தரப்படாது. நண்பர்கள் வட்டம் மூலமே அநங்கம் இதழ் கொண்டு செல்லப்படும்.
தொடர்புக்கு:
கே.பாலமுருகன், இதழாசிரியர், bala_barathi@hotmail.com

நன்றி : திண்ணை (www.thinnai.com)

No comments: